செங்கலடி சிவதொண்டனும் சந்தசுவாமியும் பாகம் – 1

 

படம் 11: செங்கலடியிலுள்ள சிவதொண்டன் நிலையம் – 1965ஆம் ஆண்டு

இக் காலகட்டத்தில், ஒரு நாள் எனக்குச் செங்கலடி சிவதொண்டன் நிலையத்திலுள்ள சந்தசுவாமிகளைச் சென்று பார்க்க கோண்டும் என்ற ஆவல் வந்தது. நான் செங்கலடியை அடைந்ததும் ஐயா ஸ்ரீ. (விஜயநாதன் சர் என்னிடம் வந்து சந்தசுவாமிகள் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

நான் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தேன் நான் மருத்துவமனையில் அவருடன் நின்ற பொழுது பல இடங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் ஒன்று திரு K. சச்சிதானந்தா அவர்கள் கொழும்பில் இருந்து தொலைபேசியில் அழைத்திருந்தார். அவர் சுவாமிகளுடன் கதைக்கும் பொழுது சுவாமிகளுக்கு மருத்துவமனையில் ஏதாவது உதவிகள்/உதவியாளர்கள் தேவைப்படுகின்றதா?  என்று கேட்டதற்கு சுவாமி “சுவாமி (அப்பு) என்னிடம் ஈஸ்வரனை அனுப்பியுள்ளார். எனக்கு ஒன்றும் தேவையில்லை” என்று பதிலளித்தார். நான் சந்ததவாமிகளுடன் மருத்துவமனையில் தங்கிவிட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பினேன். நான் சுவாமிகளுக்கு மருத்துவமனையிலிருந்து எல்லாப் பணிகளையும் செய்வதற்காக திருமதி குமாரசாமி (ச.கு.அம்மா) எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.

பல முயற்சிகளுக்குப் பிறகு எனக்கு இலங்கைக் கடற்படை சீருடைச் சேவையில் சேருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நான் துணை லெப்டினன்டாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

ரோயல் நேவியில் சேர்வதற்கு முன்பு வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்காகவும் நேவி சீருடைக்கான அளவீடுகளைக் கொடுப்பதற்காகவும் தயார் செய்யும் பொழுது நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி இனிக் கிடையாது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது.

அப்புவுடைய கருணையால் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது இங்கிலாந்தில் என்னைப் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர வழிவரகுத்தது, எனது அண்ணர் என்னை லண்டனில் வரவேற்று எனது கல்வியை இங்கிலாந்தில் தொடர்வதற்குத் தேவையான வழிகாட்டினார்.

நான் இங்கிலாந்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததைப் பற்றி சந்தகவாமிகளுக்கு கடிதம் எழுதிய பொழுது அவர் எனக்கு அனுப்பிய பதில் வருமாறு

சிவதொண்டன் நிலையம்
செங்கலடி
EP
இலங்கை

அன்புள்ள ஈஸ்வரன்,

12-09-1969

உங்களது கடிதத்திற்கு மிக்க நன்றி

நீங்கள் பாதுகாப்பாக இங்கிலாந்திற்கு சென்றுவிட்டீரகள் என்பதையும், நீங்கள் ஏற்கனவே தங்கும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதையும் எல்லாம் நன்றாக இருக்கின்றது என்பதையும் அறிந்து.. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

நீங்கள் இங்கிலாந்திற்கு சென்றது ஒரு திட்டவட்டமான பணிக்காக என்பதை நீங்கள் உணர்வதாக என்று எழுதியதை வாசிக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது உண்மையில் சரியானது. உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, அது என்னவென்றால் நீங்கள் தொடர்பு கொள்ளுபவர்களுக்கு சிவதொண்டு என்றால் என்ன என்பதையும் உண்மையான சிவதொண்டன் என்பவன் எப்படியானவன் என்பதையும் அனைவருக்கும் காட்ட வேண்டும். மேலும் நீங்களும் அவற்றைப் பின்பற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும் வார்த்தைகளாலும் வாதங்களாலும் அல்ல, சுவாமியைப் பற்றிப் பேசுவதாலும் அல்ல (நிச்சயமாக அப்படி செய்வது சரியென தோன்றும் பொழுது உங்களால் முடியும்). ஆனால் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களிடம் மட்டுமே, அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள்) நீங்கள் ஒரு திட்டவட்டமான பணியில் இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் தொடர்ந்து வைத்திருத்தால். எல்லாம் சிறந்த முறையில் நடக்கும். மேலும் சுவாமி உங்களை ஒவ்வொரு திருப்பத்திலும் கவனிப்பார் . அவ்வப்பொழுது நிச்சயமாக நீங்கள் சிரமங்களை சந்திப்பீர்கள் ஆனால் சுவாமி ஒரு முறை கூறினார் ‘ஒரு மனிதனின் பாதையில் சிரமங்கள் வரவேண்டும். அவைகள் எல்லாம் ஆசீர்வாதங்கள்” பயப்பட  ஒன்றுமில்லை. உங்களை மட்டும் நம்புங்கள் மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் அல்லது என்ன நினைக்கின்றார்கள் என்று கவலைப்படாதீர்கள் சுவாமி உங்களை வழிநடத்துவார்.

நீங்கள் எப்பொழுதெல்லாம் எங்களுக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்களோ , அப்பொழுதெல்லாம். எழுதுங்கள். நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் மேலும் நாங்கள் இங்கிருந்து ஏதாவது  உதவி செய்யக்கூடியதாக இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

எல்லாம் எரி.
தொண்டன்.
சந்தசுவாமி.

P.S.உடற்பயிற்சியைப் பொறுத்தவரை நீண்ட நேரம் நடப்பது சிறந்த விஷயம். ஆனால் அதற்கு உங்களுக்குப் போதுமான நேரம் இருக்காது. முன்பு நாங்கள் அருகிலுள்ள உற்பயிற்சி செய்யும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி நாங்கள் பேசினோம். உடற்பயிற்சி மிகவும் கடினமானதாக இல்லாவிட்டால் நல்லது. கடினமாக இருந்தால் அது பிற்காலத்தில் மோசமானவிளைவை ஏற்படுத்தும். அதிகாலையில் அரை மணி நேரம் ஓடுவது மிகவும் நல்லது . அதற்கு உங்களுக்கு ஒரு சோடி ஷார்ட்ஸ் மற்றும் ஒரு ஸ்வெட்டர் தேவைப்படும் ஆனால் இதற்கும் மற்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் நீங்கள் எளிதாகத் தீர்வு காண்பீர்கள்.

மகளிர் தியான மண்டபம் ஒன்றைக் கொழும்புத்துறையில் ஆரம்பித்து வைத்ததைப் பற்றிய விபரத்தைக் குறிப்பிட்டு சந்தசுவாமிகள் எனக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு

செங்கலடி
08-06-1970

அன்புள்ள ஈல்வரன்,

உங்களது கடிதத்திற்கு மிக்க நன்றி.

உங்களுக்கு எல்லாம் நன்றாக நடக்கின்றது என்பதையறிந்து எனக்கு மிகவும் சந்தோஷம்.  ஸ்மித்தின் மீட்டஸ்ஸுடன் (Smith’s Meters) எவ்வளவு காலம் இருப்பீர்கள்?

கடவுளின் விருப்பப்படி நாங்கள் பெண்களுக்காக மகளிர் தியானமண்டபம் ஒன்றை புங்கங்குளம் வீதியில் (விரைவாக) ஆரம்பிக்க எண்ணுகின்றோம். மற்றும் இதற்குரிய வேலைகள் எல்லாம் 10ஆம் திகதி ஆனி உத்திரம் அன்று ஆரம்பித்துவிடும்.

தற்பொழுது செல்லத்துரை மாஸ்டர் இந்தியாவில் இருக்கிறார். ஆனால். அவர் இம் மாத இறுதிக்குள் திரும்புவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது.

இங்கு எல்லாம் நன்றாக இருக்கின்றன.
அனைத்து நல்வாழ்த்துக்களுடன்
தொண்டன் சந்தசுவாமி

நான் எப்பொழுதும் இலங்கைக்கு திரும்பவே விரும்பினேன். இந்த எண்ணம் என்னைப் பட்டப் படிப்புகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்துவதும் மாவட்ட அளவிலான செம்பியனாக வரவும் முழு அளவிலான பட்டயப் பொறியியலாளராக ஆவதற்கும் என்னை திடப்படுத்தியது. நாள் ஒரு நாள் கூட பல்கலைக்கழக விரிவரை வகுப்புக்களையும் உடற்பயிற்சிக்கான பயிற்சி வகுப்புக்களையும் தவறவிடாமல் இந்தக் குறிக்கோளை நிறைவு செய்தேன்.

எனக்குப் பயிற்சியும் பொறியியலும் (Heavy Industry) மிக கனமான பொறியியல் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இந் நிறுவனம லிவர்பூல் (Liverpool) மற்றும் டில்பரி துறைமுவங்களுக்கான (Tilbury Harbours) கப்பல் பழுதுபார்க்கும் துறை ( 300 – 400 தொன்கள் – Tonnes) லண்டன் நிலத்தடி ரயில்வே சுரங்கங்களுக்கான (London underground railway tunnels) வார்ப்பு இரும்பு வளையங்களும் (grey cast iron segments), தெற்கு அமெரிக்காவிலுள்ள சான்பாலோ ஸ்டீய்வொர்க்ஸிற் (South America, San Paulo Steelworks) கான அழுத்த பாத்திரம் (Pressure Vessels) தயாரித்து வந்தது. இவைகளை உற்பத்தியாக்கி பயன்படுத்த 18-24 மாதங்கள் தேவைப்படும்.

இந்நிறுவனத்தின் பெயர் “ஹெட் ரைட்டன்ஸ்” (“Head Wrightson”) இது வடக்கு இங்கிலாந்தில் உள்ளது. இதன் உரிமையாளர் Sir.ஜோன் ரைட்டன்ஸ் (Sir.John Wrightson) அவர்கள் சந்தசுவாமிகளின் குடும்ப நண்பர்.

நான் எனது முதல் தொழில்துறை பயிற்சியை (Head Wrightson) ஹெட் ரைட்டன்ஸில் ஆரம்பித்தவுடன் எனக்கு சந்தசுவாமிகளிடம் இருந்து வந்த கடிதம் பின்வருமாறு

செங்கலடி
13-07-1971

அன்புள்ள ஈஸ்வரன்,

உங்களது கடிதத்திற்கு மிக்க நன்றி.

நீங்கள் உறுதியாக உங்களது தொழில்துறைப் பயிற்சியை ஹெட் ரைட்டன்ஸ் (Head Wrightson & Co)என்ற நிறுவனத்தில் ஆரம்பித்துவிட்டரை கூறியும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. உங்களுக்கு தேவையான பயிற்சியை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அவர்கள் முக்கியமாக ஈடுபட்டுள்ள பொறியியல் வகை உங்கள் நோக்கத்திற்கு மிகவும் கடினமான

இயல்புடையதாக இருக்கம் என்று நான் யோசித்திருந்தேன். உங்களுக்கு அது திருப்தியென்றால் அவர்கள் உங்களுக்குத் தேவையானற்றை வழங்குவார்கள். உங்கள் பயிற்சிகள் அனைத்தும் அங்கு வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வது நிச்சயமாக ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். இதைப்பற்றி உறுதிசெய்ய சிறிது காலம் காத்திருப்பது நல்லது. பிறகு நீங்கள் பயிற்சி அதிகாரியை அணுகித் தை மாதத்தில் ஹெட் ரைட்டன்ஸ் (Hand Wrightson &Co)உங்கள்  பயிற்சியைத் தொடரலாம் என்பதை உறுதிப்படுத்தும்படி அவரிடம் கேட்கலாம். அப்பொழுது அவர்களுக்கும் திருப்தியடைய தேவையான நேரம் கிடைக்கும் உங்களுக்கு இனாம் கிடைக்கூடிய எல்லாவிதமான வாய்ப்புக்களையும் பயன்படுத்த ஒரு தகுதியான பயிற்சியை பெறலாம். அவர்களுக்கும் உங்களை நன்கு பரீட்சயமான பின்னரும் உங்களுக்கும் அவர்களை நன்கு பரீட்சயமான பின்னரும் அதிக சிரமங்கள் இருக்காது என்பதை நீங்கள் உணரக்கூடியதாக இருக்கும் ஆனால் அதற்கு முதல் நீங்கள் அங்கு உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சி உங்களுக்குப் பொருத்தமானதா? என்பதை மிக விரைவாக உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் தங்கும் இடம் திருப்திகரமானதாக உள்ளதா? நீங்கள் அங்கு (YMCA) தொடர்ந்து தங்கமுடியுமா?

ஆம் நீங்ளை நினைப்பது சரி இங்கிலாந்திலுள்ள அனைத்து மக்களையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது தெற்கு இங்கிலாந்திலுள்ளவர்களைவிட வடக்கு இங்கிலாந்திலுள்ளவர்கள் நட்புள்ளவர்களாகவும் விருந்தோம்பலில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் நாட்டின் மற்றொரு பகுதியைப் பார்ப்பது நல்லது மற்றும் நீங்கள் பொறியியல் அனுபவங்களைப் பெறுவதோடு மகிழ்ச்சியான நேரத்தையும் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அங்கு இப்போது நல்ல கோடை காலம் நிகழ்வது குறித்து நான்மகிழ்ச்சியடைகின்றேன்.

உங்களுக்கு அருகில் St.அல்பான்ஸ் (St.Albans) என்ற இடத்தில் உங்கள் சகோதரருக்கும் உத்தியோகம் கிடைத்தால் மிகவும் நல்லது. நான் அவர் வெற்றியடைவார் என்று எதிர்பார்க்கிறேன்.

செல்லத்துரை மாஸ் டர் இன்னமும் இந்தியாவிலிருந்து திரும்பவில்லை’ எனக்கு தெரிந்தவரை இல்லை.

இங்கு எல்லாம் நன்றாக இருக்கின்றன. மழை குறுக்கிடாவிட்டால் நாங்கள் அறுவடையை தொடங்கவுள்ளோம்.

எல்லாம் சரி
தொண்டன் சந்தசுவாமி

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் ஆனால் தர்மத்தின் பாதையிலிருந்து விலகாதீர்கள்.

நான் எனது முதல் வருட பொறியியல் பட்டதாரி பயிற்சியை ஹெட்  ரைட்டன்ஸ் பொறியியல் நிறுவனத்தில் (Head Wrightson Engineering Company) ஆரம்பித்த பின்னர் Sir.ஜோன் ரைட்டன்ஸ் (Sir.John Wrightson) என்னை ஒரு திங்கள்கிழமை சந்திப்பதற்கு அழைத்தார். நான் இந்தச் சந்திப்பைப் பற்றி பலவிதமாக சிந்தித்துக்கொண்டு எனது தங்கும் இடத்தில் (YMCA – Stocken-on-Tees) இருந்த போது நான் வெறுங்கையுடன் அவரிடம் செல்ல மனம் கேட்கவில்லை.

என் மூளைக்கு எட்டவில்லைஆனால் என் மனம், இங்கு இருக்கும் மக்கள் வழமையாக கொடுகும் (Candi) அட்டைகள் அல்லது பரிசுப் பெட்டிகள் போல் அல்லாது வேறு ஏதாவது வித்தியாசமாகக் கொடுக்க வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்று தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வந்த எனது நண்பன் என்னைப் பார்ப்பதற்காக நான் தங்கியிருந்த இடத்திற்கு (YMCA)வந்து இலங்கையிலிருந்து கொண்டு வந்த ஒரு தேயிலைப் பெட்டியை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தப் பெட்டியை நான் முன்பு பார்த்ததில்லை. காரணம் இச் சிறப்பு வாய்ந்த தேயிலை ஏற்றுமதி சந்தைக்குச் மட்டுமென்றே இலங்கையில் இதை உற்பத்தி செய்கிறார்கள்.

அந்தத் தேயிலைப் பெட்டியைப் பார்க்கும் பொழுது எனக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை ஜோன் ரைட்சன் (Sir.John Wrightson)அவர்களைச் சந்திச் செல்லும்பொழுது இங் தான் அவருக்குக் கொடுப்பதற்குச் சிறந்த பரிசாக இருக்குமென்று என் மனதில் மிகத் தெளிவாகத் தோன்றியது.

Sir.ஜோன் ரைட்சனுக்கு (Sir.John Wrightson) தேயிலைப் பெட்டியை கொடுத்தேன். அவர் அதைத் திறந்து பார்த்த பொழுது அவர் என்னிடம் இவ் வகைத் தேயிலையை மட்டும் தான் தானும் தனது மனைவியும் விரும்பிக் குடிப்பார்கள் என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் நான் இச் சம்பவத்தை சந்தசுவாமிகளுக்கு கடிதத்தில் எழுதினேன். இதற்கு அவருடைய பதில் கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு :

“சுவாமி (அப்பு) எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து தருவார். அத்துடன் நாங்கள் திறந்த மனத்தோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்தால் அவர் எங்களைப் படிப்படியாக வழி நடத்துவார். தேயிலைப் பெட்டியை பரிசாகக் கொடுப்பதற்கு நினைத்த உங்களுடைய அன்பான எண்ணம் அதன் ஒரு வடிவமாகும். அச் சந்தர்ப்பத்தில் அது தான் மிகவும் பொருந்தமானது.”

“உங்களுக்கு விரும்பியதை நீங்கள் செய்யுங்கள். ஆனால் தருமத்தின் பாதையில் இருந்து விலகாதீர்கள்”

எனது பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி வருட காலகட்டத்தில் நான் எனது இறுதியாண்டு ஆய்வறிக்கையைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் இருந்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பல்கலைக்கழகத்தின் தொழில்களைப்பற்றிய ஆலோசனைகளை வழங்கும் அதிகாரி என்னிடம் வந்து பிரிட்டிஷ் லேலண்டில் (British Leyland) உத்தியோக வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளேனா? என்று கேட்டார் நான் அதற்கு “இல்லை” என்று கூறியதுடன் “அவர்கள் தானா பஸ் மற்றும் லாரி ஆகியவற்றை உருவாக்குபவர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் பிரிட்டிஷ் லேலண்ட் (British Leyland) நான் ஐரோப்பாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளர்கள் என்று கூறினார்.

நான் அப்பொழுது கைக்கொண்ட பொறியியல் பயிற்சி கணமான (Havy Engineering) தன்மையுடையதாகவும் பிரிட்டிஷ் வேலண்ட்டில் (British Leyland) கொடுக்கப்படும் பயிற்சி வேகமான உற்பத்தி (Mass Production) அடிப்படையைச் சார்ந்த தன்மையைக் கொண்டது.

எனக்கு வேகமான உற்பத்தி அறிவு விளங்கும் தருனம் வந்துவிட்டது என்ற பூரணமான உடன் உணர்வு தோன்றியது. இந்த உணர்ச்சியுடன் நான் பிரிட்டிஷ் வேலண்ட் (British Leyland) தேர்வு செய்யும் பேட்டியைக் காண உடன்பட்டேன்,

இந்த உடன்பாட்டுக்கு மற்ற ஒரு காரணம், நான் 1972ஆம் ஆண்டு (IMECH E| Student Conference) வெளிநாட்டு பொறியியல் மாணவர் மகாநாட்டில், மகாநாட்டை தலைமை வகிந்த (Lord Stokes) லோர்ட் ஸ்டோக்ஸோடு உரையாடும் போது, அவர் எதிர் காலத்தில் பிரிட்டிஷ் லேலண்ட் (British Leyland!) ஸ்தாபனம் இலங்கையில் ஓர் மோட்டார் வாகனம் செய்யும் தொழிற்சாலையை ஆரம்பிக்க முற்படுவதாகவும், அவர் அந்த நாள் பிரமர் திருமதி. பண்டாரநாயக்காவுடன் தொடர்ந்து ஆலோசனை செய்வதாகவும் அறிவித்திருந்தார். இந்தப் பேச்சுவார்த்தை நிறைவேறினால் எனக்கு இலங்டை சென்று பிரிட்டிஷ் லேலண்ட்டில் (British Leyland)பணியாற்றும் வாய்ப்பும் எளிதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மனதில் உதித்தது.

பிரிட்டிஷ் லேலண்டில் பட்டதாரி தேர்வு செயன்முறையானது பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் நேர்காணலுடன் (one day interview) தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு (The Oxford Motel) விடுதியில் 2 நாட்கள் இரவும் பகலுமாக (two days interview day & night) பிரிட்டிஷ் லேலண்ட் (British Leyland) இன் மூத்த மேலாளர்களுடன் (Senior Managers)நேர்காணல் | நடந்தது.

நேர்காணம் (interview) நடந்து கொண்டிருந்த பொழுது எனக்கு சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் லோர்ட் ஸ்டோக்ஸ் (Lord Stokes) இடையில் நடந்த சந்திப்பைப் பற்றி கூற வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுது என்னை நேர்காணல்  நடத்திய பிரிட்டிஷ் லேலண்ட் (British Leyland) இன் தலைமை அதிகாரி (Personal Director) லோர்ட் ஸ்டோக்ஸை (Lord Stokes) சந்தித்ததே இல்லையென்றும் அவர் செய்யாத ஒன்றை நான் செய்துள்ளேன் என்றும் கூறினார்.

எனக்கு ஒரு பட்டதாரி பொறியியலாளராக (Graduate Engineer) உற்பத்தி மத்திய பணியாளர்களுடன் (central staff) ஆக்ஸ்போர்டு (Oxford)என்ற இடத்தில் உத்தியோகம் கிடைத்தது.

அன்று நான் பிரிட்டிஷ் லேலண்டில்(British Leyland) எடுத்த உத்தியோகம் படிப்படியாக உயர்வடைந்து செயல்பாட்டு இயக்குநராக ஜாகுவார் லேலண்ட் ரோவர்/புதிய மாடல் புரோகிராம்/புரோட்டோடைப் செயல்பாடுநர் (Operation Director of Jaguar Land Rover/new model programme/ prototype operatios) பதவியடைந்து ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்குப் பிறகு நாள் ஓய்வுபெற்றேன்.

நான் லோர்ட் ஸ்டோக்ஸ் (Lord Stokes) சிறகும் எனக்கும் நடந்த சந்திப்பைப் பற்றி சந்தகவாமிகளுக்கு எழுதிய பொழுது அவர் எனக்கு எழுதிய பதில் கடிதம் பின்வருமாறு:

செங்கலடி
16-04-1973

அன்புள்ள ஈஸ்வரன்,

உங்களுடைய கடிதத்திற்கு மிக்க நன்றி!

இந்த உலகில் கனவு காண்பதைவிட அதிகமான விஷயங்கள் பிரார்த்தனனகள் செய்வதன் மூலம் நடக்கின்றன என்ற உங்கள் முடிவு 100% சரியானது ஒரு முறை சுவாமி (அப்பு) என்னிடம் கூறியது “நான் எல்லோருடைய வேலைக்காரன் ஆனால் நான் அதை வெளிக்காட்டுவதில்லை” அத்துடன் அப்பு எங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வார் அல்லது அதற்கு மேலாகவும் செய்வார் . ஆனால் எது எங்களுக்குத் தேவையாக இருந்தாலும் அது எங்களுக்குக் கூடாது என்றால் அதை அவர் செய்ய மாட்டார். அவருக்கு எது எங்களுக்கு நல்லது என்பது தெரியும், ஆனால் அது எங்களுக்குத் தெரியாது எங்கள் கடமை முழு நம்பிக்கையும் பொறுமையும் தான். இதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. உங்களுக்கும் லோர்ட் ஸ்டோக்கும் இடையில் நடந்த சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் என்றும் இது நாம் முன் கூறியதற்கு ஒரு முழுமையான ஆதாரம் “இதற்கு மேல் வேறு ஆதாரம் தேவையா?” சங்கராச்சாரியார் கூறியது: “யார் ஒருவனுக்கு உன்போன் பாதுகாப்பும் பராமரிப்பும் ஒரு மாமுனிவரிடம் இருந்து கிடைக்கிறதோ அவன் உண்மையில் ஒரு பாக்கியவான் ஆவான்” கிடைக்கப் பெற்ற ஆசீர்வாதத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைப்பற்றி விளக்கம் இல்லாதவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

எல்லாம் சரி
எப்பொழுதும் போல் உம்முடைய
சந்தசுவாமி

ஆக்ஸ்போர்ட் (Oxford) இலுள்ள  (Cowdy) என்ற இடத்திலுள்ள பிரிவு தொழிலாளராக (Divisional Staff) நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் எனக்கு எல்லா இடங்களிலும் உள்ள 38+ உற்பத்தி ஆலைகளுக்குச் சென்று பார்வையிட செயல்படுத்தியது (சிறிய கார் பிரிவு/ Mini, நடுத்தரக் கார் பிரிவு/ Austin,Triumph மற்றும் பெரிய கார் பிரிவு, Jaguar Land Rover  மற்றும் Rover and Leyland Truck oற்றும் Bus Subdivision) அத்துடன் UK இல் உள்ள அனைத்து  Car automotive lines களுடனும் சேர்ந்து வேலை செய்யவும்  வழிவகுந்தது.

எனது பட்டப் படிப்பு முடிவுகள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பிரிட்டிஷ் லேலண்ட்(British Leyland)டில் எனது முதல் உத்தியோகம் கிடைத்தது.

நான் சந்தசுவாமிகளுக்கு எனக்கு பிரிட்டிஷ் லேலண்ட்(British Leyland)டில் உத்தியோகம் கிடைத்ததை எழுதினேன் அதற்கு அவர் அனுப்பிய பதில் கடிதம் பின்வருமாறு:

செங்கலடி
15-04-1974

என் அன்புள்ள ஈஸ்வரன்,

இன்று காலையில் உங்களது கடிதம் கிடைத்தது- மிக்க நன்றி.

நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான உத்தியோகத்தை பிரிட்டிஷ் லேலண்ட்(British Leyland) இல் எடுத்துவிட்டதை அறியும் பொழுது நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் அது ஒரு முதல் தர நிறுவனம் மற்றும் இலங்கையுடன் நெருங்கிய மற்றும் நீண்ட கால தொடர்புகளை அவர்கள் இலங்கைக்கு C.T.B பஸ்களை விநியோகிப்பதிலிருந்து கொண்டுள்ளனர். உங்களுக்கு இந்த நிறுவனத்தைவிட மேலான நிறுவனத்தை நினைக்கமுடியாது. இது எல்லாம் சுவாமியினுடைய (அப்புவினது) வேலை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் Sir.ஜோன் ரைட்சனுக்கு (Sir.John Wrightson) உங்களுக்கு ஒரு பொருத்தமான உத்தியோகத்தை எடுப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் எனது கடிதத்திற்கு அவடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை நான் நினைக்கிறேன் எனது கடிதம் வழிதவறிப் போயிருக்கலாம் என்று, காரணம் சுவாமி(அப்பு) இதைவிட மிகவும் சிறந்த இடத்தை உங்களுக்குக் கொடுக்கத் தீர்மானித்துவிட்டார்.

அத்துடன் Oxford என்ற இடம் வாழ்வதற்கு மிகவும் சிறந்த இடம். மற்றும் உங்களுடைய ஓய்வு நேரங்களில் மேலதிகக் கல்வியைத் தொடர அதிக வாய்ப்புகள் அங்கு இருக்கின்றன. (ஓய்வு நேரம் இருந்தால் மட்டுமே)

மிகவும் தீவிர போட்டிகளுக்கு நடுவில் நீங்கள் இந்த உத்தியோகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டது உங்களுக்கு ஒரு பெரிய பெருமை நன்றாக செய்துள்ளீர்கள்.

அவர்கள் உங்களுக்கு நீங்கள் அவர்களுடன் இருக்கும் பொழுது நல்ல சம்பளம் தருவார்கள் என்றுநான் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுது உங்களுடைய உத்தியோகத்தை ஆரம்பிக்கவுள்ளீர்கள்? மற்றும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு வருடங்கள் இந்த உத்தியோகத்தைத் தந்துள்ளார்கள்?

இங்கு எல்லாம் நன்றாக இருக்கின்றன. நாங்கள் இங்கு புது வருடத்திற்கு முன்பாக எல்லா விதைப்புகளையும் முடித்துவிட்டோம். இப்பொழுது எங்களுக்குப் போதுமான அளவிற்கு கதிரடித்தல் வேலைகள் உண்டு.ஆறுகளில் இருந்தும் காய்வாய்களில் இருந்தும் தண்ணீர் கிடைக்கும் வரைக்கும் எங்களது பயிர்கள் நன்றாக இருந்தன. ஆனால் நாங்கள் எல்லாப் பயிர்களையும் முற்றாக
கதிரடிப்பு செய்யும் வரை விளைச்சலைப் பற்றிய முடிவைச் சொல்லமுடியாது மழையை நம்பிய உணவுப் பயிர்கள் முழுமையான நட்டம்.

எல்லாம் சரி
தொண்டன் சந்தசுவாமி

எனது பட்டப்படிப்பின் முடிகள் கிடைத்தவுடன் நான் சந்தசுவாமிகளுக்கு எழுதிய பொழுது அவர்  எனக்கு எழுதிய பதில் கடிதம் பின்வருமாறு:

செங்கலடி
EP
இலங்கை

எனது அன்புள்ள ஈஸ்வரன்,

நீங்கள் உங்களது இறுதிப் பரீட்சையை மிகவும் நன்றாக செய்துள்ளதை அறியும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மற்றும் உற்பத்திப்பிரிவில் நீங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள். எனக்கு விளங்கிய அளவில் நீங்கள் இப் பொறியியல் பிரிவில்தான் நீங்கள் சிறப்படைய விரும்புகிறீர்கள் என்று.

இப்பொழுது உங்களுடைய இரண்டாவது அத்தியாயம் தொடங்குகிறது மற்றும் நீங்கள் சுவாமிகளுடைய ஆசீர்வாதத்தோடு அதிலும் சரிசமனாக வெற்றியடைவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

சுவாமி எந்தநேரமும் ஒழுக்கத்தோடு இருப்பதற்கு அழுத்தம் கொடுப்பார். அவர் சொல்வது எல்லாம் அதில் தான் தங்கியிருக்கின்றது. அதன் விளக்கத்தை முயற்சி செய்து சிந்தித்துக் கோட்பாட்டளவிலும் நடைமுறையளவிலும் பார்த்து ஒவ்வொரு தருணத்திலும் நினைவு கூர்ந்தால் ஒன்றும் பிழை போகாது, எல்லாம் உமக்கு வெற்றிகரமாக நடைபெறும் ஆனால் எல்லாம் சுகமாகச் செல்லும் என்று தீர்மானித்துவிடக்கூடாது. சிரமங்கள் ஏற்படலாம் ஆனால் அவைகள் கடவுளின் ஆசீர்வாதங்கள் என்று சுவாமி கூறினார்.

உங்களால் Oxford நிறுவனத்தினால் வழங்கப்படும் தங்கும் இடத்தை கண்டுபிடிக்கமுடியும் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்குக் கிடைக்கப்படும் பொறியியல் பயிற்சிகளுக்கு அங்கு இருப்பதன் மூலம் நீங்கள் கூடுதலான லாபம் பெறலாம்.

அனைத்து நல் வாழ்த்துகளுடன்
எல்லாம் சரி
தொண்டன். சந்தசுவாமி

P.S   உங்களுக்கு உங்களுடைய புதிய முகவரி தெரிய வந்ததும் எனக்கு அனுப்பி வைக்கவும்.

நான் பிரிவு தொழிலாளரில் (Divisional Staff) இருந்து Jaguar/Daimler Coventry என்ற இடத்திலுள்ள உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்,

சந்தசுவாமிகள் செங்கலடியிலுள்ள சிவதொண்டன் நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை 06-05-1977 அன்று சிவதொண்டன் சபையிடம் ஒப்படைத்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தார்.

நான் இலங்கைக்கு அனுப்பிய சந்தசுவாமிகளுக்கு எழுதிய கடிதத்தை அங்கு இருப்பவர்களால் அவருக்கு அவருடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதற்கு அவர் எழுதிய பதில் கடிதம் பின்வருமாறு:

4.St Andrews Road
London N.W11
28-09-1977

எனது அன்புள்ள ஈஸ்வரன்,

நீங்கள் கடைசியாக எழுதிய கடிதத்திற்கு மிக்க நன்றி. இது இலங்கையிலிருந்து எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீங்கள் இப்பொழுதும் நன்றாக இருக்கின்றீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

மன்னிக்கவும், நீங்கள் கடந்த மாதம் தொலைபேசியில் அழைத்த பொழுது நான் அங்கு இல்லை.  திருமதி சச்சிதானந்தா அவர்கள் எனக்கு அறிவித்தார்.

எனக்கு  ஐயாவிடமிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு கடிதம் வந்தது. அதில் அவர் செங்கலடியிலுள்ள ஆசிரமத்திற்கு சமீபத்தில் நடந்த தொந்தரவுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை ஆனால் இதன் பிறகு நான் ஒன்றும் கேள்விப்படவில்லை. அத்துடன் செல்வத்துரை மாஸ்டரிடமிருந்தும் ஒன்றும் கேள்விப்படவில்லை. அங்கு எல்லாம் அமைதியாகிவிட்டதாக நான் நம்புகிறேன் உங்களுக்கு அப்பக்கத்தில் இருந்து ஏதாவது செய்திகள் கிடைத்ததா?

இங்கு இப்பொழுது ஒரு செய்திகளும் இல்லை. இதனால் எனக்கு கடிதத்தில் எழுதுவதற்கு வேறு ஒன்றும் இல்லை ஆனால் “செய்திகள் இல்லாவிட்டால் அதுவும் ஒரு நல்ல செய்தி” என்று ஒரு கூற்றும் உண்டு.

– திரு சச்சிதானந்தா அடுத்த மாதத்தொடக்கத்தில் இங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் சரி
அனைத்து நல் வாழ்த்துகளுடன்
தொண்டன் சந்தசுவாமி

இலங்கையிலுள்ள சந்தசுவாமிகளுடைய நண்பர்களிடமிருந்து மார்க்கண்டு சுவாமிகளுடைய உடல் நலன்களைப் பற்றி எழுதிய கடிதங்கள் வந்தன. அவர்கள் மார்க்கண்டு சுவாமிகள் சந்தசுவாமிகளைப் பற்றி விசாரிப்பதையும் எழுதுவார்கள்.

இவ்வகையான தொடர்புகள் சந்தசுவாமிகளைத் திரும்பவும் மாரக்கண்டு சுவாமிகளைப் பார்ப்பதற்காக 05-12-1979 அன்று கைதடிக்குச் செல்ல வைத்தது.

ஒரு வேளை சந்தசுவாமிகள் கைதடிக்கு வரும் பொழுது நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிடாததன் காரணமாக அவர் பாவிக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான சவர அலகு (rasor blades)களை குறைவாக எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம். அவருக்கு அவை தேவைப்பட்டதால் நான் அவற்றை அவருக்கு இங்கிருந்து அனுப்பிவைத்தேன். அதற்கு அவருடைய பதில் கடிதம் பின்வருமாறு:

கைதடி
03-11-1979

அன்புள்ள ஈஸ்வரன்,

இன்று நீங்கள் அனுப்பி வைத்த ரேசர் பிளேட் (rasor blades) பாதுகாப்பாக வந்தடைந்தது. இந்த வரப்பிரசாதமான ரேசர் பிளேட் (rasor blades)  களை அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி. இவை தீர்ந்துவிடுவதற்கு முன்னர் தான் இங்கிலாந்துக்கு வந்து என்னால் வாங்கமுடியும் என்று நான் நினைக்கின்றேன்.

எல்லாம் சரி
அனைத்து நம் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
எப்பொழுதும் போல் உம்முடைய
சந்தசுவாமி

1980 இல் இங்கிலாந்தில் கோடை காலத்தில் திரு.பிரமானந்தா அவர்கள் என்னை வந்து சந்தித்தார் . அவர் இலங்கைக்குத் திரும்பியதும் சந்தசுவாமிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். திரு பிரனானந்தாவை சந்தித்த பின்னர் சந்தசுவாமிகள் எனக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:

c/o C.முத்துக்குமாரசுவாமி
கைதடி நெற்கு
கைதடி
வடமாகாணம்
இலங்கை
27-10-1980

அன்புள்ள ஈஸ்வரன்,

நான் ஒரு நாள் திரு பிரமானந்தா அவர்களை யாழ்ப்பாணம் சந்தையில் சந்தித்தேன். அவர் என்னிடம் தான் உங்களை இங்கிலாந்தில் சந்தித்ததாகவும். நீங்கள் மார்கழி மாதமளவில் இங்கைக்கு வருவததற்கு யுள்ளதாவும் சொன்னார் அது மிகவும் நன்றாக இருக்கும். நான் உங்களைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பேன், மேலும் நான் இங்கு நான் இருப்பேன் என்று தோன்றுகிறது.

ஆடி மாதம் ஆரம்பத்தில் நான் சுவாமிகளுடைய அருள் மொழிகள் கொண்ட தமிழ்ப் புத்தகம் ஒன்றை உங்களுக்கு அனுப்பி வைத்தேன். இதை இங்கிலாந்தில் இருக்கும் பொழுது தங்களுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அது உங்களுக்கு கிடைத்திருக்குமென நான் நம்புகிறேன். அது உங்களுக்கு கிடைக்காவிட்டால் எனக்குத் தெரியப்படுத்தவும் நான் உங்களுக்கு மற்றொரு புத்தகத்தை அனுப்பிவைப்பேன்.

இங்கு ஒரு செய்திகளும் இல்லை. ஆனால் இங்கு எல்லாம் நன்றாக இருக்கின்றன. மார்க்கண்டு சுவாமிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால்: அவர் கதைக்க மாட்டார். யாராவது அவரைப் பார்க்க வந்தால் அவர் நற்சிந்தனைப் பாடல்களைப் பாடுவார்.

உங்களுடைய புதிய உத்தியோகம் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்..
எவ்லாம் சரி
எப்பொழுதும் போல் உம்முடைய
சந்தசுவாமி.

1980ஆம் ஆண்டு மார்கழி மாதம் 17-12-1980 அன்று எனக்கும் சிவயோகிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த நாள் 18-12-1900இல் எனது சித்தப்பா ஆசை ஐயா (திரு திருநாவுக்கரசு} என்னைத் தன்னுடன் சேர்ந்து அமெரிக்காவிலிருந்து வந்த அடியவர்களுக்கு பிரசாதங்களைப் பரிமாறும்படி கேட்டுக் கொண்டார். அங்கு வந்தவர்கள் அப்புவுடைய சீடர்களில் ஒருவரான கவாய்  (Hawaii)நாட்டைச் சேர்ந்த சுப்பிரமுனிய சுவாமிகளும் அவர்களால் வழி நடத்தப்பட்ட அமெரிக்காவிலுள்ள அடியார்கள் கூட்டம் ஆகும். அவர்கள் இலங்கைக்கு யாத்திரைக்காக வந்துள்ளனர்.

அன்று நான் முதல் தடவை நான் சுப்பிரமுனியசுவாமிகளைச் சந்தித்தேன்;

கவாய்  (Hawaii) நாட்டைச் சேர்ந்த சுப்ரமுனியசுவாமிகள் அமெரிக்காவிற்கு திரும்பி யதிலிருந்து அவர் என்னுடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் எனக்கு சுப்ரமுனியசுவாமிகளை நேரில் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் கிடக்கவில்லை. ஆனால் அவருடைய கடிதப் பரிமாற்றம் எப்பொழுதும் எனக்கு நான் Coventry  யில் இருந்த பொழுது வந்த வண்ணம் இருந்தன.

எனது மனைவி சிவயோகி அப்புவால் பெயர் சூட்டப்பட்டார். சிவயோகியினுடைய பெற்றோர் திருதிருமதி சிவராஜா தம்பதியர் அப்புவுடைய அடியவர்களாக இருந்தவர்கள் சிவயோகியின் தாயார் பிரசவத்திற்காக மானிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அவசரமாகத் தகவல்கள் அனுப்பப்பட்டு மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டனர். குடும்பத்தினர்கள் மருத்துவனைக்கு செல்லதற்காக யாழ்ப்பாண நகரத்திலிருந்து மணிக்கூட்டுக் கோபுர சுற்றினுடாக வண்டியைச் செலுத்திய பொழுது அப்பு வண்டியை மறித்து அதில் தானும் ஏறிக் கொண்டார் அவர்கள் அப்புவை எங்கே போகிறீர்கள் என்ற கேட்க அப்பு தானும் அங்குதான் போகிறேன் என்று சொல்லி மருத்துவமனைக்கு அவர்களுடன் சென்றார். அப்பு அவருடைய தாயாருக்கு பாதுகாப்பான பிரசவம் நடப்பதற்கு ஆசீர்வதித்து விட்டுக் குழந்தைக்கு “சிவயோகி’! என்று பெயரும் சூட்டினார்.

அப்பு கஸ்தூரியார் வைத்தியநிலையத்தில் இருந்த சில மருந்துகளைப் பரித்துரைந்தார் அங்கிருந்த வைத்தியர் தானே அந்த மருந்துகளை மருத்துவனைக்கு எடுத்துச் சென்று கொடுத்துள்ளார். சிவயோகி வெற்றிகரமாக பிரசவிக்கப்பட்டார்..

சந்தசுவாமிகள் செங்கலடியிலுள்ள தனது நண்பர்களுக்காக சில புத்தகங்களை இங்கிருந்து அனுப்பி வைக்கும்படி என்னை கேட்டுக் கொண்டார். நான் அவற்றை அனுப்பி வைத்ததும், அதற்கு அவர் அனுப்பிய பதில் கடிதம் பின்வருமாறு

கைதடி
07-02-1981

அன்புள்ள ஈஸ்வரன்,

பிரிட்டிஷ் லேலன்ட் (British Leyland) உடைய  பொட்டலங்களை நன்றாக கட்டி அவற்றை அனுப்பி வைக்கும் செயல்முறை  மிகவும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நான் உங்களிடம் கேட்ட பொருட்கள் நீங்கள் வாங்கி அனுப்பியது இவ்வளவு விரைவாக வந்தடையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை, இதை அனுப்பி வைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.

வினாசித்தம்பிக்கும் அவருடைய தாயாருக்கும் புத்தகங்களை அனுப்பி வைத்ததற்கும் மிக்க நன்றி. சில நாட்களுக்கு முன்பு இப் புத்தகங்கள் பாதுகாப்பாக அவர்களுக்குக் கிடைத்துவிட்டதாக ஒரு தந்தியை அவர்கள் எனக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் இருந்து ஒரு மாதம் வெளியில் சென்றதன் காரணத்தால் அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கு வழமையைவிட அதிகமான வேலைகள் இருக்கும். அதனால் நீங்கள் சில முக்கியமான வளர்ச்சி அல்லது முக்கியமான செய்திகள் இருந்தால் மட்டுமே எனக்கு கடிதம் எழுதவும். நானும் அப்படியே செய்வேன். நீங்கள் உங்களுடய மனைவியைக் கூப்பிடுவதற்காக வைகாசி அல்லது ஆனி மாதம் இங்கு வரும் பொழுது, உங்களைச் சத்திப்பதர்காக தான் மிகவும் ஆவலுடன் காந்திருப்பேன். அப்பொழுது நான் இங்கு இருந்தால் நீங்கள் சொல்லுவது போல:

“சுவாமியின் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும்”. அத்துடன் நானும் “எல்லாம் நன்றாக இருக்கின்றன”. என்பதையும் இத்துடன் சேர்த்து எழுதிக்கொள்கிறேன்

எல்லாம் சரி
நல்வாழ்த்துக்களுடன்
எப்பொழுதும் போல உம்முடைய

சந்தசுவாமி

எனக்கும் சிவயோகிக்கும் நிச்சயதார்த்தம் நடத்த பின்னர் நாள் UK க்கு திரும்பியதும் எனக்கு ஒரு பதவி உயர்வு கிடைத்தது. என்னுடைய பதவி உயர்வு SirJahn Figanhuirteen ஆவ் வழங்கப்பட்டது. Sir.John Egan/hairman Jaguar Trim and Final Assembly Plant எனது தலைமையில் வழிநடத்தும்படி எனக்கு இந்தப் பதவி உயர்வை ஏற்படுத்தினார்.

அவர் அமெரிக்காவிற்கு Jaguar மோட்டார் வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்புச் செய்யும் நோக்கத்தோடு Jaguar தொழிற்சாலைக்கு உயர்ந்த மதிப்பிடம் கொடுத்தார்.

Jaguar மோட்டார் வாகனம் செய்யும் தொழிற்சாலையை ஒரு காட்சிசாலையாக அமெரிக்க வணிகர்களுக்கு வெளிக்காட்டினார்.

வாகன வியாபாரிகள் (Car Dealers) வாகனம் செய்யும் தொழிற்சாலையை சுற்றிப் பார்த்து மோட்டார் வாகனங்கள் செய்யும் முறைகளை அறியவும், தொழிற்சாலையினுள் அவர்கள் நடமாட ஓர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழித்தடம் உருவாக்கப்பட்டது.

மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை செயல்படுத்துவதற்கும் தொழிற்சாலையினுடைய அமைப்பிலும் உற்பத்தி செயன்முறைகளிலும் மாற்றங்களை செய்வதிலும் தொழிற்சங்கத்தின் (Trade Union)ஊழியர்களோடு விவாதங்கள் மற்றும் பேச்சுவார்ததைகளில் பங்குபற்றுவதிலும் எனது தனிப்பட்ட நேரம் இரவும் பகலும் பயன்படுத்தப்பட்டது.

எனக்குக் கைதடியில் இருந்து சந்தசுவாமிகள் 17-02-1981 இல் அவர் உண்ட கணவைப்பற்றி எழுதிய கடிதம் ஒன்று கிடைந்தது. அக் கடிதம் பின்வருமாறு:

c/oதிரு C.முத்துக்குமாரசுவாமி

கைதடி தெற்கு
கைதடி P.O
NP
இலங்கை
17-02-1981

அன்புள்ள ஈஸ்வரன்,

நேற்று இரவு நான் உங்களைப்பற்றி ஒரு கனவு கண்டேன். எனக்கு அந்தக் கனவைப்பற்றி எந்தவிதமான நினைவுகளும் இல்லை. ஆனால் இரவு 11 30 அளவில் “அவர் (நீங்கள்) அவருடைய மனைவிக்கு அடிக்கிறார். ஆனால் அது கூடாது” என்ற வார்தைகளைக் கூறி நான் எழுப்பி வைக்கப்பட்டேன்.

அடிக்கடி காணும் எந்தவித அர்த்தங்கள் அற்ற கனவுகளில் இதுவும் ஒன்றாக இருத்திருக்கலாம். ஆனால் இது ஒருவேளை உங்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கலாம் அதற்காகத் தான் நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இது உங்களுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாவிட்டால் இதை மறந்துவிடுங்கள்.

எல்லாம் சரி
எப்பொழுதும் போய்
சந்தசுவாமி

P.S.சுவாமி (அப்பு) என்னிடம் “உங்கள் உடல். உங்கள் மனைவி. நீங்கள் கட்டாயம் உங்களுடைய பெண்ணைக் கவனமாகப் பார்க்க வேண்டும்!” என்று சொல்வி இருக்கிறார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “நீங்கள் உங்கள் உடலைத் திருமணம் செய்துள்ளீர்கள் உங்கள் உடல்உங்கள் மனைவி!” நீங்கள் உங்களுடைய பெண்ணை” கவனமாகப் பார்க்கின்றீர்களா?

பின்பு Birmingham, Castle Bronwichஎன்ற இடத்திலுள்ள Jaguar body Plant தொழிற்சாலைக்கு அடுத்ததலைமுறை புது Jaguar வாகனத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்யவதற்காக அனுப்பி வைக்கப்பட்டேன்

நான் Birmingham, Castle Bronwich இல்  உள்ள Jaguar body Plant தொழிற்சாலைக்கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் Jaguar series III derivates உட்பட அனைத்து Jaguar Body களையும் நிறுவனத்தின் உரிமையாளர் Sir Wiliam Lyons ஆல் ஆக்கப்பட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிய Jaguar Body( Jaguar மோட்டார் வானத்தின் வெளி உடல்)  அதைச் செய்யும் தொழிற்சாலைக்கு நான் Body Plant Manager (அதிகாரி) ஆக உயர்த்தப்பட்டேன்.

என்னை தொழிற்சாலையின் நிர்வாகத்தார், மேல் அதிகாரி என்னும் பதவியைத் தருவதற்கு முன்பு அத்தொழிலின் பொறுப்பு மற்றும் விபரங்களை விரிவாக பின்வருமாறு எடுத்து கூறினார்கள்:

தொழிற்சாலை பொறுப்புக்களில் சுமார் 3000+ தொழிலாளர்கள் அடங்குவார்கள் என்றும் அவர்கள் உள்நாட்டவர்கள் என்றும், அவர்கள் வெளிநாட்டு பிரசையாகிய என்னை அவர்களின் தலைவராக ஏற்பதற்கு முழுச் சம்மதமும் இல்லாமல் தகராறு புரிந்தால், நான் எவ்வாறு அவர்களைக் கொண்டு நடத்துவேன்” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

இந்தக் கேள்விக்கு நான் கூறிய பதில் பின்வருமாறு:

“நான் பிறந்து வளர்ந்த நாட்டில் ஒரே நிறம், ஒரே சாதியத்தைச் சார்ந்த, ஒரே நாகரிகத்தை மேற் கொள்ளும் மக்களிடம் கூட பல விதமான மனப் பேதமும் முழுசம்மதமில்லாத வாழ்க்கை நடைபெற்று வரும் போது உள்நாட்டு மக்கள்  என்னை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மடைமை , அப்படி இல்லாவிட்டால் அது ஒரு பெரிய அதிசயம். எல்லாம் என்னுடைய நடை, உடை, பாவனை, கண்ணியம், கட்டுப்பாடு, மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பின் நடைமுறைகளில் அவர்களை நான் எப்படி கொண்டு நடத்துகின்ற வழியில் தான் முழு உண்மையும் அமைந்திருக்கின்றது” என்று பதிலளித்தேன். எனக்கு 21-05-1981 இல்   திருமணம் நடந்தது.

28-05-1981 அன்று சந்தசுவாமிகள் எனது தாயார். சிவயோகி மற்றும் என்னையும் செல்வச்சந்நிதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார், அந்த ஆசிரமத்தில் முன்பு சந்தசுவாமிகள் ஜேர்மன் சுவாமி (கௌரிபாலா) வுடன் சில காலங்கள் கழித்திருந்தார். எங்கள்; எல்வோருக்கும் அன்று மதிய உணவு செல்வச்சந்நிதி ஆசிரமத்தில் வழங்கப்பட்டது.

நாங்கள் திரும்பி UK வந்த பின்பும் நான் தொடர்ந்து Coventry யிலிருந்து Birmingham இல்  உள்ள Jaguar body Plant (தொழிற்சாலை) க்கு தினமும் பிரயாணம் செய்தேன்.

எங்களுடைய முதல் பயணம் ஐயாவைப் பார்ப்பதற்கு Sursee, Luzern, Switzerland க்கு சென்ற பிறகு அடுத்த 25 ஆண்டுகளாக நாங்கள் ஐயாவைப் பார்க்கச் சென்றுவந்தோம்.