எங்களுடைய அனைத்துப் பயணங்களிலும் Sursee என்னும் இடத்திலுள்ள Hirsehen Hotelலில் தான் நாங்கள் தங்குவோம்.
சந்தசுவாமிகள் தனது பெறாமகன் liver மற்றும் மருமகள் Meredith ஆகியோருடன் எங்கள் விடுமுறையின் போது ஒரு சில சந்தர்ப்பங்களில் Sursee யில் எங்களுடன் இணைந்துள்ளனர்.
நாங்கள் இங்கிலாந்திலிருந்து சுவிட்சர்லாந்து (Switzerland) க்கு காரில் சென்று சுவிட்சர்லாந்திலுள்ள ஒவ்வொரு மாகாணங்களுக்கும் (County) சென்றோம்.
கேபில் கார் (Cable car) மற்றும் கேபில் ரயில் சவாரிகள் (Cable train), ஏரிகள், பல்வேறு மிருகக்காட்சிச்ச ாலைகள், புது மாதிரியான வீடுகள் (Model Houses), நூதன காட்சிச்சாலைகள் (Museums), பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், குகைகள் மற்றும் Sursee கடலில் படகுப் பயணங்கள் ஆகிய பிரசித்தி பெற்ற இடங்களை எல்லாம் நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம்.


எட்டிஸ்விலில் (Ettiswill) உள்ள ஆல்பர்ஸ்வில்லில் (Alberswill) ஒரு பெரிய சிலுவையை அடைய சந்தசுவாமிகள் எங்களுடன் வயல்கள் வழியாக மலையின் உச்சி வரை நடந்து சென்று மகிழ்ந்தார்.
சந்தசுவாமிகள் எப்பொழுதும் பர்மிங்காமில் (Birmingham) எங்களுடன் கிறிஸ்மஸ் விடுதலை நாட்களைக் கழிப்பார், நான் அவரை உற்பத்தி தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று எனது பிரமாண்டமான கிறிஸ்மஸ் அட்டையை காட்டினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இது அப்புவின் அருள் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
சந்தசுவாமிகள் தனது சகோதரர் Sir.பீட்டர் ராம்ஸ்போதம் (Sir.Peter Ramsbotham) முடன் ஒவிங்டன் (Ovington), வின்செஸ்டர் (Winchester) இலுள்ள அவர்களுடைய மூதாதையருடைய இடத்தில் தங்கியிருந்தார். Sir.பீட்டர் ராம்ஸ்போதம் (Sir.Peter Ramsbotham) அவரது முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு தனித்திருந்தார். 1986ஆம்ஆண்டு Sir. பீட்டர் ராம்ஸ்போதம் (Sir.Peter Ramsbotham) மறுமணம் செய்து கொண்டபோது சந்தசுவாமிகள் அதே காணிக்குள் ஒரு சிறிய ஆசிரமத்தைக் கட்டி (இது கொழும்புத்துறை, யாழ்பாணத்தில் உள்ள அப்புவின் பழைய ஆசிரமத்தின் அளவை ஒத்திருந்தது) அதில் குடியேறினார்.
சந்தசுவாமிகள் முழுவதுமாகத் தன்னை (Lords Prayers மற்றும் Positive thoughts for daily meditation), எழுதுவதில் ஈடுபடுத்திக்கொண்டார். அவருடைய சொந்த நிலங்களையும் கிராமத்தையும் சுற்றி நடப்பதுதான் அவருடைய தினசரி வழக்கமாக இருந்தது. அவர் உள்ளூர் கிராம மக்களால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் மற்றும் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். சந்தசுவாமிகள் என்னையும் மனைவி சிவயோகியையும் ஒரு சுற்றுலாவாக House of Lords க்கு அழைத்துச் சென்றார். House of Lords சாப்பாட்டு அறையில் நாங்கள் சாப்பிட அமர்ந்த பொழுது உணவுப்பட்டியல் அட்டையில் சைவ உணவு இருக்கவில்லை. நாங்கள் எங்கள் உணவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவர கேட்டுக் கொண்டோம். சந்தசுவாமிகள் தனது தட்டில் இறைச்சி மற்றும் காய்கறிகளை எடுத்து “இந்த இறைச்சித் துண்டைவிட கவலைப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன” என்று கூறிவிட்டு தனது தட்டிலுள்ள இறைச்சித் துண்டுகளை வடிகட்டிப் புறம்பாக வைத்துவிட்டு மற்ற உணவுகளை ருசித்தார். இந்த நாள் தான் சந்தசுவாமிகள் நீண்ட குடும்ப நண்பர்களில் ஒருவரான புகழ்பெற்ற Pilot Leonard Cheshire என்பவர் House of Lords இல் பிரமாணம் செய்யப்பட்ட நாள் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
House of Lords உறுப்பினர்கள் பல்கனியில் (Balcony) இருந்த House of Commons உறுப்பினர்களைப் பார்த்து “மற்ற வீடு” (“other house”) என்று குறிப்பிடுவார்கள் என்று சந்தசுவாமிகள் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.
இக் கால கட்டத்தில் Ford Motor நிறுவனம் Aston Martin நிறுவனத்துடன் சேர்ந்து Jaguar Land Rover நிறுவனத்தையும் Ford Motor நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நான் Aston Martin கார் தொழிற்சாலை நிறுவனத்தின் செயல்திறன்களை சிறப்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டேன். Aston Martin கார்களுடைய உடல் பாகங்கள் முக்கியமாக பல வகைப் பொருட்கள் கலக்கப்பட்டு லேசான எடையில் Light weight செய்யப்பட்ட பாகங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டன. மற்றும் எனக்கு அடிக்கடி பிரான்சுக்குப் போக வேண்டிய கட்டாயம் இருந்தது. காரணம் அங்குள்ள பிரெஞ்சு உற்பத்தியாளர்களுடன் பல்வேறு மோட்டார் வாகனப் பொருட்களின் உற்பத்தி ஆராய்வுகள் நடத்த வேண்டி இருந்தது.
Sir.Peter Ramsbotham தன்னுடைய பிரெஞ்சு wine பற்றிய விரிவான அறிவைக் கொண்டு தனக்குத் தேவையான பிரெஞ்சு wines பட்டியலைத் தயாரித்து என்னிடம் கொடுப்பார், நான் அவற்றை வாங்கிக் கொண்டு பிரான்சில் இருந்து வரும்பொழுது அவரிடம் கொடுப்பேன்.
நான் பிரான்சுக்கு Portsmouthக்கும் St.Marlow க்கும் இடையில் கடல் வழியாகப் பயணம் செய்து பின் France நிலப்பரப்பினூடாக உற்பத்தி நிலையத்திற்கு Laval near Paris செல்வேன். நான் Portsmouthக்கு சீக்கிரமாக (காலை 5.00) மணிக்கு வந்து நேரடியாக சந்தசுவாமிகளுடைய ஆசிரமத்திற்கு காரைச் செலுத்தி Sir.Peter கேட்ட wines வகைகளை வழங்குவேன். சந்தசுவாமிகளுடைய ஆசிரமத்திற்கு Ovington/Winchester நான் காலை 6 மணியளவில் வந்து சேரும் பொழுது சந்தசுவாமிகள் பாண் டோஸ்ட் போட்டு மார்மைட் தடவி மற்றும் ஒரு கோப்பை தேநீருடன் என்னை வரவேற்கத் தயாராக இருப்பார்.
உங்கள் தாயின் அன்பைவிட குருவின் அன்பு மேலானது.
“தாயினும் அன்பு தளைத்த குருவே”

சந்தசுவாமிகள் எப்பொழுதும் எனது விடுமுறை திட்டங்களின் வருட பஞ்சாங்கம் வைத்திருப்பார். எனது விடுமுறைகள் பொதுவாக எனது தொழிற்சாலை மூடப்பட்ட நாட்களுடன் ஒத்துப் போகும். சந்தசுவாமிகள் எப்பொழுதும் எங்களுடன் Birmingham இல் தங்குவார். சில வேளைகளில் நாங்கள் எங்கள் விடுமுறையை சுவிட்சர்லாந்தில் களிப்போம், விஜயானந்த சர்மாவை (ஐயா)யும் சந்தித்து உரையாடி இந்த நேரத்தைப் பயன் படுத்துவோம்.
ஐயா செங்கலடியிலுள்ள சிவதொண்டன் நிலையத்தில் சந்தசுவாமிகளுடன் தங்கியிருந்து சந்தசுவாமிகளின் அனைத்து விவசாயப் பணிகளையும் செய்வதற்கு உதவி செய்துள்ளார்.
சந்தசுவாமிகள் 1984 இல் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு 1997 வரை ஒவ்வொரு கிறிஸ்மஸ்சையும் Birmingham இல் எங்களுடன் கழித்தார் கடந்த 1997ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் அன்று அவர் குளிப்பதற்கும் மற்ற வேலைகளுக்கும் உதவிகள் தேவைப்பட்டது. அவற்றை நான் எங்கள் வீட்டில் அவருக்குச் செய்தேன். நான் அவருக்கு இப்படி உதவி செய்த பொழுது “சுவாமிக்கு இப்படிச் செய்தீர்களா?” என்று அவர் கேட்க நான் “ஆம்” என்று பதிலளித்தேன்.
Birmingham இல் எங்களுடன் தங்கியிருந்த எனது தாயார் மாசி மாதம் 1998இல் காலமானார். சந்தசு வாமிகள் பங்குனி 1998இல் Alresford முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். Alresford முதியோர் இல்லத்திலுள்ள சந்தசுவாமிகளை வார இறுதி நாட்களிலும் வார நாட்களிலும் தேவையான பொழுதெல்லாம் என்னால் தவறாமல் போய் பார்க்க முடிந்தது.
.
எங்கள் தாய் நிறுவனமான Ford நிறுவனம், Aston Martin நிறுவனத்தையும் JLR நிறுவனத்தையும் சொந்தமாக்கியது. புதிய நடுத்தர அளவிலான JLR காரையும் Ford Town காரையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. இரண்டு வாகனங்களும் பொதுவான தளத்தை Chassy அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து முக்கிய பாகங்களை விநியோகிப்பவர்கள் அமெரிக்கா முழுவதிலும் உள்ளனர். சில முக்கிய chassis (அடிப்பீடம்) Powertrain பாகங்கள் Jaguar கார்களுக்குப் பொதுவானவை. மேலே குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையின் காரணமாக என்னை அமெரிக்காவிற்கு இடமாறும்படி என்னை கேட்டுக் கொண்டனர். நான் வார நாட்களில் அமெரிக்காவில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன், மேலும் எனது சமூக வேலைகளைத் தொடரவும் (Community தமிழ் வகுப்புக்களை நடத்தவும்) மற்றும் Alresford முதியோர் இல்லத்திலுள்ள சந்த சுவாமிகளைப் பார்ப்பதற்கும் வார இறுதி நாட்களில் மீண்டும் இங்கிலாந்திற்கு செல்லவும் ஒப்புக் கொண்டேன்.
.
ஒரு முறை, ஒரு வார இறுதி நாட்களில் செயற்பாட்டு காரணங்களால் என்னால் அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியவில்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது. எனது இக்கட்டான நிலையைப் பற்றி முதியோர் இல்லத்தில் உள்ள சந்தசுவாமிகளுக்குத் தொலைபேசியில் அழைத்து விளக்கம் கொடுத்தேன். அதன் பின்னர் அதைத் தொடர்ந்து வந்த வார இறுதி நாட்களில் நான் திரும்பி வந்து அவரைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் என்னிடம் முதலில் சொன்னது “இடர்கள் முடிந்துவிட்டன. நீங்கள் திரும்ப வந்துவிட்டீர்கள்”. இந்த செய்தியானது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதன் பின்பு ஒவ்வொரு வார இறுதியிலும் தவறாமல் 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11அம் திகதி வரை (சந்தசுவாமிகள் சமாதியடையும் வரை) நான் அவரிடம் வாராவாரம் சென்று பணிவிடைகள் புரிந்து வந்தேன். எனது வருகைகள் முதியோர் இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு சந்தசுவாமிகளின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவியது. அவர்கள் சந்தசுவாமிகளை Lord Jim என்று அழைப்பார்கள். எனக்கு இன்று வரை “இடர்கள்” என்று சந்தசுவாமிகள் குறிப்பிட்டது Jaguar அல்லது Fordக்கு ஏற்பட்டதைக் குறிப்பிட்டாரா? அல்லது அது அவருக்காகவா அல்லது எனக்காகவா என்பது தெரியவில்லை. எந்த ‘இடர்கள்’ ஆனாலும் அது தீர்ந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
சந்தசுவாமிகள் ஒவ்வொரு கிழமையிலும் எப்பொழுதும் Winchester ரிலுள்ள கிராமப்புறங்களைச் சுற்றி காரில் சுற்றுப் பயணம் செய்வதில் மகிழ்வார், பொதுவாக 40 முதல் 50 மைல்கள் சுற்றுப் பயணங்களைக் கைக்கொள்ளுவோம்.
நான் அப்புவை சந்தசுவாமிகளால் கொடுக்கப்பட்ட சக்கரநாற்காலியில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்க கொண்டு செல்லுவதைப்போல சந்தசுவாமிகளையும் பல்வேறு வகையான Jaguar கார்களிலும் Range Rover கார்களிலும் அவரை அழைத்துச் செல்லுவேன். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் அவருடைய சகோதரர் Sir.Peter வசிக்கும் அவரது மூதாதையர் இல்லத்திற்குச் செல்லுவோம், அவருடைய குடும்பத்துடன் அடிக்கடி கேக் மற்றும் தேநீர் அருந்துவோம். முதியோர் இல்லத்தில் உள்ள ஊழியர்கள் அவர் இலங்கையில் கணிசமான காலத்தைக் கழித்ததை அறிந்து நான் அவருடைய “மகன்” என்று நினைத்தார்கள். அவர்கள் என்னிடம் அவருடைய மகனா? என்று கேட்ட போது, அவர்களுக்கு நான் கொடுத்த பதில் “நான் அவருக்கு ஒரு மகனைவிட மேலானவன்”.
ஒவ்வொரு வாரமும் நான் சந்தசுவாமிகளைப் பார்க்கப் போகும் பொழுது அவருக்குத் தேவையான சுத்தமான உடைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று அவரிடம் அந்த வாரத்திற்குத் தேவையான அனைத்தும் போதிய அளவு இருப்பு இருக்கின்றதா என்று உறுதி செய்வேன். அவருடைய அறையில் அவருக்குப் பிடித்த Fuchia பூக்களை வைப்பேன். வார நாட்களில் Sir.Peter எனக்கு தொலைபேசியில் அழைத்து சந்தசுவாமிகளை கிராமத்திலுள்ள அவருடைய நன்பர்களிடம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்வார், சில சமயங்களில் Sir.Peter ரும் எங்களுடன் எங்கள் சவாரியில் இணைந்து கொள்வார். Sir.Peter எப்பொழுதும் Jaguar கார்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர் அமெரிக்காவில் இங்கிலாந்தின் தூதராக இருந்த பொழுது Washington இல் Rolls Royce க்குப் பதிலாக அதிகாரப்பூர்வ Jaguar Daimler Limousine ஐப் பயன்படுத்த விரும்பியதாகக் கூறினார்.
நான் சந்தசுவாமிகளையும் அவரது சகோதரர் Sir:.Peter ஐயும் Bath திலுள்ள அவர்களது சகோதரி Joanனிடம் அழைத்துச் சென்று நாட் பயணங்கள் செய்துள்ளேன். நாங்கள் அங்கிருந்து திரும்பும் போது Sir.Peter எங்களுக்கு நல்ல மதிய உணவு தந்து உபசரிப்பார். சந்தசுவாமிகள் இயற்கைக் காட்சிகளைக் குறிப்பாக Stone Henge ஜை சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் மேற்கு நாட்டிலுள்ள வரலாற்றுத் தலங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவார்.




படம் 18: Bathதிலுள்ள Joanனுடைய குடியிருப்பில் எடுக்கப்பட்டது. இடமிருந்து வலம்: சந்தசுவாமிகள், திரு.சிவயோகஈஸ்வரன், Joan னுடைய மகள் (மத்தியில்), Sir. Peter Ramsbotham, Joan
2004ஆம்ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சந்தசுவாமிகள் உணவைத் தவிர்க்கத் தொடங்கினார். இருப்பினும் நான் அவருக்கு உணவைப் பரிமாறும்பொழுது அவர் அப்பொழுது உணவை ஏற்றுக் கொள்ளுவார்.
அவரது தேவைகள் அனைத்தையும் முதியோர் இல்லத்திலுள்ள அனைவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக வழக்கமான வார இறுதி நாட்களில் செல்வதோடு மட்டுமல்லாமல் வார நாட்களிலும் முதியோர் இல்லத்திற்கு செல்லத் தொடங்கினேன். நான் அவருடன் இருக்கும் பொழுது அவர் நன்றாக ஓய்வெடுப்பதை நான் உணர்ந்தேன்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, ஒரு முறை நான் Alresford இலுள்ள முதியோர் இல்லத்தில் இருந்து Birmingham இற்கு திரும்பிவரும் பொழுது என்னையறியாமல் நான் Steering Wheel மேல் சாய்ந்து தூங்கிவிட்டேன், அப்பொழுது அப்பு என் தோளில் ஒரு கடினமான அறை அறைந்து என்னை எழுப்பிவிட்டது. நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன். இந்த கால கட்டத்தில் ஆலையில் பல மைல்கள் நடந்தும், ஒரு நாளைக்கு 300க்கு மேற்பட்ட மைல்கள் சுவாமிகளைப் பார்ப்பதற்காக காரை ஓட்டுவதாலும் நான் மிகவும் சோர்வு அடைந்திருக்கலாம்.
சுவாமிகளின் வார்த்தைகளில் “நான் எனது மற்ற பெண்ணை புறக்கணிக்க ஆரம்பித்தேன்” மேலும் இது ஒரு மேலே இருந்து / சந்தசுவாமிகள் / அப்புவின் எச்சரிக்கையாக புரிந்து கொண்டேன்.
11ஆம் திகதி மார்கழி 2004ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று நான் வழமை போல் சந்தசுவாமிகளுக்கு எனது கடமைகளை முதியோர் இல்லத்தில் முடித்துவிட்டு, கிராமத்திலுள்ள பூக்காரரிடம் சந்தசுவாமிகளுக்குப் பிடித்த Fuchsia பூக்களை வாங்குவதற்காகச் சென்றேன். அப்பொழுது எனது மனத்துக்குள் இருந்த ஏதோவொன்று என்னை வழமையான Fuchsia பூக்களுடன் பெரிய வெள்ளை அல்லிப் பூக்களைக் கொண்ட பெரிய பூங்கொத்தையும் வாங்குவதற்குத் தூண்டியது. நான் அனைத்துப் பூக்களையும் முதியோர் இல்லத்திற்கு எடுத்துச் சென்ற போது, அங்குள்ள பணியாளர்கள் ஒரு பெரிய பூ ஜாடியைக் கொண்டு வந்து அதற்குள் இந்த அல்லிப் பூக்களை வைத்து அவருடைய அறைக்குள் வைத்தனர். அது அந்த அறை முழுதும் இனிமையான மணத்தைக் கொடுத்து, மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும் மாற்றியது. நான் அன்று முதியோர் இல்லத்தைவிட்டு வெளியேறும் முன் சந்தசுவாமிகளின் விரல் நகங்களையும் கால் நகங்களையும் வெட்டிவிட்டு அவருக்கு இரவு உணவாக அவருக்குப் பிடித்த Asparagus சூப்பையும் பரிமாறி விட்டு Birminghamக்கு எனது பயணத்தைக் மேற்கொண்டேன்.
அது தான் எனது கடைசிப் பிரியாவிடை என்பதை நான் அப்பொழுது உணரவில்லை!
12ஆம் திகதி மார்கழி 2004 ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தசுவாமிகள் இந்த உலகைவிட்டு அப்புவிடம் சென்றார்.
12-12-2004 அன்று நானும் சிவயோகியும் வழமை போல் எங்கள் சமூகத்திற்காக உள்ளூர் பள்ளியில் எங்கள் தமிழ் மொழி மற்றும் கலாசார கற்பித்தலைச் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு முதியோர் இல்லத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அது என்னை உடனடியாக முதியோர் இல்லத்திற்குச் செல்லும்படி செய்தது. நான் அங்கு சென்று பார்க்கும் பொழுது சந்தசுவாமிகள் நிம்மதியாகவும், அமைதியாகவும் சாந்தியடைந்திருப்பதைக் கண்டேன். நான் அப்புவிடம் கற்றுக் கொண்ட நற்சிந்தனை, சமஸ்கிருதப் பாடல்கள் அனைத்தையும் பாடி Sir:.Peter ருடன் அமர்ந்து சந்தசுவாமிகளுடைய இறுதிப் பயண ஏற்பாடுகளைப் பற்றி கலந்துரையாடினேன். 23-12-2004 அன்று தேவாலயத்தில் நடந்த இறுதிச் சடங்கு நாளில் என்னைச் சில வார்த்தைகள் சொல்லும்படி Sir.Peter கேட்டுக் கொண்டார், மேலும் அவருடைய சகோதரர் சந்தசுவாமிகளைப் (Lord Soulbury) பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சந்தசுவாமிகளுடைய இறுதிப் பயணம் 23-12-2004 அன்று நடந்தது.
23ஆம் திகதி மார்கழி 2004
காலை 10.00 மணி தொடக்கம் 10.45 மணி வரை சந்தசுவாமிகளின் உடலை 20-12-1963 அன்று யோக சுவாமிகளால் தீட்சை அளிக்கப்பட்ட போது எப்படி இருந்தாரோ அதேபோல் பார்ப்பதற்கு இருப்பது போல் தயார்படுத்தப்பட்டிருந்தது. பின்பு சிவபுராணம், திருமுறை, நற்சிந்தனை மற்றும் சமஸ்கிருதம் ஆகியன பிரார்த்தனைகள் Winchester, Hampshire இல் ஓதப்பட்டது. தேவாலய சேவைகள் 11.30 மணியளவில் Ovington, Alresfordடிலுள்ள அவர்களது குடும்ப தேவாலயத்தில் நடந்தன. 3.45 மணிக்கு Basingstoke, Hampshire இல் தகனம் நடைபெற்றது.
24ஆம் திகதி மார்கழி 2004
சந்தசுவாமிகளுடைய புனித அஸ்தி Winchester, Hampshire இலிருந்து Birminghamக்கு சிவபுராணம், திருமுறை, நற்சிந்தனை மற்றும் சமஸ்கிருத சுலோகங்கள் ஓதியபடி கொண்டுவரப்பட்டது.
25ஆம் திகதி மார்கழி 2004
Birmingham இல் புனித அஸ்தி வைக்கப்பட்டு சிவபுராணம், திருமுறை, நற்சிந்தனை மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதப்பட்டு, பின்பு Londonக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த புனித அஸ்தியை கொண்ட பயணமானது Birmingham இல் இருந்து காலை 5.00 மணிக்கு தொடங்கியது. Londonனிலுள்ள Thames நதியில் சந்தசுவாமிகளின் விருப்பப்படி அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருடைய புனித அஸ்தி நற்சிந்தனைப் பாடல்கள் ஓதல்களுடன் காலை 7.30 மணிக்குத் தூவப்பட்டது. இச்சடங்கில் எனது சகோதரர் டாக்டர். K.சிவயோகநாதன், ஐயா (விஜயநாத சர்மா – இவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட மற்றும் செங்கலடியில் சந்தசுவாமிகள் அங்கு இருந்த காலம் முழுவதும் அவருக்கு இவர் சேவை செய்துள்ளார்) மற்றும் நானும் (ஈஸ்வரன்) கலந்து கொண்டோம்.
26ஆம் திகதி மார்கழி 2004
சந்தசுவாமிகள் எனது கனவில் தோன்றினார், அதில் அவர் மிகவும் தாகமாக இருப்பது போல் நான் உணர்ந்தேன்.
சந்தசுவாமிகளின் தவறாத வழிகாட்டுதல் என்னுடன் நான் மாணவனாக இருந்த போது மட்டுமல்ல எனது 30+ வருடங்கள் அவருடன் இருந்த பொழுதும், அவரது மகாசமாதிக்குப் பிறகும் தினமும் என்னுடன் இருக்கின்றன.
எனது தனிப்பட்ட கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், அப்புவின் உவமை “எல்லோருக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் அவர்கள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே உலகிற்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டு விட்டன” என்ற உண்மையை இப்பொழுது உணர்கின்றேன்.
2008ஆம் ஆண்டு ஒரு நாள் திருமதி ஆனந்தாச்சி கார்த்திகேசன் (நான் அவர்களைக் கடைசியாகச் சந்தித்தது 40+, வருடங்களுக்கு முன்பு) அவர்கள் Londonனிலுள்ள தனது மகனின் வீட்டிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்து, தான் என்னை Birmingham இற்கு வந்து சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். நாங்கள் அவருக்கும் அவருடைய மகன் சக்திக்கும் மதிய உணவு விருந்தை கொடுப்பதற்கு எங்கள் வீட்டில் ஏற்பாடு செய்தோம். அவர்கள் Birmingham இற்கு வந்ததும் வழமையான பிரார்த்தனைகளைச் செய்வதற்காக அவர்களை எங்கள் பூசை அறைக்கு அழைத்துச் சென்றோம். நான் எங்களுடைய எண்ணெய் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்த பொழுது என் மனைவி சிவயோகியிடம் கசட் பிளேயரில் ஏதேனும் ஒரு நற்சிந்தனை பாடல்கள் கொண்ட கசட்டைப் போட்டு ஒலிக்கவிடச் சொன்னேன். எங்களிடம் திருமதி பிரமானந்தா மற்றும் ஓதுவார் பாடிய நற்சிந்தனைப் பாடல்கள் கொண்ட பல கசட்டுக்கள் இருந்தன. சிவயோகி ஒரு கசட்டைப் போட்டு ஒலிக்க வைத்தார். எங்கள் பிரார்த்தனைகள் முடிந்த பின்னர் நான் பிரசாதத்தை எடுத்து மாமி கார்த்திகேசனுக்கும் அவருடைய மகன் சக்திக்கும் கொடுக்க வந்த பொழுது, மாமியின் கண்களில் கண்ணீர் பெருகியதைக் கவனித்தேன். நான் உடனடியாக மாமி திடீரென கண்கலங்கியதற்கான காரணத்தை விசாரித்த பொழுது அவர் என்னிடம் “ஈஸ்வரன், நீங்கள் இப்பொழுது இசைக்கும் இந்தப் பாடல் தான் எனக்கு நான்
கல்யாணம் முடிப்பதற்கு முன் ஒரு திருவாதிரை நாளில் கொழும்பில் உள்ள எங்கள் வீட்டில் சுவாமிகள் எனக்காக எழுதிய பாடல்” என்றார். அந்தப் பாடலைக் கொண்ட கசட்டை சிவயோகி தேர்ந்தெடுத்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். அப்பு சிவயோகியை அந்தக் குறிப்பிட்ட கசட்டை எடுக்கப் பண்ணி மாமியினது சந்தேகங்களையும் நீக்கி அவரை ஆசீர்வதித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பாடல் பின்வருமாறு:
ஞான தேசிகன்
பல்லவி
ஞான தேசிகனே சரணம்
நற்றவனே நல்லூர் வித்தகனே வருக
அனுபல்லவி
ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன்
என்னை யென்னாலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான )
சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன்
கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன்
கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன்
தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி (ஞான)
1964ஆம் ஆண்டு அப்பு மகாசமாதி அடைவதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு நாள் எங்கள் வழமையான பூசைகளில் சிவபுராணம், நற்சிந்தனைப் பாடல்கள் பாடிய பின்னர் அப்பு என்னை இனித் தினமும் “அத்துவிதப்பொருள் காப்பாம்” என்ற நற்சிந்தனைப் பாடலைப் பாடச் சொன்னார்.
அந்தப் பாடல் பின்வருமாறு:
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவிதப் பொருள் காப்பாம் – எனக்
கடியார்களென்றென்றும் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் – என்றன்
சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்(அத்து)
அட்ட வசுக்களுங் காப்பாம் – எனக்
கானந்த மான பராபரன் காப்பாம்
எட்டுத் திசைகளுங் காப்பாம் – எனக்
கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்(அத்து)
பிராண னபானனுங் காப்பாம் – என்னைப்
பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம்
அராவணி வேணியன் காப்பாம் எனக் – கருளை யளிக்குங்
குருபரன் காப்பாம்(அத்து)
பஞ்சப் புலன்களுங் காப்பாம் – என்னைப்
பரவு மடியவ ரனுதினங் காப்பாம்
குஞ்சர முகத்தவன் காப்பாம்-நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம் (அத்து)
சந்திர சூரியர் காப்பாம் – எங்குந்
தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம்
மந்திரந் தந்திரங் காப்பாம் – நான்கு
மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம் (அத்து)
அப்பு இந்தப் பாடலின் முழு வரிகளையும் எனக்கு விளக்கிவிட்டுக் கடைசி 4 வரிகளுக்கு வந்த பொழுது, அவர் தன்னுடைய கைகளை மேலே உயர்த்தி மேலே பார்த்து “வானத்திலுள்ள சூரியன், சந்திரன் முதல் பூமி வரை, மற்றும் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள அனைத்தும் உன்னைப் பாதுகாப்பதற்காக நான் எல்லாக் கெட்ட ஆவிகளையும் கட்டி வைத்துள்ளேன்” என்று கூறியபடி தான் மேலே உயர்த்திய கைகளைக் கீழே கொண்டு வந்து தரையைக் காட்டினார்.
அதே காலகட்டத்தில் அப்பு என்னை அடிக்கடி பின்வரும் பாடலையும் பாட வைத்தார். அவரும் இரவும் பகலும் இந்தப் பாடலை பாடி வந்தார்.
தையல் நாயகித் தாயே
இது நல்ல தருணம் அம்மா
வையம் புகழும் வண்ணை மாநகரில்
வந்த வாமியே சிவகாமியே
கந்த சுவாமியைத் தந்த
தையல் நாயகித் தாயே
இந்தத் “தையல் நாயகி” பாடல் அப்பு எழுதிய பாட்டு என்று நான் கருதினேன். நான் எனது உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின், அப்புவைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்புகளைப் படித்த பொழுது இந்தப் பாடல் அவருடைய பரம குரு கடையிற் சுவாமிகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை உணர்ந்தேன். நான் காலையிலும் மாலையிலும் எனது பிரார்த்தனையின் போது அப்புவுடைய இந்த வழிகாட்டுதல்களையும் நான் தொடர்ந்து பின்பற்றுகின்றேன்.
அப்புவும் அவருடைய சீடர்களும் எனக்கு வழங்கிய அனைத்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் நான் எனது பொக்கிஷமாகக் கருதுகிறேன். அத்துடன் ஆன்மீகம், தத்துவஞானம் உள்ள புத்தகங்களில் இருந்து கிடைக்கக்கூடிய விளக்கங்களைவிட எனது எல்லாச் சந்தேகங்களுக்கும் இது மிகவும் வழிகாட்டக்கூடியதாக இருக்கின்றது.
மனித உருவில் உள்ள தெய்வீக அவதாரமான அப்புவிடமும் அவருடைய சீடர்களிடமும் அப்புவுடைய நற்சிந்தனையைப் பற்றிய உண்மையான அறிவும் நற்சிந்தனையின் தெய்வீகத் தன்மை வெளிபாட்டு உண்மை அறிய, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி






