
உ
சிவமயம்
5.6 எங்கள் சந்தசுவாமிகளுக்கு அஞ்சலி 23-12-2004
ஈஸ்வரனுடைய அஞ்சலி.
என்றென்றும் கடவுளுடன் 12-12-2004 வழங்கப்பட்டது: 23-12-2004
நான் Lord Soulbury யை முதல் முதல் சந்தித்த போது இருந்ததைவிட இன்று அவர் மிகவும் உயிருடன் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
“நான் கடவுளுடைய மகன், எனவே நீங்கள் அனைவரும் கடவுளுடைய குமாரர்கள், கடவுளுடைய பிள்ளைகள்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளுக்கு அவர் ஒரு உயிருள்ள சாட்சியாக இருந்தார்.
சமய நூல்களில் இருந்து மற்றய சமய குருமாரிடமிருந்தும் இந்த உண்மையை அறிந்து கொள்வதில் அவர் திருப்தியடையவில்லை. அவர் அதைத் தானாகவே தேடித் தெரிந்துகொண்டு அதை அனுபவிக்க விரும்பினார். அந்த இலக்கை அடைவதற்கு – அவரது உடல், உடைமைகள் மற்றும் அவருடைய ஆன்மா ஆகியவற்றை ஒரு விலகாத, இடைவிடாத நோக்கம், ஒற்றை மனப்பான்மையுடன் அவர் தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார் – இதை இந்தப் பாதையைப் பின்பற்றி உண்மையை தாங்களால் உணர்ந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இவர் தனது ஆராய்ச்சியை முன்பே தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் நாங்கள் அறிந்ததிலிருந்து இலங்கையில், அவரது ஒவ்வொரு சிந்தனையும், வார்த்தையும், செயலும் வாழ்க்கையின் இந்த ஒரு வலிமையான நோக்கத்திற்காக ஆயத்தப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது.
Lord Soulbury எழுதிய புத்தகத்திற்கு தான் எழுதிய முன்னுரையில் ‘யோகசுவாமிகளின் பாடல்களும், அருள்மொழிகளும்’ தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஆகும். நற்சிந்தனை (நல்ல எண்ணங்கள் என்று பொருள்) Lord Soulbury “யோகசுவாமிகளை” பற்றிக் குறிப்பிடும் பொழுது, “அவர் ஒரு மனித உடலில் இருக்கும் போதே முக்தியடைந்தவர் என்றும் ஒரு உண்மையான குரு என்றும், ஒரு உண்மையை உணர்ந்த ஆன்மா என்றும் குறிப்பிட்டுவார். தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக வட இலங்கையில் வசித்து வந்த இவர் 1964ஆம் ஆண்டில் தனது உடலைவிட்டு வெளியேறினார்”.
எனது மிக முக்கியமான அனுபவம் 30 மார்கழி 1963 அன்று நடந்தது. குறிப்பாகக் கூறின் 41 ஆண்டுகளுக்கு 6 நாட்களே இருக்கும் தருவாயில் நாங்கள் Lord Soulbury ஐ எங்கள் நண்பராக கருதியிருந்தோம். இது வட இலங்கையிலுள்ள கொழும்புத்துறை என்ற கிராமத்தில் நடந்தது.
இந்த நாளில், அதிகாலை கோவில் வழிபாட்டுக்குப் பின்னர் நானும் எனது தாயாரும் எப்பொழுதும் போலவே என் சின்னம்மாவின் இடத்தில் இருந்த யோகசுவாமிகளைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் யோகசுவாமிகளை அப்பு என்று (தமிழில் தாத்தா என்று பொருள்படும்) அழைப்போம். எனது தாயார் என்னை அப்புவுடன் விட்டுவிட்டு தனது சகோதரியைச் சந்திக்கச் செல்வார். அப்பு எனது தாயாரை அவ்வுடைய சகோதரியுடன் சேர்ந்து 10 அடியார்களுக்கு உணவு தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.
யோகசுவாமிகளின் இந்த வகையான அறிவுறுத்தல்கள் எங்களுக்கு வழக்கமான வேண்டுகோள்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு, Lord Soulbury அப்புவுடைய கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு வந்தார். நாங்கள் Lord Soulbury வந்துள்ளதை அப்புவிற்கு தெரியப்படுத்தியதும், அப்பு மிகவும் பாசமான குரலில் “அவன் வந்துவிட்டான், அவன் வந்துவிட்டான்” என்று உரக்க அழைத்தார். அப்பு, Lord Soulbury, மற்றும்
நான் மூவரும் தான் அப்பொழுது ஆசிரமத்தில் இருந்தோம். Lord Soulbury அணிந்திருந்த ஆடைகளை அகற்றி, அவற்றைத் துவைத்து உலர வைக்கும்படி அப்பு எனக்கு உத்தரவிட்டார். பின்னர் தண்ணீர் கொண்டு வந்து Lord Soulbury ஐக் குளிக்கவாக்குமாறு எனக்கு உத்தரவிட்டார்.
.
பின்னர் Lord Soulbury யின் உடல் முழுவதும் புனித திருநீற்ரைக் கொண்டு பூசும்படி எனக்கு கட்டளையிட்டார். மேலும் Lord Soulbury க்கு பதிய ஆடைகளை அணிவிக்குமாறு எனக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் பஞ்சாலாத்தியில் கற்பூரத்தை ஏற்றி அவருக்கு முன் வைத்து அவருக்குப் பூசை செய்யுமாறு எனக்கு உத்தரவிட்டார்.
இந்த தனித்துவமான சடங்குகளின் பின், யோகசுவாமிகள் பின்வருமாறு கூறினார்:
“இன்று முதல் நீங்கள் ஒரு சந்நியாசி (பொருளாசையைத் துறக்கும் ஒருவர்) மற்றும் உங்கள் பெயர் சந்தசுவாமி”
எனது தாயாரினதும் எனது சின்னம்மாவினதும் கட்டளையின்படி நான் இரு சுவாமிகளுக்கும் முன் விழுந்து வணங்கினேன்.
இந்த சடங்கு முடிவடைந்த உடனே மக்கள் மெதுவாக எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்தனர் – மொத்தத்தில் 10 அடியார்கள், அவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. உணவு அருந்தியதன் பின் அருகில் உள்ள நண்பரின் வீட்டில் ஓய்வெடுப்பதற்காக சந்தசுவாமிகள் அனுப்பிவைக்கப்பட்டார்.
யோகசுவாமிகள் மாலை நேரத்தில் அவரைப் பார்க்கச் சென்று அவருடன் சேர்ந்து தேநீர் அருந்தினார்.
1961ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தினால் நடக்க முடியாமல் இருந்த யோகசுவாமிகளை, சந்தசுவாமிகளால் கொண்டு வரப்பட்ட சக்கரநாற்காலியில் அவரை அமர வைத்து சந்தசுவாமிகளிடம் அழைத்துச் சென்றேன்.
1963ஆம் ஆண்டு இத்தீட்சைக்குப் பின்னர் சந்தசுவாமிகள் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வசித்து வந்தார். அங்கு அவர் ‘சிவதொண்டன் நிலையம்’ என்ற அமைப்பை நிறுவினார். இது சுயமுயற்சி, கடமை மற்றும் இரட்சிப்பின் பாதையை நோக்கிச் செல்வதற்கு இளைஞர்களையும் முதியவர்களையும் ஊக்குவிற்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இந்தக் கால கட்டத்தில் சந்தசுவாமிகள் நெற்பயிர்செய்கைகளில் தானும் ஈடுபட்டு இளைஞர்களுக்கு விவசாயத்தையும் சுயஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தார்.
சந்தசுவாமிகள் வடக்கு இலங்கையில் ஒரு மகளிர் மன்றத்தை நிறுவி அதில் இளம் பெண்களுக்கு துணி நெசவு முறைகளைக் கற்பித்துக் கொடுப்பதற்காகவும் அதே நேரத்தில் மத நம்பிக்கைகளையும் வலுப்படுத்துவதற்காகவும் இதை அமைத்தார்.
1964ஆம் ஆண்டு யோகசுவாமிகள் மகாசமாதி அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன், நான் அவருக்கு தேவையான சேவைகளைச் செய்து, பாடசாலைக்கு செல்வதற்கு முன்னும் பின்னும் காலையிலும் மாலையிலும் சக்கரநாற்காலியில் அவரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லுவேன்.
1969ஆம் ஆண்டு நான் இங்கிலாந்துக்கு வந்தபோது சந்தசுவாமிகள் என்னுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.
அவரது கடிதத் தொடர்பு எப்பொழுதும் எனக்கு இந்த நாட்டில் ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வழிகாட்டியது. :
எனது பட்டப்படிப்பின் முடிவுகள் கிடைத்தவுடன் நான் சந்தசுவாமிகளுக்கு கடிதம் எழுதிய பொழுது அவர் எனக்கு எழுதிய பதில் கடிதம் பின்வருமாறு:
செங்கலடி
E.P
இலங்கை
எனது அன்புள்ள ஈஸ்வரன்,
மிகவும் நன்றாகச் செய்துள்ளீர்கள். உங்களது இறுதிப் பரீட்சையை மிகவும் நன்றாக செய்துள்ளதை அறியும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மற்றும் உற்பத்திப்பிரிவில் நீங்கள் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். எனக்கு விளங்கிய அளவில் நீங்கள் இந்தப் பொறியியல் பிரிவில் தான் சிறப்படைய விரும்புகிறீர்கள் என்று.
இப்பொழுது உங்களுடைய இரண்டாவது அத்தியாயம் தொடங்குகிறது. மற்றும் நீங்கள் சுவாமிகளுடைய ஆசீர்வாதத்தோடு அதிலும் சரிசமனாக வெற்றியடைவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
சுவாமி எந்தநேரமும் ஒழுக்கத்தோடு இருப்பதற்கு அழுத்தம் கொடுப்பார். அவர் சொல்வது அதில் தான் எல்லாம் தங்கியிருக்கின்றது. அதன் விளக்கத்தை முயற்சி செய்து சிந்தித்துக் கோட்பாட்டளவிலும் நடைமுறையளவிலும் பார்த்து ஒவ்வொரு தருணத்திலும் நினைவு கூர்ந்தால் ஒன்றும் பிழை போகாது. எல்லாம் உமக்கு வெற்றிகரமாக நடைபெறும். ஆனால் எல்லாம் சுலபமாக செல்லும் என்று தீர்மானித்துவிடக்கூடாது. சிரமங்கள் ஏற்படலாம் ஆனால் அவைகள் கடவுளின்; ஆசீர்வாதங்கள் என்று சுவாமி கூறினார்.
நான் நினைக்கிறேன் உங்களால் Oxford நிறுவனத்தால் வழங்கப்படும் தங்கும் இடத்தை கண்டுபிடிக்கமுடியும் என்றும், அத்துடன் அங்கிருப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்படும் பொறியியல் பயிற்சிகளுக்கு நீங்கள் கூடுதலான லாபம் பெறலாம் என்றும்.
அனைத்து நல் வாழ்த்துகளுடன்
எல்லாம் சரி
தொண்டன்.
சந்தசுவாமி
P.S. உங்களுக்கு உங்களுடைய புதிய முகவரி தெரிய வந்ததும் எனக்கு அனுப்பி வைக்கவும்.
எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கிறது என்ற தனது குரு யோகசுவாமிகளின் எண்ணங்களை அவர் தொடர்ந்து எனக்கு நினைவூட்டினார். இது கடவுளின் விளையாட்டு. எல்லாம் நன்றாக நடக்கிறது.
மேற்கு நாட்டிலிருந்து வந்த இந்த மாமனிதர் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்து எல்லாவற்றையும் என்னால் விபரிக்க முடியாது, அவர் எனக்கு ஆன்மீக வழிகாட்டுதலைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் செய்தார்.
அவர் எனக்கு ஒரு முறை எழுதினார் “யார் ஒருவர் ஒரு பரிபூரண முனிவரின் பாதுகாப்பைப் பெற்றாரோ, அவர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.”
“மகாவாக்கியம்” இதில் கூறப்பட்டுள்ளதை சந்தசுவாமிகள் 12-12-2004 வரை தொடர்ந்து செய்த வேலைகளையும் கடமைகளையும் எடுத்துக் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்.
வேதாந்தம், சித்தாந்தம், யோகா சாஸ்திரங்கள், இந்துக்களின் பிறநூல்கள், பண்டைய தமிழ் மொழி பற்றிய அவரது ஆராய்ச்சி மற்றும் அந்த மொழியில் அவர் பெற்ற திறமை ஆகியவற்றைப் பற்றிய அவரது திறமையான அறிவு, அவரது அளவீட்டு நற்சிந்தனைப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு (உண்மையில் தமிழில் நல்ல எண்ணங்கள் என்ற பொருள்) இதில் யோகசுவாமிகளின் பாடல்களையும் அருள்மொழிகளையும் தொகுத்து வழங்கியதன் சாதனைகளும் அடங்கும்.
இலங்கையில் இருந்த பொழுது “கடவுளுடைய பிரார்த்தனையின் மறுசரணடைவு” (Lords Prayers) என்ற மற்றுமொறு புத்தகத்தையும், இங்கிலாந்து திரும்பிய பின்னர் “தினசரி தியானத்திற்கான நேர்மறை எண்ணங்கள்” (Positive thoughts for daily meditation) என்ற புத்தகத்தையும் சந்தசுவாமிகள் எழுதினார்.
சந்தசுவாமிகள் தனது எழுத்துக்களில் “சத்தியத்தை அடைதல்” என்பது நீங்களும் கடவுளும் ஒன்று என்பதை அறிந்து கொள்ளுவது என்று பொருள்படும் வகையில் ‘கடவுள்’ அல்லது ‘அது’ என்ற ஒரே ஒரு யதார்த்தம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார். இதன் பொருள் நாங்களே எங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுதல் ஆகும்.
அப்புவுடைய ‘தீட்சை’ பற்றி குறிப்பிடுகையில் “’உயர் மட்டத்தில் இது ஒரு புதிய பிறப்பு’ என்பதன் தொடக்கம் மற்றும் ஒரு நுட்பமான தளத்தில், உடலியல் செய்முறைக்கு ஒத்திருக்கிறது” என்று கூறுகிறார். மற்றும் அவர் தொடர்ந்து கூறுகிறார் “தீட்சையின் தருணத்திற்கும் சத்தியத்தை உண்மையாக உணர்வதற்கும் இடையிலான இடைவெளி சீடரின் முதிர்ச்சி பெறும் தன்மையில் நீண்டதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.”
நான் தலைவணங்குகிறேன், கைகூப்பி வணங்குகிறேன், என் நாட்டு மக்களுடன் சேர்ந்து வணங்குகிறேன், Lord Soulbury யை அறிந்தவர்கள், அவரைச் சந்தசுவாமிகள் என்று தான் அறியப்பட்டவர்கள்.
மலையின் மேல் வைக்கப்பட்ட இந்த ஒளிமலையானது ஒரு தாயாகவும், தந்தையாகவும், ஆசிரியராகவும் ஒளிர்கின்றதற்கு முன் நாங்கள் விழுந்து வணங்குகிறோம்.
ஒரு தவறு (அல்லது தீங்கு) எங்கும் இல்லை.
எங்களுக்கு ஒன்றும் தெரியாது.
இது நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டது. (அல்லது அது ஆரம்பத்தில் இருந்தே சரியானது மற்றும் முழுமையானது.)
அனைத்தும் உண்மை.
(எல்லாம் முழு உண்மை)
K.சிவயோக ஈஸ்வரன்
பேர்மிங்ஹாம்
இங்கிலாந்து
23-12-2004





