உ
சிவமயம்
5.1 மார்க்கண்டு சுவாமிகள்

மார்க்கண்டு சுவாமிகள் 29-01-1899 அன்று பிரான்பற்று என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்களால் இவருக்கு “மார்க்கண்டு” என்று பெயரிடப்பட்டது. இவரது தந்தையின் பெயர் சரவணமுத்து, தாயாரின் பெயர் சின்னக்குட்டி.
மார்க்கண்டு சுவாமிகளின் ஆரம்பக்கல்வி பிரான்பற்றுவிலுள்ள சிறுவர் பள்ளியிலும் வடலியடைப்பு சைவ வித்தியாலயத்திலும் நடந்தது.
இவருடைய இடைநிலைக் கல்வி கந்தரோடை இந்து கல்லூரியில் நடந்தது, அவர் அங்கு கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) தகுதியைப் பெற்றார். தனது சிறுவயதில் உள்ளூர் முருகன் கோவில் ஆன்மீக நடவடிக்கைகள் மற்றும் பிரார்த்தனைகளில் மூழ்கியிருந்தார். அங்கு அவர் திருவதவூர் புராணம் மற்றும் திருமுறைப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். சைவ ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது, மேலும் அக்கொள்கைகளுக்கிணங்க, அசைவ சூழலில் ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
1918இல் கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) தகுதியுடன் இவருக்கு நில அளவையாளர் (Surveyor) துறையில் தியத்தலாவையில் உத்தியோகம் கிடைத்தது. மார்க்கண்டு சுவாமிகளுக்கு யோகசுவாமிகளின் வழிகாட்டுதலைக் கீழ் வரும் நற்சிந்தனைப் பாடலில் காணலாம்: இக்காலகட்டத்தில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
திருவம்மானானை
அங்குமிங்குமாக வளைந்து
திரிவேனைத் தங்குங் கருணையினாற் றானாண்டு கொண்டான்
எங்கள் குருநாதன் எழிலார் திருவடியை
இங்குநாம் பாடி யின்புறுவோ மம்மானாய்
ஆருமறியாமல் அந்தரங்கமாயருளைச்
சேரும்படி வைத்த செல்வக்குருநாதன்
ஊரும் பேருமறியா வொருவன் கழல்பாடி
நீரும்பூவுங் கொண்டுநிதம் போற்றுதுங்கா ணம்மானாய்.
மார்க்கண்டு சுவாமிகள் யோகசுவாமிகளை 1918ஆம் ஆண்டு தியத்தலாவைவில் அவர் உத்தியோகத்தில் இருந்த பொழுது முதல் முதலாகச் சந்தித்தார்.
மார்க்கண்டு சுவாமிகள் தனது குடும்பம், மற்றும் சமூக சேவைகள் செய்து கொண்டிருந்த பொழுது அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு யோகசுவாமிகள் தேவையான வழிகாட்டல்களைச் செய்து வந்தார்.
மார்க்கண்டு சுவாமிகளின் நேரம் தவறாமை, வேலையைக் கற்றுக்கொள்ளும் முறை, மற்றும் நில அளவைாயாளர் துறையில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் விவரங்கள் மீது கவனம் செலுத்துவது நன்கு அங்கீகரிக்கப்பட்டது. மேலும், அவர் அனைவராலும் நன்கு மதிக்கப்பட்டார்.
யோகசுவாமிகளின் தெய்வீகக் கருணை அவர் மீது விழுந்து மார்க்கண்டு சுவாமிகளைப் பாதுகாத்தது, மற்றும் சுவாமிகளை எந்த ஒரு வெளிப்பகட்டும் இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழ வழிகாட்டியது. இக் கொள்கையும், வடிவமைப்பும் சுவாமிகளைத் தனது தொழில் வாழ்க்கையில் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட அனுமதித்தது. யோகசுவாமிகள் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தேவையான அனுபவங்களை வழங்கி, தொடர்ந்து அவருக்கு வழிகாட்டினார். இவ்வாறாக மார்க்கண்டு சுவாமிகளின் ஆன்மீகப் பயணத்திற்கு யோகசுவாமிகளின் கருணை அடித்தளமாக அமைந்தது.
பொறுமை, அமைதி போன்ற தேவையான அனைத்துப் பண்புகளும் மார்க்கண்டு சுவாமிகளிடம் ஆதாரமாக இருந்தன. மார்க்கண்டு சுவாமிகள் தனது உத்தியோகத்தில் செல்வத்தையோ அல்லது பதவி உயர்வுகளையோ பெறுவதற்கான எந்த உந்துதலையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் பிரமச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தார்.
மார்க்கண்டு சுவாமிகள் தனது அனைத்து பாரம்பரிய சொத்துக்களையும் பிரான்பற்று முருகன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
மார்க்கண்டு சுவாமிகள் தனது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் கடைப்பிடித்தார். அத்துடன் வேறு எந்த ஆலோசனைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. மார்க்கண்டு சுவாமிகளின் தத்துவம், ஒரு நில அளவையாளர் எப்படி ஒரு வீதியை உருவாக்கும் பொழுது அதில் வரும் தடைகளை வெட்டி நீக்குவது போல் அவரும் தனது சுய வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கி அதே கொள்கைகளைக் கடைப்பிடித்தார்.
மார்க்கண்டு சுவாமிகள் தனது முழுமனத்துடன் உத்தியோகத்தில் பணியாற்றினார். அதே சமயம் யோக சுவாமிகள் வழங்கிய ஆன்மீகம் மற்றும் மத நடைமுறைகளையும் பின்பற்றினார்.
விடுமுறை நாட்களில் அவர் தனது வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரைக் கவனித்துக் கொள்வார், தனது சகோதரியின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளார், மேலும் உள்ளூர் நூலகம், பள்ளி மற்றும் கோவில் வளர்ச்சிகளில் ஈடுபட்டார். அவர் தினமும் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை மற்றும் தியானத்தை கண்டிப்பாகப் பின்பற்றினார்.
யோகசுவாமிகள் தியதலாவைக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது அவரைப் பார்க்கச் வெல்வார்;. இந்த வருகைகளின்போது மார்க்கண்டு சுவாமிகளுக்குத் தியான நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டதோடு உணவு உட்கொள்ளும் நடைமுறைகளும் அதை எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய உபதேசமும் வழங்கப்படும்.
மார்க்கண்டு சுவாமிகளின் உத்தியோகம் கொழும்பிற்கு மாற்றப்பட்ட பொழுது, அவர் கொழும்பில் கல்விமகான்களால்; நடத்தப்பட்ட சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்து கொண்டார்.
யோகசுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்குப் பரபரப்பான மற்றும் இரைச்சல்/சத்தம் கூடிய சூழலில் எப்படி சுய உணர்வு நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிவந்தார்.
அக்காலகட்டத்தில் தெய்வீக கருணை மார்க்கண்டு சுவாமிகளை சந்தோஷமாக உண்மையான சுய உணர்தலையும் மனக் கட்டுப்பாட்டையும் அனுபவிக்க வைத்தது.
1949இல் மார்க்கண்டு சுவாமிகள் 50 வயதான போது தனது முழுநேர உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்று யோகசுவாமிகளிடம் முழுமையாக சரணடைந்தார்.
யோகசுவாமிகள் அவரது முழுமையான முற்றும் துறந்த சமர்பிப்பை ஏற்றுக் கொண்டு வண்ணார் பண்ணையிலுள்ள ஒரு வீட்டில் அவரை இருக்க வைத்தார். யோகசுவாமிகள் முன்கூட்டியே 1938 முதல் கைதடியில் மார்கண்டு சுவாமிகளுக்கான இறுதி இல்லத்தைத் தயாரிக்கத் தொடங்கினார்.
1938இல் யோகசுவாமிகள் கைதடியில் இருந்த குடும்பத்திற்கு அவர்களது காணிக்குள் ஆசிரமம் ஒன்றை கட்டுமாறு கேட்டுக் கொண்டார். 1940இல் அந்தப் புதிய ஆசிரமத்தில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பால் காய்ச்சப்பட்டது. அதனை நாவற்குளி ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இருந்த யோகசுவாமிகளுக்கும் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
அந்த ஆசிரமத்தில் அன்று முதல் விளக்கு ஏற்றப்பட்டு வந்தது. 07-02-1942 அன்று யோகசுவாமிகள் பனங்கிழங்கு வாங்குவதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அவர் இடைவழியில் கைதடிக்கு சென்று கைதடியிலிருந்த குடும்பத்துடன் மதிய உணவை உட்கொண்டார். அவர்களோடு இருக்கும் பொழுது யோகசுவாமிகள் தான் பனங்கிழங்கு வாங்குவதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறிய பொழுது கைதடி குடும்பத்தினர் யோகசுவாமிகளுக்கு அவருக்குத் தேவையானளவு பனங்கிழங்குகளை கொடுத்தனர். யோகசுவாமிகள் அதற்கு 5.00/= ரூபாயை அவர்களிடம் கொடுத்தார். இந்த கைமாறு அந்த வீட்டுக்காரரை நல்ல விருத்தி, வளம் கொண்டவர்களாக மாற்றியது என நம்பினார்கள். கைதடியில் இருந்த அந்தக் குடும்பத்துடன் வசித்து வந்த ஆசிரியர் விசுவலிங்கம் கொழும்புத்துறை ஆசி ரமத்திற்கு அடிக்கடி (வாரத்திற்கு ஒரு முறையாவது) வந்து தரிசனம் செய்து வந்தார்.
25-12-1950 அன்று யோகசுவாமிகள் விசுவலிங்கம் மாஸ்டரிடம் கைதடியில் அமைத்த புதிய ஆசி ரமத்தைத் தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார், அத்துடன் “நான் உங்களுக்கு ஒரு நண்பரைக் கொடுக்கப் போகிறேன், அவர் வெளியேறும் பொழுது, அவர் எல்லாவற்றையும் உங்களுக்காக விட்டுவிடுவார்” என்று கூறினார். பின்னர் யோகசுவாமிகள் விசுவலிங்கம் மாஸ்டரை கொழும்புத்துறையிலேயே தங்குமாறு கேட்டுக் கொண்டு, பின் 27-12-1950 செவ்வாய்கிழமை அன்று திரும்பச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
யோகசுவாமிகள் கைதடிக்கு இட்டலியுடன் அந்தக் குடும்பத்தினரிடம் சென்று 30-12-1950 வெள்ளிக்கிழமை அன்று மார்க்கண்டு சுவாமிகளின் வருகைக்காக அந்தக் குடும்பத்தினரைத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் யோகசுவாமிகளும் மார்க்கண்டு சுவாமிகளும் 29-12-1950 அன்று ஒரு காரில் வந்து “இன்று ஒரு நல்ல நாள்” என்று கூறியபடி படுக்கை, மெத்தை மற்றும் பிரஷர் குக்கர் ஆகியவற்றுடன் வந்தனர். பின்னர் கார் திரும்பி அனுப்பப் பட்டது. கொண்டு வந்த பிரஷர் குக்கர் கைதடி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு தேநீர் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 29-12-1950 அன்று மாலை 5.00 மணியளவில் யோகசுவாமிகள் கைதடி ஆசிரமத்தை விட்டு கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு திரும்பினார்.
மார்க்கண்டு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் அதே காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உற்று நோக்கும் போது, யோகசுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளைத் தியத்தலாவையில் அவர் முழு நேர உத்தியோகம் தொடர்ந்த காலத்திலிருந்தே அவருக்கு ஆத்மீக வழிகாட்டி வந்துள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.
மார்க்கண்டு சுவாமிகளுடன் ஆன்மீக முதிர்ச்சி நிலையை அடைந்து, யோகசுவாமிகளின் திருவடியில் சரணடைந்த பொழுது அவருடைய தீட்சை நிறைவேறியது.
யோகசுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளை 29-12-1950 அன்று கைதடியில் ஏற்கனவே தயாராக இருந்த கைதடி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார், அதன் பின்னர் அந்தக் கைதடி ஆசிரமம் மார்க்கண்டு சுவாமிகளின் இறுதி வசிப்பிடமாக மாறியது. இந்நாள் முதல் பொது மக்கள் மார்க்கண்டு சுவாமிகளை “மார்க்கண்டு சுவாமிகள்” என்று முழு மனத்துடன் உணர்ந்து ஏற்றுக் கொண்டனர்.
யோகசுவாமிகள் தவறாமல் கைதடிக்குச் சென்று மார்க்கண்டு சுவாமிகளைத் திடமாக மாற்றும் பொருட்டு, தனது குரு செல்லப்பா சுவாமிகளால் யோகசுவாமிகளுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் அவரை உட்படுத்தினார்.
யோகசுவாமிகளின் மகாசமாதிக்குப் பின்னர், மார்க்கண்டு சுவாமிகள் ஆசிரமத்தில் பக்தர்களைக் கற்பூரத்தை ஏற்ற அனுமதித்தார், மேலும் நற்சிந்தனைப் பாடல்கள் மற்றும் போதனைகளால் பக்தர்களை ஆசீர்வதித்தார்.
மார்க்கண்டு சுவாமிகள் தொடர்ந்து நற்சிந்தனைப் பாடல்களைப் பாடியும் தனது வாழ்நாள் முழுவதும் நற்சிந்தனைப் போதனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் செய்தார்.
மார்க்கண்டு சுவாமிகள் இங்கிலாந்தில் இருந்த சந்தசுவாமிகள் பற்றி விசாரித்தபடி இருந்தார். இவ் விசாரனைகள் சந்தசுவாமிகளை கைதடிக்கு திரும்ப வைத்தது. பின்னர் 05-12-1978 அன்று சந்தசுவாமிகள் கைதடிக்கு மார்க்கண்டு சுவாமிகளிடம் வந்தார். மார்க்கண்டு சுவாமிகள் மகாசமாதி அடைவதற்கு முன்னர் சிறிது காலம்; அவருடைய கடைசி நாட்களில் தனது சேவைகளை சந்தசுவாமிகளால் வழங்க முடிந்தது. 18-05-1984இல் சந்தசுவாமிகள் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.
மார்க்கண்டு சுவாமிகள் 29-05-1984 அன்று சமாதி அடைந்தார். அவருடைய புனித அஸ்தி கைதடி ஆசிரமத்தில் வைக்கப்பட்டது. கைதடி ஆசிரமத்தில் வழக்கமான தினசரிப் பூசைகள், மாதாந்தப் பூசைகள் மற்றும் வருடாந்த குரு பூசைகள் தவறாமல் நடைபெற்று வருகின்றன.

மார்க்கண்டு சுவாமிகளின் கடிதத்தின் உள்ளடக்கம்:
உ
சிவமயம்
அன்புள்ள ஈஸ்வரன்,
உங்களுடைய அன்பான கடிதத்திற்கு மிக்க நன்றி.
சுவாமிகளின் உபதேசம்: “பாடு பட்டவன் பட்டத்தில் இருப்பான்” உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களுடன்
உங்கள் அன்புடன்
S.மார்க்கண்டு
உ
4 St. Anthony’s Street,
லண்டன் NW 11
December 11th
அன்புள்ள ஈஸ்வரனுக்கு
உமது கடிதத்திற்கு நன்றி.
நானும் திருவாதிரை நாளை உம்முடன் கழிக்க விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டமாக இந்த வருடம் அது பொக்ஸிங் (boxing day) நாளில் வருகிறது. அதற்கு முதல் திங்கட்கிழமை (டிசம்பர் 19) நான் டெவன்சயரில் (Devonshire) கிறிஸ்மஸ் (Christmas) ஐ கழிக்க கடவுள் அனுமதித்தால் செல்லவிருக்கிறேன். நான் அங்கிருந்து திருவாதிரைக்கு கொவன்றி (Coventry) வர எத்தனித்தேன். ஆனால் அங்கிருந்து பொதுவாக பர்மிங்காமில் (Birmingham) மாறி கொவென்றிக்கு (Coventry) வருவதற்கு புகையிரதம் கிறிஸ்மஸ் அன்று இல்லை. 26ஆம் திகதியும் மிகக் குறைவு. ஆகவே அதுவும் இயலாது.
நான் நேற்று உமக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள நினைத்தேன். லண்டனை விட்டு வெளியேறுவதற்கு முன் அவ்வளவு வசதியான நாட்கள் இல்லையென்பதால் அவ்வெண்ணத்தைக் கைவிட்டேன். நான் லேலண்ட் (Leyland) டில் போன் வசதி சனிக்கிழமைகளில் இல்லைப் போலும்! நான் உமக்கு என்னைத் தொடர்புகொள்ளும்படி அனுப்பிய செய்தி உமக்குக் கிடைக்கவில்லைப் போலும்! எனக்கு வருகிற கிழமை முடிவில் (டிசம்பர் 17, 18ஆம் திகதி) ஒரு வேலையுமில்லை. ஆனால் என்னைப்பொறுத்தளவில் இந்த நாட்களுக்கு எனக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை ! திரும்பி யோசிக்கும் போது (குருநாதனின் அறிவுரைக்கு எதிராய்) நாங்கள் வருகிற வருடம் (மார்ச் / ஏப்ரலில்) குருபூசைக்கு ஒன்று சேருவோம் என்றொரு சங்கற்பம் செய்வோம். நீர் என்ன நினைக்கிறீர்? ஆனால் அதற்கு முன் நீர் வர விரும்பினால் எப்பவும் வரலாம். ஏனென்றால் உம்மைச் சந்திப்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி! உமக்கு விருப்பமானதைச் செய்யவும்!
புது வேலையைப் பற்றி ஏதாவது தகவல்கள்?
எல்லாம் சரி
எல்லாப் பாக்கியங்களும் உரித்தாகுக!
உமது சக தொண்டன்
சந்தசுவாமி
உ
சிவமயம்
5.4 சந்தசுவாமி கடிதம் – சிவத்தொண்டன் பண்ணை
–
இலங்கை, செங்கலடி சிவதொண்டன் பண்ணையின் நோக்கம் பற்றிக் கேட்ட மேல் நாட்டில் உள்ள ஒரு இளைஞனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
நீங்கள் இங்குள்ள பண்ணையின் நோக்கம் பற்றிக் கேட்டீர்கள். இப் பண்ணையின் முதன்மை நோக்கம் (இது அனைத்து பண்ணைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்) உணவுப் பயிர்களை வளர்ப்பது, அத்துடன் மண்ணின் வளத்தைக் குறைக்காமல் எவ்வளவு உணவுப் பயிர்களை வளர்க்க முடியுமோ அவ்வளவு உணவுப் பயிர்களை வளர்த்தல். இங்கே பெரிய அல்லது சிறிய அளவில் பஞ்சம் எப்பொழுதும் வரலாம், எனவே இவ் அம்சம் மேற்கத்திய நாடுகளைவிட இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது
இப் பொதுவான நோக்கத்தைவிட இங்குள்ள இளைஞர்களுக்கு (15-25 வயது உள்ளவர்கள்) விவ சாயப் பயிற்சியைப் பழக்கி அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பதுதான் எங்கள் நோக்கம்.
இது ஒரு பண்ணைப் பாடசாலையாக இருக்க முடியாது. காரணம், இங்கு வருபவர்களும் வந்து நிலையாக இருப்பவர்களும் சில சமயக் கோட்பாடுகளாலும், சூழ்நிலைகளாலும் அவர்கள் பெரும் அளவு நேரத்தை கமம் செய்யும் வேலைகளில் ஈடுபடுவார்கள்.
மதத்தை வாழ்க்கையின் பிற அம்சங்களிலிருந்து முழுமையாகப் பிரிப்பதும், மதம், தத்துவம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றைத் தனித்தனிப் பிரிவுகளாகப் பாவிப்பதும் ஒரு அற்புத நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பண்டைய காலங்களில், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகள் இரண்டிலும் இது அவ்வாறு ஏற்கப்படவில்லை. சமுதாயத்தின் அமைப்பு அந்த நாளில் ஓர் கூர்நுனிக் கோபுரம் (Pyramid) பிரமிட்டுக்கு சமமான தோற்றத்துடன் அதன் சிகரம் “சமயம்” ஆக அல்லது “கடவுள்” ஆகக் கருதப்பட்டுள்ளது. மேலும் மனிதனின் செயல்கள் தாழ்ந்த நிலையாகவும், ஆனால் அவையோடு சம்பந்தப்பட்டவை. இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் பழைய நாகரிகம் கொண்ட சமூகம், இன்னும் இம்முறையைக் கடைப்பிடித்து வருவதைக் காப்பாற்றிக் கொள்ளல் அவசியமாகும்.
ஒரு சிறிய அளவில் அதே அமைப்பும் இங்கும் பொருந்தும். விவசாயமும் மதமும் ஒரு முழுமையின் பல்வேறு அம்சங்களை உருவாக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும் – ஒரு மனிதனின் இயற்கை வாழ்க்கையில். உணவு இல்லாமல் ஒருவரும் வாழ முடியாது. உண்மையில் நாம் இங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பண்டைய பாரம்பரிய வாழ்க்கையில் விவசாயம் தான் அடிப்படையாக இருந்தது.
“வேலை என்பது வழிபாடு” – இது சொல்லப்பட்டிருக்கிறது, இது தான் இங்கே வேலை, “சிவதொண்டன்” என்ற பெயரில் குறிப்பிடுவது போல் “சிவா” என்பது கடவுளின் பெயர், “தொண்டன்” என்பது “வேலைக்காரன்” என்ற பொருளும் “அடியார்” என்ற பொருளும் உள்ளது. எனவே “சிவதொண்டன்’” என்பது கடவுளின் “அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன்” அல்லது கடவுளுக்கு சேவை செய்யும் ஓர் சேவையின் பணி என்பதாகும்.
இதன் நோக்கம் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் நீங்கள் பற்றற்ற நிலையில் இது கடவுளுக்காக செய்யும் வேலை என்று செய்ய வேண்டும், முடிவுகளை கடவுளிடம் விட்டுவிட வேண்டும் – “வேலை வேலையின் பொருட்டு”.
இது ஒரு புதிய யோசனை அல்ல, பகவத்கீதையில் கூறப்பட்டதன் சாரம். நீங்கள் இதனைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் பின்னர் வாசித்த பின்பு உணருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இச்சுருக்கமான விளக்கத்திலிருந்து நீங்கள் எவ்வளவு புரிந்துகொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் இது உங்களுக்கு கோட்பாட்டளவில் தெளிவற்றதாகத் தோன்றலாம் என்று நான் நினைக்கின்றேன். இங்கும் இது உள்ளது, இதனால்தான் இன்னும் எந்த இளைஞரும் இம்முயற்சியில் பங்கேற்க முன்வரவில்லை. அவர்கள் வாழ்வதற்கு கட்டிடம் உள்ளது மற்றும் நிலமும் உள்ளது – இந்த மாவட்டத்திலே சிறந்தது.
தற்போது நாங்கள் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு விவசாயம் செய்கிறோம். ஆனால், அதுவும் நல்லது, இக்காலகட்டத்தில் நாம் தேவையான அனுபவத்தைப் பெறுகிறோம். முதலில் நல்ல விவசாயிகளாக மாறக் கற்றுக் கொள்கிறோம். சரியான நேரத்தில் சரியான இளஞர்கள் வருவார்கள். அது மிகவும் நன்றாக இருக்கும். ஒரு காரணத்திற்காக அல்லது மற்றொரு காரணத்திற்காக அவர்கள் வராமல் இருக்கலாம். அதுவும் மிகவும் நன்று. ஏன் என்றால் எங்கும் தவறுதல் நடக்க முடியாது.
உ
சிவமயம்
5.5 சேர் பீட்டர் ராம்ஸ்போத்தம் (Sir Peter Ramsbotham) உடைய அஞ்சலி
23-12-2004
ஜேம்ஸ் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் (James Herwald Ramsbotham)
பீட்டர் ராம்ஸ்போத்தம் (Peter Ramsbotham) உடைய அஞ்சலி 23-12-2004
நாங்கள் என் சகோதரர் ஜிம் (Jim) ஐ வழியனுப்பி வைக்க வந்துள்ளோம். அவர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் கழித்தார். எப்பொழுதும் எங்கள் குடும்பத்துடனும், குடும்பத்திலுள்ள வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த வர்களோடும் அவர் அன்பான உறவை வைத்திருந்தார். உங்களில் சிலர் அடிக்கடி அவரைச் சந்திக்காமல் இருந்திருந்தாலும், அவருடைய அன்புத் தன்மையும், விசுவாசமும், அவரது கருணையையும் அரவணைப்பையும் நீங்கள் அறிவீர்கள்.
எனவே நான் அவர் இலங்கைக்கு செல்வதற்கு முன் அவருடைய ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் அவர் சுமார் முப்பது ஆண்டு காலம் வாழ்ந்தார், வேலையும் செய்தார். பின் அவர் 1983ஆம் ஆண்டில் திரும்ப இங்கிலாந்து வந்து Ovington இல் என்னுடன் தங்கியிருந்தார்.
எனக்கும் என் சகோதரி ஜோன் (Joan) க்கும் அவர் எப்பொழுதும் ஒரு நல்ல வழிகாட்டியாக மூத்த சகோதரராக இருந்தார் – எங்கள் வாழ்க்கையில் அவருடைய வசீகர சக்தி தொடர்ந்து எம்மை ஆட்கொண்டது.
நாங்கள் மூவரும் பாலர்பள்ளி நாட்களிலிருந்து மிக நெருங்கிய உறவோடு, அற்புதமான பெற்றோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம்.
எங்கள் மூவருக்கும் இடையில் இரண்டு ஆண்டுகள் வித்தியாசம் நான் எப்பொழுதும் சிறிது பின்தங்கியிருப்பேன், ஜிம் எப்பொழுதும் இயற்கையான தலைவராகவும் அவருடைய விசுவாசமுடைய சகோதரியுடனும் இருப்பார். அவர் விடுமுறை நாட்களில் (Boarding School) பள்ளியிலிருந்து திரும்பி வரும் வரை எங்களது சகோதரி என்னுடன் மகிழ்ச்சியாக விளையாடுவார், ஜிம் வந்ததும் நான் அவவுடன் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் அவர் நாலரை வயது மூத்த பரிசுத்தமான தைரியமான வேடிக்கையான மூத்த சகோதரர்.
நாங்கள் Kingswood இலும் Lindisfarne இலும் படுக்கை அறைகளைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் கிராம வீடுகளை நன்றாகப் பரிசோதனை செய்யும் பொருட்டு உல்லாசமான, அபூர்வமான பயணங்களை மேற் கொண்டோம்.
1938ஆம் ஆண்டு பிரான்ஸ் (France)இல் என்னுடன் இருக்க வந்தார், அப்பொழுது எனக்கு 18 வயதாக இருந்தது. நான் ஒரு 5hp திறந்த Citroen காரை வாங்கினேன் – ஒரு sabot. நாங்கள் Burgundyக்கும் Auvergn க்கும் சுற்றுப் பயணம் செய்தோம். புராதன இடைக்கால தேவாலயங்களைப் பார்க்கச் சென்ற பொழுது இடைஇடையே சுவையான உணவும் உள்ளூர் திராட்சை ரசத்தையும் சுவைக்கத் தக்கதாக wine (வையின்) இருந்தது.
எங்கள் மூவரின் நெருங்கிய உறவு, ஏற்பட்ட பிரிவுகளாலும், உலகப் போரின் போதும் ஒரு பங்கம் வராமல் பலமாக இருந்தது. பின் சில காலம் பிரிந்து இருந்தோம். இலங்கையில் ஜிம் அமெரிக்காவில் ஜோன் (Joan), வெளிநாட்டுச் சேவையில் பணியாற்ற நான் வெளிநாடுகள் சென்றிருந்தேன்.
இந்த நிலைமை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களுடைய வாழ்க்கைகளைப் பற்றியும் எங்களுடைய எண்ணங்களைப் பற்றியும் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுவோம்.
ஜிம் (Jim) முக்கும் ஜோன் (Joan) க்கும் இடையே ஆன்மீக மற்றும் ஆத்மீக விஷயங்களில் தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்து இருந்தது. அது ஜிம் (Jim) முடைய எதிர்கால வாழ்க்கையின் அடையாளமாகவும் வடிவமாகவும் மாறியது.
அவரது இருபது வயது முதல் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் வழக்கமானதாகவும் இருந்தது என்று கூறலாம். அவருக்குத் தேவையான அனைத்தும் குடும்பப் பின்னணியும் இருந்தது. நல்ல மனமும் நண்பர்கள் மற்றும் அபிமானிகளை வெல்லும் இயல்பான திறனும் அவரிடம் இருந்தன. ஏற்கனவே Eton இல் புகழ் பெற்றவராகவும் – உடல் ரீதியாக வலுவானவராகவும், விளையாட்டுத்துறைகளில் spursகளை வென்றவராகவும் இருந்தார். பள்ளியில் House Captain ஆகவும் உண்மையில் அந்த நாட்களில் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாகச் செய்யும் Eton னைச் சேர்ந்தவராக இருந்தார்.
Oxford டில் புத்திசாலி மற்றும் நகைச்சுவையான Magdalen கலாசார தோழர்களின் குழுவில் அதே கலா சார ரீதியாக முதிர்ந்த மற்றும் நன்கு இணைக்கப்பட்ட ஒருவராக இருந்தார் – ஒரு வகையான (Elitism) உயர்ந்த நிலை என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், சந்தசுவாமிகள் அவருடைய அமைதியற்ற வாழ்க்கை முறைகளை குறைந்த சம்பிரதாய கோட்பாடுகளுக்கு இணங்க ஏற்கனவே தேடிக் கொண்டார்.
அவர் எல்லாவற்றையும் விளங்குவதற்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று கருதி (Philosophy) தத்துவத்தைப் படிக்கத் தீர்மானித்தார். ஆனால் அவரது கேள்விகளுக்கான பதிலை அங்கு அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் தேடலில் அவருடைய நண்பர்களுக்கு எவ்வித ஆர்வமும் இருக்கவில்லை என்பதை அவர் பொருட்படுத்தி கவலைப்படவில்லை.
அவர் ஜேர்மனியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு குறிப்பிட்டத்தக்க ரஷ்ய ஆசிரியரைப் பின்பற்றி வந்த ஒரு குழுவுக்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடன் அவர்கள் செய்த வேலை இரகசியமாக வைக்கப்படவேண்டும். – மறைபொருள் பண்புகளைக் கொண்டது.
அது சிந்தனை நடைமுறை வழிகளையும் மற்றும் விழிப்புணர்வு சுய அவதானிப்பு மூலம் ஒரு உள்ளே முரண்பாடான egos சையும் வழங்கியது. மேலும் இடை விடாத தவறான கற்பனைகளையும் அடையாளம் காட்டுவதற்கும் வழி வகுத்தது.
அந்த முறைகளின் துல்லியமான தேவைகளைப் பின்பற்றுவதால் அவர் தனது வாழ்க்கை முறையை மாற்றினார். இவ்வேளையில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவதற்காக ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
உலகப்போர் நடந்த பொழுது இவர் Oxford டிலுள்ள நண்பர்களுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள காவலர் பிரிவில் இணைவதற்குப் பதிலாக ராயல் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் என்ஜினியராக (Royal Electrical and Mechanical Engineers) உடன் கையெழுத்து இட்டுத் தொழில்முறை நுட்பங்களில் விரைவாகத் தேர்ச்சி பெற்றார், இதனால் இவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டு அங்குள்ள குழுக்களுடன் தனது பணியைத் தொடர்ந்தார்.
உலகப்போர் முடிவில், இவர் தனது ஆசிரியருடன் அமெரிக்காவிற்குச் சென்றார். பின் அவரை மீள இங்கிலாந்துக்
கு அழைத்து வந்தார், இங்கிலாந்தில் அவரது ஆசிரியர் காலமானார்.
ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் தொடர்ந்து குழுக்களை அதே வழியில் வழிகாட்டியும் கற்பித்தும் வந்தார். இவர் தனது மனைவி அன்தீனா (Anthena) வை இப்படித்தான் சந்தித்தார். அன்தீனாவும் அவரது தாயாரும் இவருடைய போதனைகளால் கவரப்பட்டனர்.
ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் அன்தீனாவுடன் தனது பல நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் பகிர்ந்து கொண்டு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
பின்னர் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அதிர்ச்சி விழுந்தது. 1949ஆம் ஆண்டு அவர்களின் திருமணம் முடிந்து ஒரு வருடத்தின் பின்னர் அவருடைய மனைவி Anthena வுடைய பிரசவத்தின் போது தனது மகனுடன் Anthena காலமானார். ஜிம் (Jim) மிகவும் மனம் நொந்து போனார். அவர் அதைத் தடுத்திருக்கலாம் என்ற குற்ற உணர்வை அவர் சுமந்து சென்றார் என்று நான் நினைக்கிறேன்.
இது நடந்த சில காலத்தின் பின் நான் 1953 ஆண்டு என் குடும்பத்துடன் (ஐ.நா. பிரதிநிதி உத்தியோகத்திற்காக) New York சென்றுவிட்டேன். அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் தான் கிரேக்க Orthodox (வைதீகமான) தேவாலயத்தில் இணையப் போவதாகவும் தனக்குக் குறிப்பிட்ட சில புத்தகங்களை அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
அவர் ஏற்கனவே பல முறை அத்தோஸ் மலைக்கு (Mt.Athos) சென்றுள்ளார். கிரேக்க வைதீகமுறையில் கிரியைகள் இவருடைய நண்பரான கௌரிபாலா ஜேர்மன் சுவாமி ஊடாக ஜேம்ஸ் ராம்ஸ்போத்ததிற்கு யோகசுவாமிகள் ஒரு செய்தியை அனுப்பினார்.
அவர் மறு நாள் நடக்க இருந்த சடங்கை நிறுத்துவதற்கு யோகசுவாமிகளின் செய்தி போதுமானதாக இருந்தது. அவர் இம் மதநம்பிக்கையின் திசையைக் கைவிட்டு “உண்மையை” அறியவும் உண்மையான நம்பிக்கைக்கான வழிகாட்டலுக்காகவும் தனது தேடலைத் தொடர இலங்கைக்குச் சென்றார்.
அவரது அடுத்த கட்டமான நீண்ட காலமான வாழ்க்கை இலங்கையில் இருந்தது. – அவ்வப்போது எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பார்க்க இங்கிலாந்திலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். கடிதங்கள் மூலமான தொடர்பு எப்பொழுதும் இருந்தது. சிவா ஈஸ்வரன், என் சகோதரருக்கான அஞ்சலியைச் செலுத்தும் போது, அவர் இலங்கையில் கழித்த ஆண்டுகளைப் பற்றியும், அவர் யோகசுவாமிகளிடம் இருந்து கற்றுக்கொண்ட அவரது பாடல்கள் மற்றும் அருள்மொழிகள், மற்றும் ஜிம் (Jim) வேலை செய்து கொண்டு யோகசுவாமிகளின் கற்பித்தலையும் ஜிம் (Jim) உடைய வாழ்க்கையில் முக்கியமாக யோகசுவாமிகளால் செய்யும்படி பணித்த வேலைகளைப் பற்றியும் எங்களிடம் கூறுவார் என்பதை நான் அறிவேன்.
1982ஆம் ஆண்டு இறுதியில் என் மனைவி Frances திடீரென இறந்த போது என்னையும் எனது சகோதரி Joan ஐயும் நீண்ட காலம் யாழ்ப்பாணத்தில் தங்குவதற்காக அழைத்தார். என்னுடைய சோகத்திற்கு ஒரு சிறப்பு ஆறுதலாக இருந்த அந்த நாட்கள் ஒரு மறக்கமுடியாத நாட்களாக இருந்தன. அப்பொழுது தான் நாங்கள் மூவரும் கடைசி முறையாக நெருக்கமாக இருந்த காலமாகும்.
வடக்கில் தமிழர் கிளர்ச்சி அதிகரித்த பொழுது ஜிம் (Jim) இனி இங்கிலாந்திற்கு வருவது சரியானது என்று உணர்ந்தார். இரண்டு ஆண்டுகள் நானும் சைடா (Zaida) வும் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஜிம் (Jim) மும் நானும் East Laneஇல் ஒன்றாக வாழ்ந்தோம். நான் சமையல் வேலைகளைச் செய்தேன் அவர் பாத்திரங்களைக் கழுவுவார்.
ஒவ்வொரு மாலையிலும் நாங்கள் கடவுளுடைய பிரார்த்தனைகளைப் பற்றிய அவரது எழுத்து வேலைகளைத் தொடர்ந்து பதிப்புக்கு தயார் செய்து வந்தோம். “ஒரு மறுசரணடைவு” (A Recapitulation ) என்ற தலைப்பில் – இந்த புத்தகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை அவரும் ஜோன் (Joan) னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன் கடிதப் போக்குவரத்து மூலம் தொடங்கினர், பின் என்னுடன் Bermuda வில் இருந்த போதும் இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.
ஒரு மறுசரணடைவு” (The Recapitulation) மட்டுமே அவர் ஒரு பரந்த வாசிப்புக்கு முன் வைக்க விரும்பிய ஒரே படைப்பு. நாங்கள் இந்தப் புத்தகத்தை 1985ஆம் ஆண்டு Alresford Press மூலம் அச்சிலிட்டோம். Element Booksமூலம் விநியோகிக்கப்பட்டது. மேலும ஜிம் (Jim) உடைய வற்புறுத்தலின்படி உண்மையான அவரின் தனித்துவம் மறைக்கப்பட்டு J.P.Ross என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
J – Joan, P – Peter, R – Ramsbotham, O-O’Grady, S- Soulbury, S – Scripsunt.
கிறிஸ்டோபர் பிரில் (Christopher Brill) என்பவர் ஜிம் (Jim) உடைய “கடவுளுடைய பிரார்த்தனை” யில் ஜிம் (Jim) மின்னுடைய சிந்தனையின் சாரத்தைப் பற்றி விவரித்தார், அதில் அவர் அது ஒரு ஆழமான அர்த்தத்தில் ஒரு சரியான கிறிஸ்தவரின் மனநிலை அல்லது அணுகுமுறை பற்றியது. நாம் உண்மையிலேயே இந்த முறையான பிரார்த்தனையைத் தழுவி பின்பற்றமுடிந்தால், அது நம் எண்ணங்களுக்கு ஒரு புதிய திசையைக் கொடுக்கும், மற்றும் சுவிசேஷ (Gospel) போதனையின் முழு நோக்கத்தையும் உருவாக்கும் என்கிறார்.
ஜிம் (Jim) எங்கள் சமுதாயத்திற்கு உதவியான பிரார்த்தனையை திரும்ப பிடித்துக்கொள்ள ஆவல் கொண்டார்.
அவருடைய சுவிசேஷங்கள் (Gospels) பற்றிய ஆழ்ந்த அறிவு அவரது ஆராய்வதற்கு மிகவும் உதவியது, அத்துடன் கிறிஸ்தவ மாய எழுத்துக்கள், யூத, புத்த, இந்து, மற்றும் சூஃபி மரபுகள், மதங்களுக்கிடையிலான தடைகள் பற்றிய செய்திகளும் உதவின. ஆனால் இவையனைத்தும் இதை வாசிக்கும் வாசகர்களுக்கு கிறிஸ்துவின் மீதான பக்தியை தெளிவுபடுத்துவதற்கும், ஆதரவு அளிப்பதற்காகவும்தான்.
அவரது கடைசி 20 ஆண்டுகளில் (எங்கள் திருமணத்திற்குப் பிறகு) ஜிம் (Jim) எங்கள் தோட்டத்தில் ஒரு சிறிய வசதியான குடிசையில் (அவரது ஆசிரமத்தில்) இருந்து அவரது வேலைகளைச் செய்து வந்தார். அங்கு அவர் தன்னிடம் வந்து அறிவுரைகளைக் கேட்கக்கூடியவர்களால் பார்வையிடப்பட்டார். அவர்களுக்கு அவர் தனது அனுபவத்திலிருந்து வந்த விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் வாசிப்புக்கள் ஆகியவற்றிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மெரிடித் (Meridith), ஒலிவர் (Oliver) களுக்கு மிக முக்கியமாக தான் என்ன ஆனார் என்பதைக் காட்டினார் – அவரது நிலை. இது அவருடைய வாழ்க்கையை மாற்றியது. ஜிம் (Jim) இந்த நிலையில் அவர் இவ்வளவு காலமும் எதைத் தேடிக் கொண்டிருந்தாரோ அதை தனக்குள் உணர்ந்தார் – இது Maeterlink’s story of blue Bird” கதையைப் போன்றது.
சில நேரங்களில், அவர் தீர்மானம் மற்றும் பணிவு ஆகியவற்றின் நற்பண்புகளை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் என்று நான் நினைத்தேன். அவரால் தவறான பிடிவாதத்தில் இருக்க முடியும் (உதாரணமாக மருத்துவர்களைப் பார்க்க மறுத்தல்), ஆனால் ஆழமான தாழ்மையான தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களைப் பற்றிப் பேச விரும்பாமல் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம் அவர் பெற்ற போதனைகளின் அடிப்படையில் பதிலளிக்க விரும்பினார்.
அவர் ஜோன் (Joan), ராபட் (Robert) உடன் அவர்களின் Devon னிலும் Bath க்கு அருகில் உள்ள அழகான வீடுகளில் கழித்த நாட்கள் அவருடைய மகிழ்ச்சிகரமான நாட்களாக இருந்தன. அவர் அவர்களோடு இணைந்து இருப்பதை விரும்பினார்.
அவர் மக்களின் மத்தியில் இல்லாமல் தனது ஆசிரமத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தார்.
அவர் காது கேளாதவர், ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பாதைகளின் வழியாக தனது தினசரி நடைப்பயணங்களை மேற் கொள்ளும் பொழுது அவரை ஒரு நோக்கமுள்ள மனிதராகக் அக்கிராமத்திலுள்ள பலரால் பாராட்டப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக அவரது வாழ்வின் கடைசி ஆறு ஆண்டுகள் பக்கவாதத்தால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் Alresford முதியோர் இல்லத்தில் நன்கு பராமரிக்கப்பட்டார். குறிப்பாக சிவா ஈஸ்வரன் ஒரு அற்புதமான மற்றும் நிலையான பார்வையாளராக அவரது அனைத்துத் தேவைகளிலும் அவருக்கு உதவினார். எனவே அவர் அமைதியாகவும் நிம்மதியாக காலமானார்.
–
நான் அவரை மிகவும் நேசித்தேன். அவரது நீண்ட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் பொழுது, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கற்றுக்கொண்ட ஒரு கவிதையை நான் இங்கு நினைவுகூர்கிறேன் – எனக்கு இதை எழுதியவரைத் தெரியாது.
எதுவும் போதாது,
இல்லை, எங்கள் அனைத்தும் செலவிடப்படுகிறது,
இதயத்தில் தீவீர காதல்,
ஆன்மாவின் முழு நோக்கம்,
எங்கள் உணரக் கூடிய அனைத்தும்,
எங்கள் மூளையால் கண்டுபிடிக்ககூடிய அனைத்தும்,
ஆயினும் முறையீடுகளுக்கு அப்பாற் பட்டது,
இன்னும் மிகச் சிறந்தது,
விலைமதிப்பற்ற தேவையானது,
மனிதனுக்குத் தேவையானவை,
ஒரு போதும் நிலையானதாக இருக்காது,
நீங்கள் நெருப்பாக இருக்கும் வரை,
எதுவும் போதாது,
இது அவரது சமாதியில் எழுதப்படலாம்.
100 யோகசுவாமி



