1953-ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon.Ramsbotham)அப்புவிற்கு ஜேர்மன் சுவாமி. கொரியாலாவினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.
இந்த அறிமுகத்தின் பின்னர் மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon.Ramsbotham) ஜேர்மன் சுவாமி கௌரிபாலரவுடன் தொண்டமானாறிற்கு அருகில் உள்ள செல்வச்சந்நிதியிலும் கதிர்காமத்திலும் சில காலங்கள் தியானம் செய்தார்.
1955ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Hon.S கைதடியில் மார்க்கண்டுசுவாமிகளுடன் சில காலங்கள் கழித்தார்.. 1955ஆம் ஆண்டு கதிர்காமத்தில் தங்கியிருந்த பின்னர் இங்கிலாந்திற்குத் திரும்பினார்.
1857ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon.Ramsbotham) கிரேக்க வைதீகமான தேவாலயத்தில் இணைவதற்கு வழிவகைகளைக் கைக்கொண்டார்.
இந்த ஸ்தாபனத்தில் இணைவதற்கு கிரேக்க வைதீகமான தேவாலயத்தின் தூண்டல் தேவைப்பட்டது. 1957ஆம் ஆண்டில் இவருக்கான கிழேக்க வைதீக முறையில் கிரிகைகள் பெறுவதற்கான சடங்குகள் நடைபெற இருக்கும் முதன் நாள் இவரின் நண்பரான ஜேர்யாமி கௌரிபாலா அப்புவுடைய செய்தியுடன் சென்று மதிப்புக்குரிய ராம்ஸ்போதத்தை (Rt.Hon.Ramsbotham) சந்தித்தார்.
இச் செய்தி மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதத்தை (Sir.Peter.Ramsbotham) கிரேக்க வைதீகமுறையில் தூண்டுதலைப் பெறுவதற்கான சடங்குகளை ரத்து செய்ய வைத்து, அவரை இலங்கையில் உள்ள யோகசுவாமிகளிடம் செல்ல வைத்தது.
இவருடைய சகோதரர் Sir பீட்டர் ராம்ஸ்போதம் (Sir.Peter.Ramsbotham) இச் சம்பவத்தை உண்மையான நம்பிக்கையான வழிகாட்டுதலின் கீழ் – தனது தேடலைத் தொடர அப்புவின் வழிகாட்டுதலின் கீழ் இம்மதம் மாற்றம் நடந்ததாகக் குறிப்பிட்டார்.
1957ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதம் (Rt.Hon.James Ramsbotham) இலங்கையை வந்தடைந்ததும் அப்பு அவரை யாழ்ப்பாணம், KKS வீதியிலுள்ள சிவதொண்டன் நிலையத்தில் தங்க வைத்தார்.
1957ஆம் ஆண்டு காலமட்டத்தில் திரு.S.விஸ்வலிங்கம் உபாத்தியாயர் சிவதொண்டன் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார்.
மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதம் (Rt.Hon.James Ramsbotham) அவர்கள் இலங்கையை வந்தடைத்ததும்அவர் அப்புவை சந்திந்த பொழுது அப்பு அவரைப்பார்த்து “லண்டனில் கடவுள் இல்லையா?” என்று கேட்டார்.
1958ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதம் (Rt.Hon.James Ramsbotham) இங்கிலாந்திற்குத் திரும்பி சென்றார்.
1960ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போதம் (Rt.Hon.James Ramsbotham) இலங்கைக்குத் திரும்பி வந்தார்.
1961ஆம் ஆண்டில் அப்பு விழுந்து அறுவைச் சிகிச்சை நடந்த பின்னர் சக்கரநாற்காலியை உபயோகிக்கத் தொடங்கினார் .
மதிப்புக்குரிய ஜேமஸ் ராம்ஸ்போதம் (Rt.Hons.James Ramsbotham) இங்கிலாந்தில் இருந்து அதிர்ச்சி உறிஞ்சிகளுடன் கூடிய சக்கரநாற்காலியைக் கொண்டு வந்து அப்புவிற்குக் கொடுத்தார்.
பெரும்பாலும் அந்த காலகட்டத்தில் கிடைக்கக் கூடிய மிகவும் நவீன சக்கரநாற்காலியாக அது இருந்திருக்கலாம். 30-12-1963 அன்று மதிப்புக்குரிய ஜேமன் ராம்ஸ்போதம் (Rt.Hons.JamesRamsbotham)அவர்களுக்கு யோகசுவாமிகளால் தீட்சை அளிக்கப்பட்டு கீழ் வரும் வார்த்தைகளைக் கூறி ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. “இன்று முதல் நீ ஒரு சன்னியாசி. இன்று முதல் உனது பெயர் சந்தசுவாமி”






