சுப்ரமுனிய சுவாமிகள்

Subramuniya Swamy (05/01/1927-12/11/2001).


சிவமயம்

5.2 சுப்ரமுனிய சுவாமிகள்

 

படம் 21: சுப்ரமுனிய சுவாமிகள் (05/01/1927 -12/11/2001)

சுப்ரமுனிய சுவாமிகள் 05-01-1927 அன்று Oakland, California, USA இல் பிறந்தார்.
இயற்பெயர்: ரொபேர்ட் கான்சன் (Robert Hansen)

1947ஆம் ஆண்டு தனது 20ஆவது வயதில் இந்தியாவிற்கும் 1949ஆம் ஆண்டு இலங்கைக்கும் பயணம் செய்தார்.

ரொபேர்ட் கான்சன் (Robert Hansen) கீழ் நாட்டு மற்றும் மேல்நாட்டு நடனப் பயிற்சியின் புலமையின் காரணத்தால் அவர் சான் பிரான்சிக்கோ (San Francisco) பாலே நிறுவனத்தில் சேர அனுமதி கிடைத்தது.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது 4 யோகா/தியான தொகுதிகளால் அவர் மிகவும் கவரப்பட்டார்:

ராஜ யோகம்
பக்தி யோகம்
கர்மா யோகம்
சுவாமி விவேகானந்தரின் ஊக்கம் வாய்ந்த பேச்சுக்கள்

அதிலும் குறிப்பாக சுவாமி விவேகானந்தரின் தலைசிறந்த கவிதையான “சன்னியாசியின் பாடல்” அவரின் மனத்தைக் கவர்ந்தது.

சுப்ரமுனிய சுவாமிகள் தனது 20ஆவது வயதில் முதல் வெளிக்கிட்ட கப்பலில் இந்தியாவிற்குப் புறப்பட்டார். கப்பலில் இருந்து கரைக்கு வந்து, மும்பாயில் (Bombay) உள்ள இந்தியாவிற்கான பிரமாண்டமான நுழைவாயில் வழியாக நடந்து செல்லுவதற்கு முன்பு, அவர் தனது 21ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இந்தியாவிலிருந்து இலங்கை சென்று பல பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்தார். அவர் அங்குள்ள துறவிகளால் வரவேற்கப்பட்டார். அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் மற்றும் எப்படி அவர்களது காவி உடையை அணிகின்றார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து இந்த அனுபவம் அவருக்குத் துறவற நெறிமுறையில் நாட்டத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் தனது சொந்த துறவறத்தில் முறைகளைக் கொண்டு செயல்பட்டார்.

ரொபேர்ட் கான்சன் (Robert Hansen) 1949ஆம் ஆண்டு வைகாசி விசாகம் அன்று கொழும்புத்துறை ஆசிரமத்தில் யோகசுவாமிகளைச் சந்தித்தார்.

யோகசுவாமிகள் ரொபேர்ட் கான்சன் (Robert Hansen) முதுகில் அறைந்து “இந்த சத்தம் அமெரிக்காவில் கேட்கும்! இனி நீங்கள் உலகம் முழுவதும் சென்று சிங்கம் போல் கர்ஜியுங்கள். நீங்கள் கோவில்களைக் கட்டி ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளிப்பீர்கள்” என்று அவருக்கு தீட்சை வைத்தார்.

யோகசுவாமிகள் அவருக்கு “சுப்ரமுனியா” என்று பெயரிட்டார். இந்நிகழ்வை கொழும்புத்துறை ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் கண்டுகளித்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டி என்னும் இடத்தில் ஸ்ரீ சுப்ரமுனிய ஆசிரமத்தைக் கட்டினார். 1949 இன் பிற்பகுதியில் அவர் அமெரிக்காவிற்கு மீண்டும் கப்பலில் சென்று 7 ஆண்டுகள் யோக தியானத்தில் ஆழ்ந்தார்.

1956ஆம் ஆண்டு கொலராடோ (Colorado) டென்வர் (Denver) இல் தனக்கு ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவம் கிடைத்ததாக சுப்ரமுனியசுவாமிகள் கூறினார். அங்கு “ஆன்மா உடல் இறுதியாக சரீர உடலுக்குள் முழுமையாக வசிக்கும்.”

1957ஆம் ஆண்டு சான் பிரான்சிக்கோ (San Francisco) இல் அவர் “இமாலயன் அகடமி” (HIMALAYAN ACADEMY) ஐ நிறுவினார். மேலும் அமெரிக்காவின் முதல் இக் கோவிலை 3575 செக்ரெமெண்டோ தெரு (Secremento Street) பிரெசிடியோ பூங்காவிற்கு (Presidio Park) அருகில் அமைத்து ஆராதனை செய்தார்.

அவர் 1957ஆம் ஆண்டு சான் பிரான்சிக்கோ (San Francisco) இல் 2 சமய நிலையங்களைத் தொடங்கினார். ஒன்று இந்து சமய சுப்ரமுனிய யோகா ஆணை என்றும் மற்றொன்று கிறிஸ்தவ யோகா தேவாலயம் (Christian Yoga Church) என்றும் கூறப்பட்டது.

கிறிஸ்தவ யோகா தேவாலயத்தில் (Christian Yoga Church) பொதுவான ஞாயிறு வழிபாட்டில் கிறிஸ்தவ பாடல்கள் பாடுவதும், இந்து நிலையத்தில் பகவத்கீதை அல்லது உபநிடதங்கள் ஆகிய ஆன்மீக சம்பந்தப்பட்ட பிரசங்கங்கள் செய்யும் முறைகளும் கைகொள்ளப்பட்டன.

1950ஆம் ஆண்டுகளில் மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் சுப்ரமுனிய சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தியோசபி (Theosophy) முதல் 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் புதிய யுக இயக்கம் (Metaphysical) வரையிலான ஓர் அமெரிக்க மெட்டாபிசிக்கல் (Theosophy) பரம்பரையில் இடம் பெறலாம்.

1970இல் சுப்ரமுனிய சுவாமிகள் தனது ஆசிரமத்தை ஹவாய் (Kauai) க்கு மாற்றினார். அழிந்துபோன எரிமலையின் அடிவாரத்தில் ஓர் ஆற்றங்கரையில் ஹவாய் ஆதீனத்தை ஆரம்பித்தார்.

ஹவாய் ஆதீனம் ஹவாய் தோட்டத் தீவில் (Hawaii’s Garden Island) உள்ள 458 ஏக்கர் கொண்ட இடத்தில் கோவிலைக் கொண்ட ஓர் துறவி மடம் அமைத்தார்.

1979ஆம் ஆண்டில் சுப்ரமுனிய சுவாமிகள் “இன்று இந்து சமயம்” பத்திரிகையை (Hinduism Today Magazine) ஆரம்பித்தார்.

1985ஆம் ஆண்டு அவர் கிறிஸ்மஸ் போன்ற மார்கழி விடுமுறைகளுக்கு ஒத்த பஞ்ச கணபதி (Panja Ganapathy) திருவிழாவை உருவாக்கினார்.

சைவசித்தாந்த திருச்சபையின் நிறுவனராகவும், தலைவராகவும், சைவக்குருக்களில் ஒருவராகவும் இவர் இருந்தார்.

1986ஆம் ஆண்டில் மொரிஷியஸ் (Mauritius) அரசாங்கம், அழிந்து வரும் இந்து மதத்தைப் புத்துயிர் கொடுக்க வருமாறு கேட்டதற்கு பதிலளிக்கும் வகையில் இவர் மொரிஷியஸ் (Mauritius)இல் ஓர் சமய கிளையை நிறுவினார்.

1986ஆம் ஆண்டு புதுடில்லி (New Delhi)யின் உலக மதங்களின் நாடாளுமன்றம், இந்து மதத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளுக்காக, உலக ஆசிரியர்கள் என்று பொருள்படும் ஐந்து நவீன கால ஜகதா சேடங்கள் (Jagada Chadems) இல் இவர் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டில் Oxford, England இல் ஆன்மீக மற்றும் பாராளுமன்றத் தலைவர்களின் உலகலாவிய மன்றத்தில் இந்து மதத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990ஆம் ஆண்டில் சைவமதம் உட்பட அனைத்து மத குருமார்களுக்கும் சமமான நியாயமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

1997ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியின் இந்துக் கண்ணோட்டத்தில் சமய நெறிமுறைகள் குறித்த மதக்கருத்துகளுக்கான அழைப்புக்கு சுப்ரமுனியசுவாமிகள் பதிலளித்துள்ளார்.

அவர் யோகசுவாமிகளின் 125ஆவது ஆண்டு நிறைவையும், உலகெங்கிலும் உள்ள 75க்கும் மேற்பட்ட இலங்கையர் கோவில்களில் மற்றும் சமூகங்கள் வழியாக அவரது உயர்ந்த மதிக்கத்தக்க முன் மாதிரியான தோற்றத்தை (Golden Icon) புலம்பெயர்ந்த மக்களின் யாத்திரைகளையும் முன்னின்று நடத்தியுள்ளார்.

2000ஆம் ஆண்டில் அவர் “ஓர் இந்துவாக மாறுவது எப்படி?” என்ற இந்து மத நம்பிக்கையில் நுழைவதற்கான வழியை காட்டி “நீங்கள் ஒரு இந்துவாக இருப்பதற்கு இந்துவாகப் பிறக்கவேண்டும் என்று அல்ல” என்ற கருத்தையும் காட்டியுள்ளார்.

2001ஆம் ஆண்டில் மூவாயிரம் பகுதிகள் அடங்கிய ஆழ்ந்த படிப்பை நிறைவு செய்தார். அதில் சிவனுடன் இணைந்து நடனமாடுதல், சிவனுடன் வாழ்தல், தத்துவ கலாசாரம் மற்றும் யோகா பற்றிய தினசரிப் பாடங்களுடன் சிவ வழிபாட்டு தொகுப்புகளும் உள்ளடங்கும்.

சுப்ரமுனிய சுவாமிகள் 12-11-2001ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரத்தில் சமாதியடைந்தார். அவரது புனித அஸ்தி ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட இடத்தில் கோவிலில் வைக்கப்பட்டது. கோவிலில் தினசரி பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சித்திரை நட்சத்திர நாட்களில் மாதாந்த பூசைகள் மற்றும் வருடாந்த சித்திரை குருபூசைகள் ஹவாய் ஆசிரமத்தில் நடை பெறுகின்றன.

ஹவாய் ஆசிரமத்தில் வருடாந்த ஆயிலியப் பூசைகளும் நடை பெறுகின்றன.