
யோகசுவாமிகள் 1914ஆம் ஆண்டில் செல்லாச்சி அம்மையாரைச் சந்தித்தார். செல்லாச்சி அம்மையார் 1863ஆம் ஆண்டில் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தார். இவர் யோகசுவாமிகளை விட சரியாக 9 வயது முதியவராக இருந்ததால் யோகசுவாமிகளைத் “தம்பி” என்று அழைப்பார். இவர் ஒரு பழுத்த, முதிர்ந்த நன்கு ஆன்மீகத்தை உணர்ந்த ஆன்மா. இவர் ஒரு சிவலிங்கத்தை வைத்து உண்மையாக வழிபட்டும் கடும் தியானத்தில் இருந்ததன் பலனாக தெய்வீக அருளால் தெய்வீக நிலையையடைந்திருந்தார். இவர் திருமணமானவர். இவரது கணவனின் இறப்பை முன் கூட்டியே கணித்துக் கூறியுள்ளார் (ஆடி 1905ஆம் ஆண்டு). இது சரியாகவே நடந்தது. இவருக்கு இரண்டு பிள்ளைகள் (ஒரு ஆண், ஒரு பெண்). இவர் இந்த முதிர்ச்சி நிலையை எந்த ஒரு குருவின் வழிகாட்டுதலும் இல்லாமல் ஆழமான தியானத்தினுடாகவும் சுய ஆன்மீக தெய்வ உணர்வின் மூலமும் அடைந்திருந்தார்.
யோகசுவாமிகள் மரக்கறிகள், கீரை, உருளைக்கிழங்கு மற்றும் வேறு சில கிழங்குவகைகளுடன் செல்லாச்சி அம்மையாரிடம் சென்று அவருடைய மகளிடம் இவற்றைக் கொடுத்து தங்கள் இருவருக்கும் சமைத்துத் தரும்படி வேண்டி பின் உணவு அருந்திவிட்டு நீண்ட தியானத்தில் இருவரும் இருப்பார்கள். யோகசுவாமிகளும் செல்லாச்சி அம்மையாரும் தங்கள் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். யோகசுவாமிகள் இச் சந்திப்புகளை பின்வரும் நற்சிந்தனைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்:
‘அடியார்”
“ஆடுவர் பாடுவார் அந்தியும் சந்தியும்
கூடுவர் குணம்பல பேசிக்கைகூப்புவார்
தேடுவர் செய்வதொன்றறிகிலர் திடமுடன்
நாடுவர் பாடுவார் நம்பர்தம் அடியரே”
இவர்கள் வல்லமை பெற்றவர்கள். இவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற ஆன்மீக ஞான பலனாக பல சித்திகளைச் செய்யக் கூடியவர்கள். யோகசுவாமிகள் தன்னிடம் ஜோதிடம் கேட்க வந்தவர்களை ஜோதிடரிடமும் மருத்துவம் கேட்க வந்தவர்களை மருத்துவ வல்லுனர்களிடமும் அனுப்பி வைப்பார். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்காக ஆலோசனைகள் கேட்க வருபவர்களிடம் கோவில் பூசாரிகளைக் கொண்டு பூக் கட்டிப் பார்த்து வரும் முடிவை ஏற்குமாறு வழிகாட்டியுள்ளார்.
செல்லாச்சி அம்மையார் தனது ஆன்மீக ஞானத்தைக் கொண்டு நோய்களில் இருந்து ஏராளமான மக்களைக் குணமடைய பல செயல்களைச் செய்துள்ளார். செல்லாச்சி அம்மையாரின் சில உறவினர்கள் உயர் கல்வி கற்று இலக்கியத்தில் நன்கு தேர்ச்சி பெற்று இருந்தார்கள். அவருடைய அடியார்கள் அவரைத் தங்களது குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் மல்லாகம் பாடசாலை முதல்வர் திரு.S.அம்பலவாணரும் அவருடைய கற்றறிந்த நண்பர் கலைப்புலவர் K.நவரெட்னமும் ஆவார்கள். யோகசுவாமிகள் செல்லாச்சி அம்மையாரின் வீட்டில் கவியரங்கம் நடக்கும் நாட்களில் தானும் அதில் இணைந்து கொள்வார். அப்பொழுது யோகசுவாமிகளால் கூறப்பட்ட சில வார்த்தைகள் ஊடாக அங்கு வந்த அறிஞர்களை ஆழமாகச் சிந்திக்க வைத்து, யோகசுவாமிகள் அதன் அர்த்தத்தை விளக்கிய பொழுது பாராட்டத்தக்க அதன் முக்கியத்துவத்தை அவர்கள் பெற்ற அறிவை உணர்ந்தார்கள். அவர்கள் பணிவாக அந்த ஆன்மீக உணர்வை உணர்ந்த அடக்கமுள்ள எளிய இரு ஆன்மாக்களின் காலடியில் அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவர்களாகக் கருதினார்கள்.
செல்லாச்சி அம்மையாரின் வாழ்க்கையின் கடைசி நாட்களில் யோகசுவாமிகள் தான் தேர்ந்தெடுத்த சிலரைக் கொண்டு உணவு சமைக்க வைத்து அதை தான் கொண்டு போய் அவர்களிடம் கொடுப்பார்.
யோகசுவாமிகள் செல்லாச்சி அம்மையாருக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு அடிக்கடி அவரைப் போய் பார்க்க வைத்தார். செல்லாச்சி அம்மையாருடைய உடல்நலம் தொடர்ந்து படிப்படியாக குறைந்து அவர் 18-01-1929 அன்று மகாசமாதி அடைந்தார். யோகசுவாமிகள் செல்லாச்சி அம்மையாரின் மகனைக் கொண்டு அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்யுமாறு வழிகாட்டினார். அதன் பின்னர் செல்லாச்சி அம்மையாரின் முழு அடியார்கள் கூட்டமும் யோகசுவாமிகளிடம் வந்து சரணடைந்தார்கள்.
யோகசுவாமிகள் சைவர்களை சித்தாந்த சாத்திரங்கள் ஊடாக அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டார். இதையிட்டு அவர் சில அடியார்களைத் தனது குடிசைக்குள் வந்து தன்னுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார். யோகசுவாமிகள் சில அடியார்களை நாடி அவர்களை மக்களுக்குக் கற்பிற்பதற்காக புராண வகுப்புக்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். யோகசுவாமிகள் எல்லோரும் சித்தாந்த சாத்திரங்களின் அறிவைப் பெற்று கொள்ள விரும்பினார். இதற்காக அவர் அறிஞர் பொன்னையாவை ஏழாலையிலிருந்து வரவழைத்துச் சமய வகுப்புக்களை வண்ணார்பண்ணையிலும் ஏழாலையிலும் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
யோகசுவாமிகள் சமய வகுப்புகளை கோவில்களிலும், மடங்களிலும் தொடக்கி வைத்தார். அவர் தீவீரமாக கந்தபுராணம், பெரியபுராணம் ஆகியவற்றை முழு நம்பிக்கையோடு படித்து, அனேகமான துன்பங்களைத் தீர்க்கலாம் என்று உபதேசித்தார். புராண படிப்பும் அதன் வாசகங்களும் பொதுவாக எல்லாராலும் இலகுவில் விளங்கிக் கொள்வது கஷ்டம். “பயன் சொல்லும்” ஒழுங்குகளை கைப்பிடித்து புராணப் படிப்பு உருவாக்கப் பட்டது.(பயன் சொல்லும் முறையில் ஒருவர் பாடல்களைப் பாட மற்றவர் பாட்டின் கருத்துக்களை விளக்குவார்)இந்த முறையூடாக வெவ்வேறு கல்வித் தராதரத்தில் உள்ளவர்களுக்கும் எல்லாப் புராணத்தின் முக்கியத்தை தெரியப்படுத்த முடிந்தது.
யோகசுவாமிகள் கொக்குவில் குமாரசுவாமி புலவரை கந்தப்புராணத்தின் சாரத்தை சுருக்கி எழுதப் பணித்து அச்சிட்டு உலகிற்கு தெரியப்படுத்தினார்.யோகசுவாமிகளை நேரில் காணாத பல அடியார்கள் அவரைக் கனவுகளில் கண்டு பேரானந்தத்தை அனுபவித்துள்ளார்கள். அதன் பின்னர் அவர்கள் அவரை நேரில் வந்து பார்த்த பொழுது அவர்களின் கனவுகளில் தோன்றிய அதே தோற்றத்தைக் கண்டு வியந்தார்கள். பல அடியார்கள் யோகசுவாமிகளின் கபடமற்ற விபரமான ஆத்மீக தன்மையால் கவரப்பட்டார்கள்.
யோகசுவாமிகள் எப்பொழுதும் பல அம்சங்களைக் கொண்ட கோவில் வழிபாடுகளை ஊக்குவிப்பார். அதில் நல்லூர் கோவிலை சுற்றிக் கும்பிடுதல், அபிசேகங்கள், மற்றும் வேறு சடங்கு விதிமுறைகளும் அடங்கும்.யோகசுவாமிகளுடைய சமய வாழ்க்கை முறை அவருடைய இதயத்தில் பதிந்திருந்த உண்மையான சமய விதிமுறைகளில் இருந்து வந்தவைகளே ஆகும். யோகசுவாமிகளால் வழிகாட்டப்பட்ட சமயசெயல்முறைகள் மிகவும் எளியதாகவும் மற்றவர்களால் கவரப்பட்டதாகவும் இருந்தன. போசுசுவாமிகளின் ஒரு வெளிவேடமும் இல்லாத வழிபாட்டு முறைகள் மக்களை கவரக் கூடியதாகவும் இருந்தது.
யோகசுவாமிகள் அனைவரையும் சந்தவிதமான வித்தியாசங்கள் இல்லாமல் சமமாக நடத்தினார் பலர் அவருடைய முன்னிலையில் சரியான இணக்கம், அமைதி மற்றும் தெய்வீக அனுபவங்களால் கவரப்பட்டனர். இந்த ஆன்மீகத் தன்மை பவ பக்குவமடைந்த ஆன்மாக்கள் யோகசுவாமிகளால் கவரப்பட்டனர். Sir பொன்னம்பலம் இராமநாதன், கலைப்புலவர் நவரெட்னம், சோமசுந்தரப்புலவர் போன்ற கல்விமான்களும், வயல்களில் வேலை செய்பவர்களும் மாட்டு வண்டி ஒட்டுபவர்களும் சுருக்கமாக எல்லாவிதமான மக்களாலும் யோகசுவாமிகள் சூழப்பட்டு இருந்தார். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நாத்திகர்கள், மற்றும் குடிப்பழக்கத்திற்கும் புகைபிடித்தனுக்கும் அடிமையானவர்களும் கூட அவர் முன்னால் சாஷ்டாங்கமாக அமர்ந்திருப்பார்கள். நாள்முழுவதும் மக்களால் மோட்டார் வண்டிகள் மாட்டு வண்டிகள், மற்றும் வரு வண்டிகள் வரிசைகளாக கொழும்புத்துறையிலுள்ள அவரது ஆசிரம வீதியில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கும்..
காலை தொடக்கம் இரவு வரை குடிசைக்குள் பலர் வருவார்கள். அவர்களுக்கு துரையப்பா பாடிய தேவாரப் பாடங்கள் மட்டுமே அங்கு கேட்கும். ஒவ்வொரு நாளும் மாலையில் சிவபுராணம் ஓதப்படும். ப எண்ணிக்கையான அடியார்கள் யோகசுவாமிகளின் முன் திரண்டு விவபுராணத்தைப் பாடி வந்தார்கள். அவர்களின் முன்னால் அமர்ந்து அவர்களைச் சுற்றி ஒரு தெய்வீகத் தன்மை வழங்கியபடி இருப்பார்.
யோகசுவாமிகள் மக்களுக்கு ஆழமான தெய்வீக உண்மைகளை மிகவும் எளிமையான மொழியில். பழக்கமான குரலில் கதைத்து விளங்கவைப்பார்,
சிலநேரங்களில் பகவத்கீதை, விவேகசூடாமணி, மற்றும் ஆன்மீக, தத்துவப் படைப்புகள் ஆகியவற்றில் இருந்து அடியவர்களின் தேவைக்குப் பொருத்தமானதாக சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாசிக்கப்படும்.
யோகசுவாமிகளால் குறுக்கீடு செய்யப்பட்டு அதன் கருத்துக்கள் ஆழப்படும் பொழுது குடிசையில் இருக்கும் அடியார்களின் இதயங்களில் முழு விளக்கமும் எய்தப்படும். பல அம்சங்களால் கொழும்புத்துறை ஆசிரமம் ஒரு உயிர் உள்ள கடவுளின் கோவிலாகப் பிரதிபலிக்கும்.
அனைத்து வயதினரும்.எல்லாத் தரப்பு மக்களும் ஜாதி, இனம் பாராமல் யோசுசுவாமிகளிடம் ஆன்மீக வழிகாட்டுதல்களை பெறுவதற்காக வருவார்கள். யாரும் வெறுங்கையுடன் திரும்பிப் போவதில்லை அவர்களுக்குத் தேவையான பதில்கள் ஒரு பார்வையால் அல்லது சில சொற்களால் அல்லது அவர்களுக்குள் எழும் ஒரு சிந்தனையால் அவர்களுக்கு போகசுவாமிகளால் வழங்கப்படும், மனதில் எழும் எந்த ஒரு கேள்விக்கும் விடை அவரிடமிருந்து எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உடனடியாக வரும். சில நேரங்களில் பதில் அளிக்கப்பட்ட விதம் வழக்கத்திற்கு மாறானதாகவும், நட்டற்றதாகவும் இருந்தாலும், அது எப்பொழுதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
யோகசுவாமிகள் ஒருநாளும் விரிவுரைகள் அல்லது சமய வகுப்புகள் நடாத்தவில்லை அவருடைய போதனைகள் தன்னிளாக அவ்வப்பொழுது வெளிப்படும் யோகசுவாமிகள் ஒருவருக்குக் கொடுக்கும். மறுமொழிகள் அங்கிருக்கும் பல அடியார்களுக்கு உதவும் வகையில் சொல்லப்படும் போககவாமிகளுடைய அடியார்கள் நாடு முழுவதும் பரவியிருந்தனர். அதில் தொலைதூர இடங்களான இரத்தினபுரி, பேராதனை, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, தியத்தலாவை சிலாபம் போன்றவைகளும் அடங்கும் அவர்களில் சில அடியார்கள் அரசாங்க ஊழியர்கள், அவர்களால் அடிக்கடி யோகசுவாமிகளை அவருடைய ஆச்சிரமத்திற்கு வந்து பார்க்கமுடியாது. எப்பொழுதும் அந்த அடியார்களுக்கு யோகசுவாமிகளைத் தேவைப்படும் பொழுதெல்லாம் யோகசுவாமிகள் அவர்களுடைய இல்லங்களுக்குச் சென்றுள்ளார். யோகசுவாமிகள் -அவர்களுடைய பூஜை அறைகளுக்குச் சென்று தியானத்தில் இருந்து பின்னர் அவர்களுடைய குடும்பத்திற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கி அவர்களுடைய கலங்கிய மனைதத் தெளிவுபடுத்தியுள்ளார்.
யோகசுவாமிகள் ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு என்று மலைநாடுகளுக்கும் சென்று வருவார். யோகசுவாமிகள் ஆன்மீக அறிவைப் பரப்புவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆன்மீக கல்வியைப் பரப்புவதற்கான வலுவான செயல்முறைகளை நிறுவுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 1928இல் வித்துவான் K.K.நடராஜா என்பவர் வீரகேசரி தேசிய பத்திரிகையிலும் தினகரன் தேசிய பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்த அனுபவங்கள் கொண்டவர். இவருடன் யோகசுவாமிகளுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அப்பொழுது வித்துவான் K.K.நடராஜா அச்சிடும் தொழிலைத் தொடங்கி இருந்தார். அவருடைய குடும்பம் யோகசுவாமிகளைப் பிரார்த்தனை செய்து அவருடைய அச்சிடும் தொழில் பாதுகாப்பாகவும் அது தொடர்ந்து வெற்றிகரமாகவும் முன்னேற்றம் அடைய வழிகாட்டுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவ் அச்சுப் பதிப்பகத்தை Sir.துரைசாமி என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டு “கலைவாணி அச்சகம்” என்று பெயரும் வைக்கப்பட்டது. யோகசுவாமிகள் அச்சகத்திற்கு சென்று “நீ தொடங்கிவிட்டாய் இனி இதை நன்றாக நிர்வாகம் செய்” என்று கூறினார். ஒரு வாரத்தின் பின் வித்துவான் K.K.நடராஜா அவரது ஆசிரியர்/அச்சிடும் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு புதுப் பத்திரிகையை ஆரம்பிக்க ஊக்கப்படுத்தப்பட்டார். அப்பொழுது அவர் யோக சுவாமிகளிடம் அப்பத்திரிகைக்கு ஒரு பெயர் சூட்டும்படி கேட்டுக்கொண்டர். ஆனால் யோகசுவாமிகள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிவிட்டார். பின்பு ஒரு வாரத்தின் பின் யோகசுவாமிகள் வித்துவானிடம் திரும்பவும் சென்று “சிவதொண்டன்” என்று அந்த பத்திரிகைக்குப் பெயர் சூட்டி ஆரம்பத்தில் ஒரு சிறு எண்ணிக்கையில் அதை அச்சிடும்படி கேட்டுகொண்டார்.
வித்துவான் K.K.நடராஜா இப்புதிய பத்திரிகையை ஒரு நல்ல நாளான மார்கழித் திங்களில் யோக சுவாமிகளால் வழிகாட்டப்பட்ட “நான் யார்” என்ற பொருள் தலைப்பில் அச்சிலிட்டார். முதல் சிவதொண்டன் பத்திரிகை தை மாதம் 1935ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பத்திரிகை ஆன்மீகம், ஆன்மா உணர்தல் பற்றிய கட்டுரைகளுடன் எழுதியவர்களின் பெயர்கள் இன்றியும் எந்த ஒரு விளம்பரங்களும் இன்றியும் இலவசமாக வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை உயர் ஆன்மீக கட்டுரைகளின் உள்ளடக்கத்தை கொண்டிருப்பதன் காரணத்தால் இது தொடர்ந்து காலம்காலமாக வெளியிடப்படுமா என்பதில் மக்கள் சந்தேகத்துடன் ஆச்சரியப்படத் தொடங்கினார்கள். மூன்றாம் பத்திரிகை 12-02-1935இல் வெளியிடப்பட்டது. வித்துவான் K.K.நடராஜா யோகசுவாமிகள் சரியான மனநிலையில் இருக்கும் பொழுது அப் பத்திரிகையில் வர இருக்கும் ஒரு கட்டுரைக்குத் தலைப்பு வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது யோகசுவாமிகளுடைய ஆரம்ப பதில் “நாங்கள் அத்தகைய செயல்கள் செய்வதில்லை என்பது உமக்கு தெரிய வேண்டும்.” என்பதாகும். அதைத் தொடர்ந்து சில வாக்கியங்களை வித்துவான் K.K.நடராஜாவிடம் கூறி இதை எழுதி அப் பத்திரிகையில் வெளியிடும்படி கூறினார். அப்பொழுது வித்துவான் K.K.நடராஜா இதற்குத் தலைப்பைப் பரிந்துரைக்கும்படி கேட்டபொழுது அவர் வித்துவான் K.K.நடராஜாவை தான் கூறிய அந்த வாக்கியங்களைத் திரும்ப ஒரு முறை படிக்குமாறு கூறினார். அவ் வாக்கியங்களின் ஒரு பகுதி வாசிக்கப்பட்ட பொழுது “சிந்தித்துச் சிந்தித்து கீழ்மையான குணங்கனைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக…” யோகசுவாமிகள் ” இதெல்லாம் நல்ல சிந்தனைகள் தானே?” என்று கூறினார். அதன் பின்னர் வித்துவான் K.K.நடராஜா “நற்சிந்தனை” என்ற தலைப்பை வைக்கலாமா? என்று யோகசுவாமிகளிடம் கேட்டார். அதற்கு யோகசுவாமிகள் “நற்சிந்தனை” என்ற தலைப்பையே வைக்கும்படி சம்மதம் தெரிவித்தார்.
“நற்சிந்தனை” என்ற தலைப்பில் முதலில் வெளிவந்த கட்டுரையில் யோகசுவாமிகளால் வித்துவான் K.K.நடராஜாவிடம் கூறப்பட்ட வாக்கியங்கள் கீழ்வருமாறு:
“ஒரு குறையுமில்லை”
“சிந்தித்துச் சிந்தித்துத் தெய்வதத்துவத்தை அடைவோமாக”
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை. அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது. நமக்கு ஒரு குறைவுமில்லை. நாம் என்றுமுள்ளோம். எங்குமிருக்கிறோம். எல்லாமறிவோம்.
இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக் கீழ்மையான குணங்கனைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.
‘சந்ததமு மெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றி யில்லாத்’







