கௌரிபாலா மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதத்தை (Rt.Hons.James.Ramsbotham) கதிர்காமத்தில் சந்தித்தார்.
இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் இவர் சைவசமயம், பௌத்தமயம் ஆகியவுற்றைப் பற்றிக் கற்கத் தொடங்கினார். உண்மையை அறிவதற்கு முன்னோக்கிச் செல்லும் சரியான வழியை நோக்கித் தான் செல்லவில்லை என்று உணர்ந்த அவர் தனது நாடான ஜேர்மனிக்கு திரும்ப முடிவு செய்தார்.
இலங்கையை விட்டுச் செல்லுவதற்கு முன்பு சில புத்தகங்களை வாங்கி அவற்றை ஜேர்மனிக்கு எடுத்துச் செல்லுவதற்காக ஸ்ரீலங்கா புத்தகசாலையில் நின்ற பொழுது அவர் ஒரு வெள்ளை முடியும் வெள்ளைத் தாயும் கொண்ட ஒரு உருவம் புத்தகசாலையிலுள்ள ஜன்னலில் தோன்றியதைக் கண்டார். அந்த உருவம் இவரைப் பார்த்து சத்தமாக “அது புத்தகங்களில் இல்லை” என்று கூறிவிட்டு மறைந்துவிட்டது. கௌரிபாலா உடனடியாக ஜன்னல் ஓரம் சென்று பார்ந்த பொழுது அந்த உருவம் இருந்ததற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தெரியவில்லை. அதன் பின்னர் கெளரிபாலா அந்த உருவம் யார் என்பதைத் தேடத் தொடங்கினார் இறுதியில் அவரைக் கண்டும் கொண்டார். அதன் பின்னர் அவர் இலங்கையை விட்டு செல்லவில்லை .


1963ஆம் ஆண்டு செல்லம் புகைப்படப் பிடிப்பாளரை திருமகளின் பூப்புனித நீராட்டுச் சடங்குகளுக்காக அழைத்த போது ஆசை ஐயா அப்புவை நேர்த்தியான முறையில் என்னை தயார்ப்படுத்த செய்ய வைத்தார்.அப்போது எடுத்த படம் இது.
சீராக உடையணிவித்து அவருடைய முடியையும், தாடியையும் படியப்பண்ணி அவருக்கு வழமையாகப் போடும் திரவியங்களை இட்டு அப்புவை தயார் செய்தேன். அப்புவுடைய மகாசமாதி 23-03-1854 அன்று அதி 3:17 மணிக்கு நடந்தது. அப்பு வருடாந்தமாக அனுசரிக்கும் திருவடிப் பூசை நாள்- பங்குனி இரண்டாம் திங்கள். நட்சத்திரம் ஆயிலியம்.
அப்புவுடைய அடியார்கள் நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் வந்தார்கள், கல்லூரி மாணவர்களும் வந்தார்கள். அனைவரும் வந்து தங்களுடைய இறுதி மரியாதைகளைச் செலுத்தினார்கள். அப்புவுடைய இறுதிப் பயணத்திற்காக வந்தவர்கள் அனைவரும் நஞ்சிந்தனைப் பாடல்களையும் திருமுறைகளையும் ஓதியபடி இருந்தார்கள்.
25-03-1964 புதன்கிழமை அன்று அப்புவுடைய புனித உடல் புராதன கிரிகைகள் சடங்குகள் முறைப்படி அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளை ஆடை தரித்து பலவகை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
உடலைத் தாங்கிய நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தப் புனிதமான பெட்டி கொழும்புத்துறை வீதியினூடாக துண்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்புவுடைய ஆசிரமம் இருந்த இடத்திலிருந்து துண்டி மயானம் வரை கொழும்புத்துறை வீதி மற்றும் துண்டிமயான வீதிகள் பூ மாலைகளாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாரம்பரியமான 5 திரிகள் கொண்ட குத்து விளக்குகள், நிறைகுடங்கள் ஒவ்வொருவருடைய வீடுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டு அப்புவுடைய புனித உடல் வைக்கப்பட்ட அந்த புனிதமான பெட்டி அருகில் வரும் பொழுதெல்லாம் வழிபாடு செலுத்தப்பட்டு மலர்கள் தூவப்பட்டு தங்களுடைய அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினர்.


துண்டி மயானத்தில் நடைபெற்ற அப்புவுடைய இறுதிச் சடங்கில் ஆண்களும் பெண்களும் தனித்தனியான கூட்டங்களாக நின்று பங்குபெறக் கூடியதாக இருந்தது. சிறுவர்வளும் தங்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து நின்றார்கள்.
அப்புவுடைய புனித உடல் சந்தனக்கட்டைகளின் மேல் வைக்கப்பட்டது. மயானத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது அப்புவுடைய நற்சிந்தணையிலுள்ள ஒரு பாடலின் வரிகள் இதற்குப் பொருத்தமாக இருந்தது. “மண் போட்டால் மண் விழாதே கிளியே மனிதர் எல்லாம் கூடிக்கொண்டார்.””
கொக்குவில் குமாரசுவாமிப் புலவரால் திருவாசகம் ஓதப்பட்ட பின்னர் திரு திருநாவுக்கரசு (ஆசை ஐயா) தலைமையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று இறுதித் தகனத்திற்கான தீ மூட்டப்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் அரோகரா! என்று குரல் எழுப்பி பிரார்த்தனை செய்தார்கள். அந்தத் தீயானது மிகவும் பிரகாசமாக எரித்தது. இந்த இறுதிச் சடங்கில் சைவவர்கள், பௌத்தவர்கள் இஸ்லாமியவர்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபற்றினர்.
164 முதல் YTD வரை
அப்புவுடைய புனித அஸ்தி மூன்று குடங்களில் சேர்க்கப்பட்டு கொழும்புத்துறை ஆசிரமத்திலும் சிவ தொண்டன் நிலையத்திலும் வைக்கப்பட்டன. அப்புவின் வழிகாட்டுதலின்படி மூன்று குட அஸ்தியையும் ஒன்றாக்கி, பழனியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித திருநீற்றுடன் சேர்க்கப்பட்டு கொழும்புத்துறை ஆசிரமத்துள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தச் சடங்கு 09-09-1964 அன்று நடைபெற்றது.
சடங்கு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அப்பு தனது அடியார் ஒருவது னவில் தோன்றி அவரிடம் இந்தியாவிலுள்ள பழனி என்ற பிரசித்தி வாய்ந்த இடத்திலிருந்து புனித திருநீற்றுப் பைகளைப் பெற்றுக் கொள்ளும்படி அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.சில முத்த அரசு அதிகாரிகளின் உதவியுடன் தேவையான அளவு புனித திருநீற்றுப் பைகளை சரியான நேரத்திற்கு அங்கிருந்து கொண்டுவரக் கூடியதாக இருந்தது.
திரு. S.R.கந்தையா அவர்கள் குடிசையை சமாதிகோவிலாக மாற்றப்படுவதற்குத் தேவையான பொருளாதார உதவியைச் செய்தார். அப்பு அநேகமாக திரு. S.R.கந்தையாவுடைய அரியாலைத் தென்னந்தோப்பில் சிவராத்திரி மற்றும் புரான ஓதுதல்களைச் செய்து வழிபட்டு வந்தார். அப்பு அவரது வழமையான தரிசனம் முடிந்து கொழும்புத்துறை குடிசையைவிட்டு வெளியேற திரு. S.R.கந்தையா தேவையான வேலை ஆட்களுடன் அப்புவுடைய குடிசைக்கு வந்து துரிதமாக அந்த ஓலைக் கூரையை புதிய ஓலைகளைக் கொண்டு வேய்ந்துவிட்டு அப்பு திரும்புவதற்கு முன்னர் சென்று விடுவார்.
ஸ்ரீவிஜயானந்த சர்மா (ஐயா). ஆசைஐயா, சின்னண்ணை (சம்பந்தன்). எனது இணைய சகோதார் சிவயோகன், நான் (ஈஸ்வரன்) எல்லோருமாக சமாதிகோவிலுக்குத் தினமும் பூசைகள் செய்து வந்தோம்!
மகாசமாதியடைந்த பின்னர் அப்பு என் கனவில் தோன்றும் பொதெல்லாம் ம ஆசை ஐயா (திரு. திருநாவுக்கரசு) வுடைய காணியிலுள்ள அப்புவுடைய கொழும்புத்துறை ஆசிரமத்தில் தான் எப்பொழுதும் தோன்றுவார்.
ஸ்ரீ விஜயானந்த சர்மா (ஐயா செங்கலடியிலுள்ள சிலதொண்டன் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நிலையத்திற்கான முதல் அத்தியார் அடிக்கல் அப்புவுடைய மகாசமாதிக்கு (1964 க்கு) முன்னர் வைக்கப்பட்டது. 1965இல் கட்டிடம் கட்டி முடித்த பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து 13-03-1965இல் சந்தசுவாமிகளால், திருவடி கொண்டு செல்யப்பட்டு 14-03-1966 அன்று சிவதொண்டன் நிலையத்திற்குள் வைத்து பிரதிட்டை செய்யப்பட்டது.






