உ
சிவமயம்
5.3 சந்தசுவாமிகள்

இயற்பெயர்: மதிப்பிற்குரிய ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் (Hon. James Ramsbotham)
பிறந்த திகதி: 21-03-1915
கல்வி : Eaton College (Winsorக்கு அருகில்) Berkshire, England. தனது பள்ளியின் இல்லத்தில் இவர் தலைவராக (Captain) இருந்தவர்.
Eaton College இலிருந்து அவர் Magdalene college, Oxford University க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் லண்டன் நகரத்திலுள்ள ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஒன்றில் உத்தியோகம் பார்க்கத் தொடங்கினார்.
Oxford இல் இவர் Magdalene கலாசார ரீதியாக முதிர்ச்சியடைந்த, புத்திசாலித் தனமான மற்றும் நகைச் சுவையான தோழர்களின் குழுவில் இருந்தார். ஒரு வகையான ஆதிக்கம் கொண்ட குழு.
சந்த சுவாமிகள் அவருடைய அமைதியற்ற வாழ்க்கை முறைகளை குறைந்த சம்பிரதாய கோட்பாடுகளுக்கு இணங்க ஏற்கனவே தேடிக் கொண்டார்.
அவரது கேள்விகளுக்கான பதில்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் அவர் தனது ஆராய்ச்சியைத் தொடங்க முற்பட்டார். தன்னைப்போல் உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாதவர்களை அவர் பொருட்படுத்துவதில்லை.
ஆன்மீக அறிவைத் தேடுபவராக அவர் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்தார். அவர் ஜேர்மனியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு குறிப்பிடத்தக்க ரஷ்ய ஆசிரியரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு குழுவிற்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர்களின் வேலைகள் இரகசியமாக வைக்கப்பட்டன, ஏனெனில் அது அந்தரங்கமான தன்மையில் இருந்தது.
அவர் கைப்பற்றிய வாழ்க்கை முறை பயிற்சிக்குரிய உலக அனுபவம் உள்ள சிந்தனை வழிவகைகள், நடத்தை, மற்றும் தெரிந்த முரட்டுத் தன்மை, அபிப்பிராயம், மற்றும் முரண்பாடு உள்ள தற்பெருமையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அறிவும் மற்றும் தன்னுள் அடங்கிய எண்ணிற்கடங்காத கற்பனை அடையாளம் காணல் முதலிய தன்மையுடையன.
அவர் தேடிக்கொண்ட முறைகளை துல்லியமாகப் பூர்த்தி செய்வதற்கு தன் வாழ்க்கை முறைகளை மாற்றினார். தனது முழுக்கவனத்தையும் அவர் கைப்பற்றிய முறைகளைப் பின்பற்றுவதற்காக ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தை விட்டு விலகினார்.
உலகப்போர் ஆரம்பமான பொழுது இவர் Oxford டிலுள்ள நண்பர்களுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள காவலர் பிரிவில் இணைவதற்குப் பதிலாக ராயல் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் (Royal Electrical and Mechanical Engineers) உடன் இணைந்து தனது தொழில்முறை நுட்பங்களில் விரைவாக தேர்ச்சி பெற்றார், இதனால் இவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டு அங்குள்ள குழுக்களுடன் தான் கைக்கொண்ட பணியைத் தொடரும் வாய்ப்பு இருந்தது.
உலகப்போர் முடிவில், இவர் தனது ஆசிரியருடன் அமெரிக்காவிற்குச் சென்றார். பின் அவரை இங்கிலாந்துக்கு மீள அழைத்து வந்தார், இங்கிலாந்தில் இவரது ஆசிரியர் காலமானார்.
ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் தொடர்ந்து குழுக்களை அதே வழியில் வழிகாட்டியும் கற்பித்தும் வந்தார். இவர் தனது மனைவி அன்தீனா (Anthena)வை இக்குழுக்களில் சந்தித்தார். அன்தீனாவும் அவரது தாயாரும் இவருடைய போதனைகளால் கவரப்பட்டனர்.
ஜேம்ஸ் ராம்போத்தமும் அன்தீனாவும் தமது பல நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
1949ஆம் ஆண்டில் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபின் அவரது மனைவி அன்தீனா பிரச வத்தின் போது பிறந்த மகனுடன் காலமானார்.
1950ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் இலங்கை சென்றார். இதன் போது, அவர் யாழ்ப்பாணத்திலுள்ள செல்வச்சன்னிதியில் ஓர் ஆசிரமத்தை அமைத்திருந்த அவருடைய நண்பர் ஜேர்மன் சுவாமி கௌரிபாலாவுடன் சில காலம் தங்கியிருந்தார்.
1953ஆம் ஆண்டு ஜேம்ஸ் ராம்போத்தத்தை ஜேர்மன் சுவாமி கௌரிபாலா ஆளுநர் (Governor General) ஜெனரலின் மகன் என்று யோகசுவாமிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரை யோகசுவாமிகள் வரவேற்று “நான் தான் உங்களுக்கு ஆளுநரும் ஜெனரலும்” (I am your Governor and General) என்று கூறியுள்ளார்.
1955ஆம் ஆண்டு ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள மார்க்கண்டு சுவாமிகளைப் பார்க்கச் சென்றார். இக்காலகட்டத்தில் ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் செல்வச்சன்னிதி (வடக்கு இலங்கை) பெயர்போன முருகன் கோவில் உள்ள கதிர்காமம் (தெற்கு இலங்கை) போன்ற இடங்களுக்குச் சென்று தங்கியுள்ளார்.
1957ஆம் ஆண்டு ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அவர் கிரேக்க வைதீகமான தேவாலயத்தில் இணைவதற்கு வழிகளைக் கைக்கொண்டார். அவர் ஏற்கனவே பல முறை அத்தோஸ் மலைக்கு (Mt.Athos) சென்றுள்ளார். கிரேக்க வைதீகமுறையில் கிரிகைகள் நடைபெறுவதற்காக இருந்த முதல் நாள் இவருடைய நண்பரான கௌரிபாலா ஜேர்மன் சுவாமி ஊடாக ஜேம்ஸ் ராம்போத்தத்திக்கு யோக சுவாமிகள் ஒரு செய்தியை அனுப்பினார். இவர் அடுத்த நாள் நடைபெற இருந்த கிரிகைகளை நிறுத்துவதற்கு யோகசுவாமிகளின் செய்தி போதுமானதாக இருந்தது. அவர் இந்த மதநம்பிக்கையின் திசையைக் கைவிட்டு “உண்மையை” அறியவும் உண்மையான நம்பிக்கைக்கான வழிகாட்டலுக்காகவும் தனது ஆராய்ச்சிப் பாதையை தொடர்ந்து இலங்கைக்குச் சென்றார்.

ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் கொழும்புத்துறை ஆசிரமத்தில் உள்ள யோகசுவாமிகளிடம் திரும்பி வந்த பொழுது யோகசுவாமிகள் அவரிடம் “லண்டனில் கடவுள் இல்லையா?” என்று கேட்டார். ஜேம்ஸ் ராம்போத்தத்திற்கு யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் தங்குவதற்கான ஒழுங்குகளை யோக சுவாமிகள் செய்தார். இவர் சிவதொண்டன் நிலையத்தில் தியானம் செய்து கொண்டு சில காலம் தங்கியிருந்தார்.
1959 – ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் இங்கிலாந்துக்கு திரும்பினார்.
1960 – ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் இலங்கைக்கு மீண்டார்.
.
1961 – யோகசுவாமிகளுக்கான சக்கரநாற்காலியை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்தார்.
30-12-1963 ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் யோகசுவாமிகளால் கொழும்புத்துறை ஆசிரமத்தில் பின்வரும் வார்த்தைகளைக் கூறி தீட்சையளிக்கப்பட்டார்: “இன்று முதல் நீங்கள் ஒரு சன்னியாசி, மற்றும் உங்கள் பெயர் சந்தசுவாமி”. இது நடந்த தினம் மார்கழி ஆருத்திரா தரிசனம் – திருவாதிரை நட்சத்திரம்.
யோகசுவாமிகளின் வழிகாட்டுதலின்படி ஈஸ்வரன் ஜேம்ஸ் ராம்போத்தத்திக்கு யோகசுவாமிகலால் சொல்லப்பட்ட கிரிகைகளையும் சமய சடங்குகளையும் செய்தார்.
இச் சடங்குகள் நடந்த பின் ஆசிரமத்தில் மதிய உணவிற்கு 10 அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
யோகசுவாமிகள் ஏற்கனவே 10 அடியார்களுக்கு உணவு தயாரிக்க ஒழுங்குகள் செய்திருந்தார்.
யோகசுவாமிகள் 23-03-1964 அன்று மகாசமாதி அடைந்தார்.
செங்கலடி சிவதொண்டன் நிலையத்திற்கான அடிக்கல் 1964ஆம் ஆண்டில் நாட்டப்பட்டது. இந்தச் சிவதொண்டன் நிலையம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நாள். 14-03-1965 அன்று யோகசுவாமிகளின் முதலாம் ஆண்டு மகாசமாதி ஆயிலிய நட்சத்திர தினம் ஆகும்.
13-03-1965 அன்று செங்கலடி சிவதொண்டன் நிலைய பிரதிஷ்டைக்காக திருவடி, யாழ்ப்பாணத்திலிருந்து சந்தசுவாமிகளால் எடுத்துச் செல்லப்பட்டு 14-03-1965 அன்று செங்கலடி சிவதொண்டன் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அந்நிலையத்தை நிறுவுவதில் சந்தசுவாமிகள் மிகவும் முக்கிய பங்கு வகித்தார். இது அவரது அயராத முயற்சிகளுக்கு ஓர் வாழும் நினைவுச் சின்னமாகப் பார்க்கப்படலாம்.
செங்கலடி சிவதொண்டன் நிலையம் சுற்றுப்புறத்தில் பூச்செடிகள், பழமரங்கள், காய்கறித் தோட்டங்கள், தோப்புக்கள், தென்னை மரங்கள், வயல்கள் மற்றும் பசு மந்தைகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து சிவதொண்டன் நிலையத்தில் நடைபெறும் தினசரி பூசைகளுக்குத் தேவையான பூசைப் பொருட்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
இங்கும் யாழ்ப்பாண சிவதொண்டன் நிலையத்தில் நடைபெறுவது போல் தினசரி பூசைகள், சிவபுராணம், திருமுறை, நற்சிந்தனைப் பாடல்கள், சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதல் ஆகியன நடைபெறுகின்றன.
ஒவ்வொரு மாதத்தில் வரும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை யோகா தினமாக குறிப்பிடப்பட்டு முக்கியமாக தியானம் அனுசரிக்கப்படும். இந் நாள் அங்கு வரும் பக்தர்கள் யாவருக்கும் பிரசாதம் வழங்கப்படுவதோடு யோகா நாள் நிறைவுபெறும்.
சிவதொண்டன் நிலையமானது சுயமுயற்சி, கடமை, மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் பாதையைப் பின்பற்றி வருவதற்கும் இளைஞர்களையும் முதியவர்களையும் இந்த தர்ம வழியில் ஊக்குவிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.
சுய ஒழுக்கத்தை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் நெற்பயிர் விவசாய முறைகளை கற்றுக் கொடுப்பதிலும் சந்தசுவாமிகள் ஈடுபட்டார்.
சந்தசுவாமிகள் சிவதொண்டன் நிலையத்திற்கு அருகில் ஓர் சிறிய ஆசிரமத்தை தான் தங்குவதற்காக கட்டினார்.
வயல்களில் இருந்து வரும் விளைபொருட்கள் தேவைப்பட்டோர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. சந்த சுவாமிகள் கிட்டத்தட்ட 14 வருடங்கள் (06-05-1977 வரை) செங்கலடியில் இருந்துள்ளார். இக் காலகட்டத்தில் அவர் யோகசுவாமிகளின் நற்சிந்தனையின் பெரும் பகுதியை “Songs and Sayings of Yogaswamy” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வேதாந்தம், சித்தாந்தம், யோகசாத்திரம், இந்துக்களின் பல நூல்கள், தமிழ் மொழிபற்றிய அவரது ஆழ்ந்த பற்றும் அவரது திறமையான அறிவு இந்த முயற்சியை முடிப்பதற்கு அவருக்கு உதவியன.
சந்தசுவாமிகள் செங்கலடியில் இருந்த பொழுது இங்கிலாந்தில் உள்ள இவருடைய மருமகன் செங் கலடியிலுள்ள சிவதொண்டன் பண்ணையின் நோக்கம் பற்றிக் கேட்ட பொழுது, அதற்கு இவர் விளக்கி எழுதிய கடிதம் பக்கம் 89இல் கொடுக்கப்பட்டுள்ளது.
1970ஆம் ஆண்டில் கொழும்புத்துறையில் சந்தசுவாமிகள் பெண்கள் ஆசிரமத்தைக் கட்டினார். இது பெண்களை சுயாதீனமான மற்றும் சுய-நிறைவான வாழ்க்கையை வாழ முயற்சிக்க உதவவும் அதேவேளையில் மத நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டில் சந்தசுவாமிகளின் தந்தை Viscount Soulbury காலமானார். இதன் பின் சந்தசுவாமிகள் Viscount Soulbury என்ற பட்டத்தை மரபுரிமையாகப் பெற்றுக்கொண்டார்.
1965ஆம் ஆண்டு சிவதொண்டன் சிறப்பு மலர் வெளியீட்டிற்கு யோகசுவாமிகளைப் பற்றி ஞாபகத்தில் வைக்க வேண்டிய சில கருத்துகளை அவர் வழங்குவதற்கு அவருடைய தமிழ் அறிவு அதற்கு உதவியது. அதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
“தனக்கு நிகரில்லாத இறைவனைப் பற்றி என்னால் வார்த்தைகளால் கூற முடியுமா?”
சந்தசுவாமிகள் கிழக்கு மாகாணத்தில் சிவதொண்டன் நிலையத்தை ஸ்தாபித்த பின் அவர் இச் சிவதொண்டன் நிலையத்தையும் மகளீர் ஆசிரமத்தையும் சிவதொண்டன் சபையாரிடம் ஒப்படைத்த பின் வைகாசி 6ஆம் திகதி 1977ஆம் ஆண்டு செங்கலடியை விட்டு வெளியேறினார். இந் நிறுவனங்கள் இன்றுவரை சிறப்பாக நடந்து வருகின்றன. சந்தசுவாமிகளின் அன்பும் அவருடைய விசுவாசமும் அவரின் சேவைகளை எமக்கு இதனூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.
மார்க்கண்டு சுவாமிகள் இங்கிலாந்தில் இருந்த சந்தசுவாமிகள் பற்றி விசாரித்தபடி இருந்தார். இந்த விசாரணைகள் சந்தசுவாமிகளை கைதடிக்குத் திரும்ப வைத்தது. 05-12-1978 அன்று சந்தசுவாமிகள் கைதடிக்கு மார்க்கண்டு சுவாமிகளிடம் வந்தார். மார்க்கண்டு சுவாமிகள் மகாசமாதி அடைவதற்கு முன்னர் அவருடைய கடைசி நாட்களில் தனது சேவைகளை இவரால் வழங்க முடிந்தது. 18-05-1984 அன்று சந்தசுவாமிகள் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.
மார்க்கண்டு சுவாமிகள் 29ஆம் திகதி வைகாசி 1984ஆம் ஆண்டு சமாதியடைந்தார்.
1984 – 1986
இங்கிலாந்துக்கு திரும்பியதும் சந்தசுவாமிகள் தனது சகோதரர் Sir.Peter Ramsbotham முடன் Ovington, Winchester இலுள்ள தனது பரம்பரைக் காணியில் தங்கியிருந்தார். Sir.Peter Ramsbotham 1986ஆம் ஆண்டு மறுமணம் செய்த போது அவர்கள் இருந்த அதே காணிக்குள் ஓர் சிறிய ஆசிரமத்தை தனது வசதிகளுக்கு ஏற்ற வகையில் கட்டமைத்து தனிமையாக வாழ்ந்து வந்தார்.
கடவுளின் பிரார்த்தனையின் மறு சரணடைவு” Recapitulation of Lords Prayers என்ற புத்தகத்தை சந்த சுவாமிகள் வெளியிட்டார். இது அவர் பரந்த வாசிப்புக்கு வைக்க விரும்பிய ஒரே படைப்பு.
இது 1985ஆம் ஆண்டு Alresford Press ஆல் அச்சிலிடப்பட்டது. Element Books இனால் விநியோகிக்கப்பட்டது. J.P.Ross என்ற பெயரில் உண்மையான அவரின் தனித்துவத்தை மறைக்கப்பட்டு இப்புத்தகம் வெளியிடப்பட்டது.
J – Joan, P – Peter, R – Ramsbotham, O- O’Grady, S- Soulbury, S – Scripsunt.
இம்முக்கியமான பிரார்த்தனையை மீண்டும் நம் காலத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று சந்த சுவாமிகள் விரும்பினார்.
|
அவருடைய கிறிஸ்தவ போதனைகளின் ஆழமான அறிவு இதற்கு உதவியது.
பிரிவுகள் மற்றும் மதங்களுக்கிடையிலான தடைகள் முழுவதும் – கிறிஸ்தவ, யூத, பௌத்த, இந்து மற்றும் சூஃபி மரபுகளின் புனிதமான எழுத்துக்களைப் பற்றிய நுண்ணறிவுடன் – கிறிஸ்து மீது அவர் கொண்ட பக்தியை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தவும் ஆதரிக்கவும்.
சந்தசுவாமிகள் இப்புத்தகம் வெளியிடுவதில் தனது குடும்பத்தின் பங்களிப்புக்கு முழு அங்கீகாரம் வழங்கினார். சந்தசுவாமிகள் தனது ஆசிரமத்தில் தனது வேலையில் மூழ்கி சாந்தமாக இருந்தார்.
கிராமத்தில் உள்ள பாதைகளின் வழியாகத் தனது தினசரி நடை பயணங்களில் மேற்கொள்ளும் பொழுது இவரை ஒரு குறிக்கோளுள்ள மனிதராக கிராமத்திலுள்ள பலரால் இவர் பாராட்டப்பட்டார்.
சந்தசுவாமிகள் தொடர்ந்து தனது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அந்த வேளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கும் பயணங்கள் செய்து வந்தார். அத்துடன் தான் எப்பொழுதும் தேடிக் கொண்டிருந்ததை அவர் தன் மனதில் உணர்ந்தார். அவர் தனது ஆசிரமத்தில் அமைதியாகத் தனது வேலையைச் செய்துகொண்டு சாந்தமாக இருந்தார். 1998ஆம் ஆண்டில் Cottage Nursing Homeஇல் அனுமதிக்கப்பட்டார்.
அப்புவுக்கு (யோகர்சுவாமிகள்) நான் இறுதி நாட்களில் செய்தசேவைகளையும் இவருக்கும் என்னால் வழங்க முடிந்தது.
நாங்கள் கிராமம் முழுவதும் மாலை நேரங்களில் காரில் தூரப் பிரயாணங்கள் செய்தோம், அதை அவர் மிகவும் விரும்பினார். 12-12-2004 அன்று மூலம் நட்சத்திரத்தில் சந்தசுவாமிகள் சமாதியடைந்தார். நான் அப்புவிடம் இருந்து கற்றுக்கொண்ட நற்சிந்தனைப் பாடல்களையும் சமஸ்கிருதப் பாடல்களையும் பாடி பின் Sir.Peter ருடன் அமர்ந்து சந்தசுவாமிகளின் இறுதிப் பயண ஒழுங்குகளை முடிவு செய்தோம். 30-12-1963 அன்று அவர் யோகசுவாமிகளிடம் இருந்து தீட்சை பெறும் பொழுது எப்படி இருந்தாரோ அதை ஒத்ததாக சந்தசுவாமிகளுடைய புனித உடல் 23-12-2004, 10.00 மணியிலிருந்து 10.45 மணி வரை தகனக் கிரிகைகளுக்குத் தயார் செய்யப்பட்டு சிவபுராணம், நற்சிந்தனை மற்றும் சமஸ்கிருதப் பாடல்களுடன் பிரார்த்தனை செய்யப்பட்டு Ovington, Alresford, Hampshire இலுள்ள குடும்ப தேவாலயத்தில் 11.30 A.M தொடக்கம் தேவாலய சேவைகள் நடத்தப்பட்டன. அதன் பின் Basingstoke, Crematorium, Hampshire இல் மாலை 3.45க்கு தகனம் செய்யப்பட்டது.
25-12-2004 காலை 7.30 மணிக்கு சந்தசுவாமிகளின் விருப்பத்தின்படி லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருடைய புனித அஸ்தி கரைக்கப்பட்டது.
Birmingham இல் வழக்கமான மாதாந்தர மூலம் நட்சத்திர நாட்களிலும் வருடாந்த குரு பூசைகளும் நடைபெறுகின்றன.